சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் 4-ஆம் பாவம் வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

5-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி, அறிவாற்றல் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.

aa

சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதி சூரியன். 5-ஆம் அதிபதி பாரம்பரியத்தைக் குறிக்கும் குரு. சூரியன், குரு சுபகிரகச் சேர்க்கையுடன் கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றால், பூர்வீகவழியில் சிறப்பான பலன் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், குரு, சூரியன் பலவீனமாக இருந் தாலும், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை மற்றும் சாரம் பெற்றாலும், பூர்வீக வழியில் அனுகூலமற்ற பலன் ஏற்படும்.

Advertisment

குரு- சூரியன், புதன் போன்ற கிரகச்சேர்க்கை வலுப்பெற்று அமையப்பெற்றால், கற்ற கல்வியால் மேன்மை, உயர்கல்வி மூலமாக அனுகூலமான பலன், நல்ல அறிவாற்றல் உண்டாகும்.

சிம்ம லக்னத்திற்கு 5-ஆம் வீடு புத்திர ஸ்தானம் மட்டு மின்றி, புத்திரகாரகன் குருவின் வீடாகவும் வருகிறது. 5-ஆம் வீட்டதிபதி குருவாக இருப்ப தால், இயற்கையாகவே புத்திர பாக்கியம் குறைவு. 5-ஆம் வீட்டதிபதி குரு- சூரியன், செவ்வாய் போன்ற கிரகச்சேர்க்கை பெற்று, கேந்திர, திரிகோண ஸ்தானத் தில் அமையப்பெற்றால், ஆண் குழந்தை யோகம் உண்டாகும். குரு ஆண்கிரக வீடுகளான மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனத் தில் அமையப்பெற்று, சுபகிரகச் சேர்க்கை பெற்றால், ஆண் குழந்தை யோகம் உண்டாகும். குரு தனித்து 5-ல் இருப்பதும், கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். குரு- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று, சந்திர கேந் திரத்தில் அமைந்திருந்தால், புத்திரவழியில் சிறப்பான பலன் உண்டாகும். மேஷம், தனுசுவில் சூரியன், செவ்வாய் அமையப் பெற்றால், ஆண் குழந்தை யோகம் உண்டாகும்.

புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப்பெற்று, குரு வலுவிழந்தோ, ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப்பெற்றோ இருந்தால், பெண் குழந்தை யோகம் உண்டாகும். புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சனி, ராகு, புதன் அமையப் பெற்றாலும், குரு வக்ரம் பெற்றாலும், புத்திர தோஷம் உண்டாகி குழந்தை யோகமில்லாத நிலை ஏற்படும். குருவின் வீடான தனுசு, மீனத் தில் பாவகிரகமான சனி, ராகு- கேது அமை வதும், புத்திரகாரகன் குரு நீசம் மற்றும் வக்ரம் பெறுவதும், சனி, ராகு- கேது சேர்க்கை பெறுவதும், கேதுவின் நட்சத்திரத்தில் அமை வதும் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

6-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக் கொண்டு, எதிர்ப்பு, ரோகம், கடன் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம். சிம்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டதிபதி சனி, லக்னாதிபதி சூரியனுக்கு பகைகிரகம் என்பதால், வாழ்வில் நிறைய எதிர்ப்புகளை சந்திக்கநேரிடும். சனி ஆட்சி, உச்சம்பெற் றாலும், தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், சுபர் பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருந்தாலும், எதிர்ப்பில்லாத நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். சனி பலவீனமாக இருந்தாலும், சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பகைமை உண்டாகும்.

6-ஆம் வீட்டை செவ்வாய் பார்வை செய்வதும், சனி பாவிகள் சேர்க்கை பெறு வதும் நல்லதல்ல. 6-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றால், பகைமை ஏற்பட்டாலும், அவற் றைத் திறனுடன் சமாளிக்கும் வலிமை உண்டாகும். லக்னாதிபதி சூரியனும் சனியும் இணைந்தால், பகை, விரோதம் அதிகமாகும்.

சனி- சந்திரன், ராகு சேர்க்கை பெற்றால், ரணகாயங்கள் உண்டாகும். சந்திரன், ராகு சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணத்தில் இருந்தால், அடிக்கடி உடல் பாதிப்புகள், மனக் குழப்பம், அலர்ஜி உண்டாகும். 6-ஆம் வீட்டில் குரு நீசம் பெறுவதால், குரு 6-ல் இருந்தால் வாயுத்தொல்லை, வயிறு பாதிப்பு உண்டாகும். சனி- குரு சேர்க்கை பெற்றால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவார்கள். சனி- சூரியன் சேர்க்கை பெற்று, உடன் பாவிகள் இருந்தால், உஷ்ண பாதிப்பு, ரத்த அழுத்தம் தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். சனியுடன் சந்திரன் சேர்க்கை பெற்று, உடன் ராகு அல்லது கேது இருந்தால், நீரால் பெரிய கண்டம் உண்டாகும். செவ் வாய்- சனி சேர்க்கை பெற்று, உடன் பாவிகள் இருந்தால், அரசாங்க தண்டனை, சிறைசெல்லும் சூழ்நிலை, வாகன விபத்தால் பிரச் சினை உண்டாகும். 6-ஆம் வீட்டையும் சனியை யும் குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தால், நல்ல ஆரோக்கியம் ஏற்படும்.

சனி- சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவிழந் திருந்தால், சர்க்கரை வியாதி, ரகசிய உடல் நிலை பாதிப்பு, பெண்களால் நிம்மதிக்குறைவு உண்டாகும்.

கடன்களுக்குக் காரகனான சனி 6-ஆம் வீட்டதிபதி என்பதால், குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று, வலுவுடன் காணப் பட்டால், கடன் பிரச்சினையின்றி நிம்மதி யான வாழ்க்கை அமையும். சனி, குரு பலவீனமாக இருந்தாலும், வக்ரம் பெற்றிருந் தாலும், கடன் பிரச்சினையால் நிம்மதி குறையும்.

7-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.

சிம்ம லக்னத்திற்கு 7-ஆம் அதிபதியான சனி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் (மேஷம் தவிர) அமையப் பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், சுபர் பார்வை யுடன் அமையப்பெற்றாலும் சந்தோஷ மான மணவாழ்க்கை உண்டாகும். சனி- குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகப் பார்வை பெறுவது, சுபர் வீட்டில் சனி அமையப் பெறுவது நல்ல அமைப்பாகும்.

சனி, சுக்கிரன் வலுப்பெற்றால் இளம் வயதிலேயே திருமணம், மனைவியால் சொத்து சுகம் சேரும் அமைப்பு உண்டாகும். சனி தனித்து வலுப்பெற்று, சுக்கிரனும் தனித்து அமையப்பெற்று 7-ஆம் வீட்டிலும், சந்திரனுக்கு 7-ஆம் வீட்டிலும் பாவிகள் அமையாமல் இருந்தால், சிறப் பான மணவாழ்க்கை உண்டாகும். சனி, சுக்கிரன் பாதிக்காமல் இருந் தால் கட்டில் சுகம் சிறப்பாக இருக்கும்.

சனி, சுக்கிரன் பலவீனமாக இருந் தாலும், பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 7-ல் ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், களத்திர தோஷ மாகும். 7-ஆம் வீட்டில் சூரியன்- செவ்வாய் இணைந்து அமையப் பெற்றாலும், சனி- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், கடுமையான களத்திர தோஷமும், இருதார அமைப்பும் உண்டாகும். 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றால், மணவாழ்வில் நிம்மதிக் குறைவு ஏற்படும். சனி, பாவிகள் சேர்க்கை பெற்று பலமிழந்திருந்தாலும், வக்ரம் பெற்றாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. சனி- சூரியன், கேது சேர்க்கை பெற்றால், மனைவி யால் நிம்மதிக்குறைவு ஏற்படும்.

சனி- சுக்கிரன், புதன், சேர்க்கை பெறு வது, குரு போன்ற சுபகிரகப் பார்வை பெறுவதன்மூலம் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். சிம்ம லக்னத் திற்கு 7-ஆம் அதிபதி சனி என்பதால், திருமணம் பெரும்பாலும் அந்நி யத்தில் நடக்கும். சனி- குரு, புதன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால், விரும்பியவரை மணம்முடிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

7-ஆம் அதிபதி சனி, 10-ஆம் அதிபதி சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுப் பெற்றாலும், சனி- சுக்கிரன் பரிவர்த் தனை பெற்று அமையப்பெற்றாலும், கூட்டுத்தொழில்மூலம் அனுகூலம், மனைவி மற்றும் பெண்களால் அனுகூலங்கள் உண்டாகும். சனி- புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கூட்டுத் தொழில்மூலம் நல்ல லாபம் அமையும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001