Advertisment

12 லக்னப் பலன்கள்...! 11 -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/12-laknam-benefits-11

மிதுன லக்னத்தில் பிறந்தவர் களின் 3-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

மிதுன லக்னம் 4-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத் தைக்கொண்டு வீடு, வாகன யோகம், தாய், கல்வி, சுக வாழ்வு, சொகுசு வாழ்வைப் பற்றி அறியலாம்.

4-ஆம் அதிபதி புதன், சுகக் காரகன் சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, பாவிகளின் பார்வை பெறாமல் இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று, துலா ராசியைத் தவிர மற்ற கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் சொந்த வீடு அமைவது மட்டுமின்றி, தந்தைவழி அசையா சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். 4-ஆம் அதிபதி புதன் சுபர் சேர்க்கை பெற்று குருவின் பார்வை பெற்றால் சுயமாக சம்பாதித்து வீடு வாங்கும் வாய்ப்பு அமையும். புதன், குரு, சூரியன், சுக்கிரன் வலுப்பெற்றிருந்தால் நவீனகரமான வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், சுகபோக வாழ்க்கை அமையும். புதன் தனித்து வலுப்பெற்றிருந்தால் மிகச்சிறப் பான பலனை அளிக்காவிட்டாலும் சொந்த வீடு, வாகன யோகத்தினை உண்டாக்கும்.

மிதுன லக்னத்திற்கு 4-ஆ

மிதுன லக்னத்தில் பிறந்தவர் களின் 3-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

மிதுன லக்னம் 4-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத் தைக்கொண்டு வீடு, வாகன யோகம், தாய், கல்வி, சுக வாழ்வு, சொகுசு வாழ்வைப் பற்றி அறியலாம்.

4-ஆம் அதிபதி புதன், சுகக் காரகன் சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, பாவிகளின் பார்வை பெறாமல் இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று, துலா ராசியைத் தவிர மற்ற கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் சொந்த வீடு அமைவது மட்டுமின்றி, தந்தைவழி அசையா சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். 4-ஆம் அதிபதி புதன் சுபர் சேர்க்கை பெற்று குருவின் பார்வை பெற்றால் சுயமாக சம்பாதித்து வீடு வாங்கும் வாய்ப்பு அமையும். புதன், குரு, சூரியன், சுக்கிரன் வலுப்பெற்றிருந்தால் நவீனகரமான வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், சுகபோக வாழ்க்கை அமையும். புதன் தனித்து வலுப்பெற்றிருந்தால் மிகச்சிறப் பான பலனை அளிக்காவிட்டாலும் சொந்த வீடு, வாகன யோகத்தினை உண்டாக்கும்.

மிதுன லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி புதன், 5-ஆம் அதிபதி சுக்கிரன் சேர்க்கை பெறுவது அற்புதமான அமைப்பாகும். ஒரு கேந்திராதிபதி, திரிகோணாதி பதி இணைவது மிகப்பெரிய ராஜயோகப்பலனை உண்டாக்கும்.

Advertisment

4-ஆம் வீடு சுக்கிரனுக்கு நீசவீடு என்றாலும், சுக்கிரனை ஒட்டியே சஞ் சரிக்கும் அந்த வீட்டின் அதிபதி புதன் உடன் இருந்தாலும், புதன் துலாத்தில் இருந்து சுக்கிரனும், புதனும் பரிவர்த் தனை பெற்றாலும் நீசபங்கம் உண்டாகும் என்பதால் சொந்தமாக வீடு, வாகனங்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

4-ஆம் அதிபதி புதன் தனக்கு நட்பு கிரகமான சனியின் சேர்க்கைப் பெற்று, கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்றால் பழைய வீடு, வாகனம், விவசாய நிலங்கள் போன்றவற்றை வாங்கி அனு பவிக்கும் வாய்ப்பு உண்டாகும். 4-ஆம் அதிபதி புதன் ராகு சேர்க்கை lagnamபெற்றாலும், 4-ல் சனி ராகு அமையப்பெற்றாலும், புதன் வக்ரம் பெற்றாலும் சொந்த வீடு, வாகனங்களை வாங்கி அனுபவிப்பதில் இடையூறு ஏற்படும். 4-ஆம் வீட்டிற்கும், 4-ஆம் அதிபதிக்கும் பாவிகள் சேர்க்கை, பார்வை இல்லாமல் இருந்தால் சுகபோக வாழ்க்கை அமையும். புதன், சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சுபர் பார்வையுடன் அமையப் பெற்றாலும், 4-ஆம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், 4-ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், சந்திரனுக்கு 4-ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

சந்திரன் சர்ப்ப கிரகங்களான ராகு-கேது அல்லது சனி சேர்க்கை, சாரம் பெற்றாலும் சந்திரனின் வீடான கடகத்தில் சனி, ராகு அமையப் பெற்றாலும் தாய்க்கு பாதிப்பு உண்டாகும். 4-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்களில் ஏதேனும் இரு கிரகங்கள் அமைந்து, 4-ஆம் வீட்டிற்கு சுபகிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் பிறந்தவுடன் தாயை இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

மிதுன லக்னத்திற்கு கல்விக்காரகன் புதனே 4-ஆம் அதிபதியாக விளங்குவ தால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று குரு சேர்க்கை, பார்வை பெற்று வலுவாக அமையப் பெற்றால் சிறப்பான அறிவாற்றல், மற்றவர்களை வழிநடத்தக்கூடிய ஆற்றல், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் திறன், கணிதம், கம்ப்யூட்டர், வணிகம் சம்பந்தக் கல்வியைக் கற்கும் வாய்ப்பு, ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் உயரிய கல்வியைக் கற்று கல்வித்துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதன்- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பொறியியல் தொடர்புடைய கல்வி, புதன்- சந்திரன், ராகு- கேது சேர்க்கை பெற்று வலுப்பெற்றால் மருந்து, மருத்துவத் தொடர்புள்ள கல்வி, புதன்- சூரியன், குரு சேர்க்கை பெற்றால் நிர்வாக சம்பந்த மான கல்வி, அரசுத்துறையில் பணிபுரி வதற்கான கல்வி, கணிதம் ஆடிட்டிங் தொடர்புடைய கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதன்- சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கட்டடக்கலை, வரை கலை, பொறியியல் தொடர்புடைய கல்வி அமையும்.

புதன்- சனி சேர்க்கை பெற்றால் தொழில்நுட்பம், விவசாயம் சார்ந்த கல்வி அமையும். புதன் பாவிகள் சேர்க்கை பெற்றோ, வக்ரம் பெற்றோ, 4-ல் பாவிகள் அமையப் பெற்றோ இருந்து, மேற்கூறிய பாவ கிரகங்களின் தசாபுக் திகள் கல்விபயிலும் வயதில் நடை பெற்றால் கல்வி கற்பதில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.

5-ஆம் பாவம்

5-ஆம் பாவத்தைக் கொண்டு அறிவுத் திறன், உயர்கல்வி, பூர்வீகம், புத்திர பாக்கியம் பற்றி அறியலாம்.

மிதுன லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சுக்கிரனும், கல்விக்காரகன் புதனும் பலம் பெற்று, குரு சேர்க்கை அல்லது பார்வை பெற்று 5-ல் பாவிகள் இல்லாமல் இருந்தால் நல்ல அறிவுத்திறனும் உயர்கல்வி ரீதியாக மேன்மையும் உண்டாகும்.

சூரியன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றோ, சுபர் பார்வையுடன் இருந்தால் பூர்வீகவழியில் சாதகமான பலன்களை அடையமுடியும். தந்தைக்காரகன் சூரியனுக்கு 5-ஆம் வீடு நீச ஸ்தானம் ஆகும். 5-ல் சூரியன் நீசம் பெற்றாலும், 5-ல் சனி, ராகு-கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் பூர்வீகவழியில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

மிதுன லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி பெண் கிரகமான சுக்கிரன் என்பதால், முதலிலில் பெண் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

5-ஆம் வீட்டில் குரு, செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுவுடன் அமையப் பெற்று, சூரியன் துலாத்தைத் தவிர மற்ற ஸ்தானங் களில் பலமாக இருந்து, பாவிகள் தொடர்பு இல்லாமல் இருந்தால் ஆண் குழந்தை பாக்கியம் அமையும்.

சுக்கிரன்- சந்திரன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பெண் குழந்தை அமையும். குரு- சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)

செல்: 72001 63001

bala150319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe