Advertisment

12 லக்னப் பலன்கள்...!

/idhalgal/balajothidam/12-lakna-benefits

ரிஷப லக்னம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களில் 1 முதல் 12-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம்.

அடுத்து ரிஷப லக்னத்தாரின் பன்னிரண்டு பாவங்கள் பற்றி காணலாம்.

Advertisment

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாரையும் வசியப்படுத்தக்கூடிய அளவுக்கு அழகான தோற்றமும், நடுத்தரமான உயரமும், நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும், அழகான அங்க அமைப்புகளும் இருக்கும். கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் அமைந் திருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சாமர்த் தியமாகவும், சாதுர்ய மாகவும், வேடிக்கை யாகவும், கவர்ச்சி யாகவும் பேசும் ஆற்றல்உடைய வர்களாக இருப் பார்கள். பழக்கமில் லாத புதிய நண்பர்

களுடனும், விருந்தாளி களுடனும் புதிதாக பழக்கம் ஏற்படுத் திக்கொள்வதில் சற்று சங்கடப்படு வார்கள். வார்த்தை களைஅளந்து பேசும் இவர்களின்

ரிஷப லக்னம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களில் 1 முதல் 12-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம்.

அடுத்து ரிஷப லக்னத்தாரின் பன்னிரண்டு பாவங்கள் பற்றி காணலாம்.

Advertisment

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாரையும் வசியப்படுத்தக்கூடிய அளவுக்கு அழகான தோற்றமும், நடுத்தரமான உயரமும், நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும், அழகான அங்க அமைப்புகளும் இருக்கும். கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் அமைந் திருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சாமர்த் தியமாகவும், சாதுர்ய மாகவும், வேடிக்கை யாகவும், கவர்ச்சி யாகவும் பேசும் ஆற்றல்உடைய வர்களாக இருப் பார்கள். பழக்கமில் லாத புதிய நண்பர்

களுடனும், விருந்தாளி களுடனும் புதிதாக பழக்கம் ஏற்படுத் திக்கொள்வதில் சற்று சங்கடப்படு வார்கள். வார்த்தை களைஅளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்படும்.

Advertisment

தம்வார்த்தைகளில் குற்றங்குறை கண்டு பிடிக்காதவாறு பேசி, பிறர் வெல்ல இடம் தராமல் பேச்சில் தனக் கென தனி பாணியை வைத்திருப்பார்கள்.

12rasiநல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப் படாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வ திலும் தன்னலம் கருதாது செயலாற்று வார்கள். தன்னம் பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப் பதற்கு சாதாரணப் பேர்வழிகளாக இருந் தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓடஓட விரட்டியடிப் பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்குப் பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப் படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலசமயம் குதர்க்க மாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். எந்த கஷ்டத் தையும் தாங்கக்கூடிய சகிப்புத் தன்மையும் அதிகமிருக்கும். நீண்ட ஆயுளும், புகழ், கௌரவம், அந்தஸ்தும் சிறப்பாக அமையும்.

லக்னாதிபதி சுக்கிரனும், 2, 5-க்கு அதிபதியான புதனும், 4-ஆம் அதிபதியான சூரியனும் 9, 10-க்கு அதிபதியான சனியும் ராகுவும் ரிஷப லக்னத்திற்கு யோகத் தைத் தரும் கிரகங்கள் ஆகும். சுக்கிரன்- சனி, புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

1-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்தைக் கொண்டு ஒருவரது தோற்றம், உடல் அமைப்பு, ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக அறியலாம்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கலை, இசைத்துறைகளில் ஈடுபாடு நிறைந்த வர்களாகவும், நவீனகரமான பொருட்களை அனுபவிக்கும் சுகவாசிகளாகவும் இருப் பார்கள். லக்னத்தில் சுக்கிரன், புதன், குரு, சந்திரன் போன்ற சுபகிரகங்கள் அமையப் பெற்றால் நல்ல அழகான, கவர்ச்சியான உடலமைப்பு இருக்கும்.

லக்னத்தில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் தோற்றத்தில் முதிர்ச்சியாகக் காணப்படு வார்கள். லக்னத்தில் சூரியன், செவ்வாய் அமையப்பெற்றால் தைரியம், துணிவு, அதிகா ரத்துவம் நிறைந்திருக்கும். லக்னாதிபதி சுக்கிரன் கேந்திர திரிகோணத்தில் அமைவதும், புதன், சனி போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கைப் பெறுவதும் சிறப்பு.

ரிஷப லக்னத்திற்கு தர்மகர்மாதிபதியான சனி வலுவான யோகக்காரகனாகும். கேந்திராதிபதியான சூரியனும், 2, 5-க்கு அதிபதியான புதனும் யோகத்தை அள்ளித் தரும். லக்னாதிபதியான சுக்கிரனும் ஆயுள் காரகன் சனியும் வலுபெற்று அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் அசுர குரு. நவகிரங்களில் சுபகிரக மான குரு தேவகுரு. ரிஷப லக்னத்திற்கு 8-க்கு அதிபதியான குரு லக்னாதிபதி சுக்கிரனுக்கு பகை கிரகம். ஸ்திர லக்னம் என்பதனால் 3-ஆம் அதிபதி சந்திரனும், அட்டமாதிபதி குருவும் மாராகாதி பதிகள் ஆகும். சந்திரன், குரு தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. லக்னத்திற்கு 7, 12-க்கு அதிபதியான செவ்வாய் நன்மை, தீமை கலந்த பலனைத் தரும்.

சந்திரன், குரு, சனி பலமிழந்திருந்தாலும், லக்னாதிபதி சுக்கிரன் வக்ரம், பகை, நீசமாகி பாவிகளுக்கு இடையே அமையப் பெற்றாலும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

லக்னாதிபதி சுக்கிரன்- சனி, ராகு, புதன் சேர்க்கைப்பெற்று கேந்திர திரிகோணத்தில் இருந்தாலும் அல்லது தனித்தனியாக அமைந்தாலும், பகை, நீசம் பெறாமல் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன், சனி, புதன், ராகு, சூரியன் போன்ற கிரகங்களின் தசை புத்திக் காலங்களில் அனுகூலமான பலன்களும், சந்திரன், குரு, கேது போன்ற கிரகங்களின் தசை புத்திக் காலங்களில் எதிர்பாராத சோதனைகளும், செவ்வாய் தசைக் காலத்தில் உடல் நிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

ரிஷப லக்னத்தின் மற்ற பாவங்கள்

அடுத்த இதழில்...

செல்: 72001 63001

bala010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe