மேஷ லக்னத்தில் பிறந்தவர்களில் 5, 6, 7-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். மற்ற பாவங்களை இங்கு காணலாம்.

8-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

Advertisment

8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக் கியம், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின் மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றி அறியலாம். லக்னாதிபதி செவ்வாயே 8-ஆம் வீட்டதி பதியும் ஆவார். ஜென்ம லக்னத்திற்கும், 8-ஆம் வீட்டிற் கும் அதிபதியான செவ்வாய் கேந்திர, திரிகோண ஸ்தானத் தில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். செவ் வாய் உஷ்ண கிரகமான சூரியன் சேர்க்கை பெற்று 6, 8-ல் அமையப்பெற்றால் இதயக் கோளாறு, கண்களில் பாதிப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்பு உண்டாகும்.

செவ்வாய் - சந்திரன் சேர்க்கைப்பெற்று வலுவிழந்து காணப்பட்டால் நீர் தொடர்புள்ள பாதிப்பு உண்டாகும். செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் ரகசிய நோய்கள் உண்டாகும். செவ்வாய்- புதன் சேர்க்கைப் பெற்றால் நரம்புத் தளர்ச்சி, சனி சேர்க்கை பெற்றால் விபத்துகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, ராகு சேர்க்கை பெற்றால் தவறான பழக்க வழக்கம் மற்றும் விஷத்தால் கண்டம் ஏற்படும். செவ்வாய்- குரு சேர்க்கை, பார்வை பெற்று வலுவுடன் காணப்பட்டால் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் உண்டாகும். 8-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். மேஷ லக்னம் என்பது ராசி மண்டலத்தில் முதல் ராசி என்பதால் விருச்சிக ராசியானது கால புருஷ தத்துவப்படி 8-ஆவது ராசியாகும். மேஷ லக்னத்திற்கு விருச்சி கத்தில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரன் நீசம் பெற்றாலும் கடுமையான ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

9-ஆம் பாவம்

(மேஷ லக்னம்) ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் பாவம் பாக்கியம், செல்வம், செல்வாக்கு, தந்தை, தந்தைவழியில் ஏற்படக்கூடிய அனுகூலங் களைப் பற்றி அறியக்கூடிய ஸ்தானமாகும். மேஷ லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி குருவும், தந்தைக்காரகன் சூரியனும் பலமாக அமையப்பெற்றால் தந்தைக்கு நற்பலன் உண்டாகும்.

Advertisment

9-ஆம் அதிபதி குருவும், தந்தைக்காரகன் சூரியனும், லக்னா திபதி செவ்வாயும் கேந்திர- திரிகோணத் திலோ ஆட்சி, உச்சம் பெற்றோ சுபர் சேர்க்கை பெற்றோ இருந்தால் தந்தைக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். தந்தைவழி முன்னோர்கள் புகழ்பெற்ற குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும், வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். மேஷ லக்னத்திற்கு 3, 6, 8-ல் குரு பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், சூரியன்- சனி, ராகு- கேது போன்ற பாவிகளுடன் சேர்ந்தாலும், சனி, ராகு, சூரியனின் வீடான சிம்மம் அல்லது 9-ஆம் வீடான தனுசில் அமையப் பெற்றாலும் தந்தைக்கு ஆரோக்கிய பாதிப்பு மற்றும் பொருளா தார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குரு- சூரியன், சனி, ராகு போன்ற கிரகங் களின் சாரம் பெறுவதும், சிம்ம ராசிக்கும், தனுசு ராசிக்கும் இருபுறமும் பாவிகள் அமையப்பெறுவதும் தந்தைக்கு நல்லதல்ல. பாக்கிய ஸ்தானமான 9-ல் சுபர் அமைந் தாலும், சுபர் பார்வை இருந்தாலும், 9-ஆம் அதிபதி குரு கேந்திர- திரிகோணத்தில்அமையப் பெற்றாலும் தந்தைக்கு மேன்மைகள் ஏற்படும். 9-ஆம் வீட்டிற்கு பாவிகள் பார்வை இல்லாமலும், 9-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையாலும் இருந்தால் நல்ல வசதி வாய்ப்பு களுடனும், செல்வம், செல்வாக்குடனும் வாழும் யோகம் உண்டாகும். குரு, சனி சேர்க்கைப்பெற்று 9, 12-ல் இருந்தாலும், 9-ல் ராகு இருந்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய யோகம் ஏற்படும்.

pp

10-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனஸ்தானாதிபதி சனியாகும். தொழில்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி மேஷ லக்னத் திற்கு 10-ஆம் அதிபதி என்பதால் சுக்கிரன்,புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றால் சொந்தத் தொழில்செய்து அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஜீவனாதிபதி சனியே பாதகாதி பதியாகவும் இருப்பதால், வேலையாட் களிடமும், ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில் விஷயங்களிலும் முதலீடு செய்கின்றபோது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான

Advertisment

விஷயங்களில் மட்டும் முதலீடுசெய்தால் லாபங்களை அடையமுடியும். 10-ஆம் அதிபதி சனி பலமாக அமையப்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள்,வாகனங்களின்மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனைசெய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றைச் செய்ய நேரிடும். சனி, சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம்செய்து சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். வணிகம்,வியாபாரம், ஏஜென்ஸி, கமிஷன் தொடர் புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனியுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும், கொடுக்கல்- வாங்கல், ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருவுக்கு 10-ஆம் வீடு நீச ஸ்தானம் என்பதனால், உடன் சனிஅமைந்திருந்தால் மட்டுமே கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப்பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாகப் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவற்றின்மூலம் சம்பாதிக்கமுடியும்.

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10-ஆம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10-ல் அமைந்து உச்சம், திக்பலம் பெற்றிருந்தால், மிகச்சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வேத்துறை போன்ற வற்றில் உயர்பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்றிருந் தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும் உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர்பதவிகள் தேடிவரும். 10-ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப்பெற்று உடன் சந்திரன்- ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத்துறை யில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன், செவ்வாயுடன் குருவின் சேர்க்கை அல்லது பார்வையி ருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும். சனி- ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்டச் சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய சூழ்நிலைஉண்டாகும். சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராகப் பணிபுரியும் நிலை, அடிமைத்தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

11-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக் கொண்டு லாபம், மூத்த உடன்பிறப்பு, நட்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம். 11-ஆம் அதிபதி சனி 3, 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், புதன், சுக்கிரன், குரு போன்ற சுபகிரகச் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். சரலக்னமான மேஷத்திற்கு 11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதாலும், 11-ஆம் அதிபதி சனி என்பதாலும் பெரும்பாலும் மூத்த உடன்பிறப்பு இருப்பதில்லை; இருந்தாலும் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். 11-ஆம் வீடான சனியின் வீட்டில் குரு, சூரியன், செவ்வாய் போன்ற ஆண் கிரகங்கள் அமைந்திருந்தால் மூத்த ஆண் உடன்பிறப் புகள் அமையும். பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் அமைந்திருந்தால் பெண் உடன்பிறப் புகள் உண்டாகும். குரு பார்வை 11-ஆம் வீட்டிற்கு இருந்தால் தாராள தனவரவும், மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமும் உண்டாகும். செவ்வாய், சனி இணைந்து சுபகிரகத் தொடர்போடிருந்தால் மூத்த உடன்பிறப்பு

களுடன் இணைந்து தொழில்செய்யும் அமைப்பு, அதன்மூலம் வாழ்வில் முன்னேற் றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். மேஷ லக்னத்திற்கு மூத்த உடன்பிறப்பு ஸ்தானாதிபதியான சனி-ராகு அல்லது கேது போன்ற கிரகங்களுடன் இணைந்து 11-ல் இருந்தாலும், மற்ற ஸ்தானங்களில் அமைந்து சுபர் பார்வையின்றி அமைந்தாலும் மூத்த உடன்பிறப்புகள் இருக்காது.

12-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

மேஷ ல க் ன த் தி ற் கு 1 2 - ஆ ம் வீட்டைக்கொண்டு வெளிநாட்டுப் பயணங்கள், விரயங்கள், அயன சயன போகத்தைத் தெளிவாகக் கூறலாம். குரு ஆட்சி பெற்றிருந்தாலும், சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருந்தாலும், 12-ல் சுபகிரகங்கள் இருந்தாலும் பலர் போற்றும்வகையில் வாழும் ஒப்பற்ற வாழ்க்கை உண்டாகும். கட்டில் சுகவாழ்வு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏதும் ஏற்படாமல், செய்யும் செலவுகள் யாவும் சுபச்செலவுகளாகவே இருக்கும். 12-ஆம் வீட்டில் பாவிகள் அமையாமல் இருப்பது, 12-ஆம் வீட்டைப் பாவிகள் பார்க்காமல் இருப்பது உத்தமம். கு ரு ப ல மி ழ ந் து , 1 2 - ஆ ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள்அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் உறக்கமின்மை, இடது கண்ணில் பாதிப்பு, சுகவாழ்வில் பாதிப்பு, தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நிலை உண்டாகும். கேது 12-ல் அமையப்பெற் றால் குரு வீடு என்ற காரணத்தால் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடும் அமைப்பு, பொதுக் காரியங்களுக்கு செலவுசெய்யும் வாய்ப்பு உண்டாகும். குரு# சனி சேர்க்கை பெற்று 6, 9, 12-ல் அமைந் தாலும், பரிவர்த்தனைப் பெற்றாலும், 12-ல் சனி,ராகு அமையப்பெற்றாலும் வெளிநாட்டு யோகம், வெளிநாடு தொடர்புடைய தொழில், வேலை வாய்ப்புமூலம் முன்னேறும்

அமைப்பு உண்டாகும். 12-ல் அமையும் கிரகத்தின் தசை நடைபெறும் காலங்களில் வெளிநாட்டு வாய்ப்பு தேடிவரும்.

(அடுத்த இதழில் ரிஷப லக்னம்)

முனைவர் முருக பாலமுருகன்

செல்: 72001 63001