Advertisment

12 லக்னப் பலன்கள்...! 10

/idhalgal/balajothidam/12-lakana-palans

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 10-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

11-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக் கொண்டு லாபம், மூத்த உடன்பிறப்பு போன்றவற்றை அறிலாம். ரிஷப லக்னத்திற்கு தனகாரகனான குருவே லாப ஸ்தானாதி பதி என்பதால் குரு வலுவாக கேந்திர திரிகோண ஸ்தானங் களில் கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் நல்ல லாபம், வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குரு மற்றும் சனி, சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றால் சிறப்பான லாபம், தாராள தனவரவுகளால் சமுதாயத்தில் நல்லதொரு நிலையை அடையும் யோகம் உண்டாகும். குரு வக்ரம் பெற்றாலோ, பலவீனமாக இருந்தாலோ லாபங்களை அடைவதற்கு இடையூறுகள் உண்டாகும்.

ஆண் கிரகமான குரு 11-ஆம் வீட்டிற்கு அதிபதி என்பதால் சூரியன், செவ்வாய் போன்ற ஆண் கிரகங்களின் சேர்க்கை பெற்று 11-ல் இருந்தாலும் அல்லது கேந்திர திரிகோண ஸ்தானங்களில் வலுப்பெற்று அமையப்பெற்று 11-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்யாமல் இருந்தாலும் மூத்த சகோதரர்வழியில் சிறப்பும், நல்ல லாபமும், சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். குரு மற்றும் சனி இணைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் மூத்த சகோதரர்களுடன் இணைந்து தொழில்செய்து முன்னேறக்கூடிய வாய்ப்பு அமையும்.

பெண் கிரகமான சுக்கிரனுக்கு 11-ஆம் வீடு உச்ச ஸ்தானமாகும்.

சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந் தாலும், சந்திரன் 11-ல் பலமாக இருந் தாலும், குரு மற்றும் சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றுகேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் மூத்த சகோதரி யோகம் உண்டாகும்.

Advertisment

11-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், குரு வக்ரம் பெற்றோ பலவீனமாக அமையப்பெற்றோ இருந்தாலும் மூத்த உடன் பிறப்புக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.

12-ஆம் பாவம்

12-ஆம் பாவத்தைக்கொண்டு விரயம், கட்டில் சுகம், தூக்கம், மோட்சம், இடது கண் போன்றவற்றை அறியலாம்.

ரிஷப லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி செவ்வாய் வலுப்பெற்று சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் வீண்விரயங்கள் ஏற்படாமல் இருக்கும். செவ்வாய் மற்றும் சனி, ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கைப் பெற்றால் ஏற்படும் செலவு கள் அநாவசிய செலவுகளாக இருக்கும். 12-ஆம் வீடு சனிக்கு நீச வீடு என்பதனால் சனி 12-ல் அமையப்பெற்று, பலமான நீசபங்க ராஜயோகம் இல்லாமல் இருந்தால் வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.

12-ஆம் அதிபதி செவ்வாய் 9, 10-க்கு அதிபதி யான சனி சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றாலும், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனைப் பெற்றாலும், 12-ஆம் வீட்டில் ராகு இரு

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 10-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

11-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக் கொண்டு லாபம், மூத்த உடன்பிறப்பு போன்றவற்றை அறிலாம். ரிஷப லக்னத்திற்கு தனகாரகனான குருவே லாப ஸ்தானாதி பதி என்பதால் குரு வலுவாக கேந்திர திரிகோண ஸ்தானங் களில் கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் நல்ல லாபம், வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குரு மற்றும் சனி, சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றால் சிறப்பான லாபம், தாராள தனவரவுகளால் சமுதாயத்தில் நல்லதொரு நிலையை அடையும் யோகம் உண்டாகும். குரு வக்ரம் பெற்றாலோ, பலவீனமாக இருந்தாலோ லாபங்களை அடைவதற்கு இடையூறுகள் உண்டாகும்.

ஆண் கிரகமான குரு 11-ஆம் வீட்டிற்கு அதிபதி என்பதால் சூரியன், செவ்வாய் போன்ற ஆண் கிரகங்களின் சேர்க்கை பெற்று 11-ல் இருந்தாலும் அல்லது கேந்திர திரிகோண ஸ்தானங்களில் வலுப்பெற்று அமையப்பெற்று 11-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்யாமல் இருந்தாலும் மூத்த சகோதரர்வழியில் சிறப்பும், நல்ல லாபமும், சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். குரு மற்றும் சனி இணைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் மூத்த சகோதரர்களுடன் இணைந்து தொழில்செய்து முன்னேறக்கூடிய வாய்ப்பு அமையும்.

பெண் கிரகமான சுக்கிரனுக்கு 11-ஆம் வீடு உச்ச ஸ்தானமாகும்.

சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந் தாலும், சந்திரன் 11-ல் பலமாக இருந் தாலும், குரு மற்றும் சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றுகேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் மூத்த சகோதரி யோகம் உண்டாகும்.

Advertisment

11-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், குரு வக்ரம் பெற்றோ பலவீனமாக அமையப்பெற்றோ இருந்தாலும் மூத்த உடன் பிறப்புக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.

12-ஆம் பாவம்

12-ஆம் பாவத்தைக்கொண்டு விரயம், கட்டில் சுகம், தூக்கம், மோட்சம், இடது கண் போன்றவற்றை அறியலாம்.

ரிஷப லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி செவ்வாய் வலுப்பெற்று சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் வீண்விரயங்கள் ஏற்படாமல் இருக்கும். செவ்வாய் மற்றும் சனி, ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கைப் பெற்றால் ஏற்படும் செலவு கள் அநாவசிய செலவுகளாக இருக்கும். 12-ஆம் வீடு சனிக்கு நீச வீடு என்பதனால் சனி 12-ல் அமையப்பெற்று, பலமான நீசபங்க ராஜயோகம் இல்லாமல் இருந்தால் வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.

12-ஆம் அதிபதி செவ்வாய் 9, 10-க்கு அதிபதி யான சனி சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றாலும், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனைப் பெற்றாலும், 12-ஆம் வீட்டில் ராகு இருந்தாலும் கடல்கடந்து அன்னிய நாடு செல்லும் யோகம், கூட்டுத்தொழில் மூலமாக லாபம் உண்டாகும். சனி மற்றும் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளி மாநிலங்கள்மூலம் அனுகூலப்பலன் உண்டாகும்.

செவ்வாய் மற்றும் சனி, ராகு சேர்க்கைப் பெற்று வலுவிழந்து அமையப்பெற்றால் கட்டில் சுகவாழ்வில் பாதிப்பு, உறக்கமின்மை உண்டாகும். சனி, ராகு 12-ல் இருந்தாலும், செவ்வாய் மற்றும் சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் கண்களில் பாதிப்பு ஏற்படும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிலும் லட்சியத்துடன் செயல்படுவார்கள். எல்லா விஷயங்களிலும் இருவேறு மாறுபட்ட கருத் தினைக் கொண்டிருப்பார்கள். தங்களது காரியங் களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள். மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் இருக்கும். ஆன்மிகப் பணியில் அதிக நாட்டம், விரதத்தில் ஈடுபாடு, எதிலும் புத்திக்கூர்மையாக செயல்படும் திறன் கொண்டவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்கமாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றாற்போல குணத்தை மாற்றிக்கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுனத்தாரின் இயல்புகள் புரியும்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்துமுடிக்கும் ஆற்றல் இருக்கும். பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளிபோலவும் ஏமாளிபோலவும் நடந்து கொண்டாலும், அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துக் கொள் வார்கள். மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பைத் துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள்.தனக்குப் பிடிக்காதவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில்கூட தன்னு டைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூகவாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கு வார்கள்.

மூன்று வயதில் கண்டமும், ஐந்து வயதில் நெருப்பால் கண்டமும், எட்டு வயதில் ஆயுதத்தால் கண்டமும், பத்து வயதில் பகைவர்களால் பாதிப்பும், 18 வயதில் வாயுத் தொல்லையால் பாதிப்பும், 28 வயதில் கண்களில் நோயும், 35 முதல் 48 வயது வரை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பும் உண்டாகும்.

1-ஆம் பாவம்

murugarமிதுன லக்னத்திற்கு அதிபதியான புதன் திரிகோண ஸ்தானத்தில் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகமான சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்றால் நிலையான செல்வம், திடகாத்திரமான உடலமைப்பு, சமுதாயத்தில் உயர்வான அந்தஸ்தை அடையும் யோகம் உண்டாகும்.

மிதுன லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங் களான 1, 4, 7, 10 ஆகியவை சுப ஸ்தானங்களாக வருவதால் 1, 4-ல் புதன் சுபர்சேர்க்கையுடன் வலுப்பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பதால் நற்பலனை அடைவதில் இடையூறுகள் உண்டாகும். 1, 4-ல் புதன் வலுப்பெற்று பாவிகள் சேர்க்கை பெற்றால், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் பாவி என்பதால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கான பாதிப்பினை ஏற்படுத்தாமல் நற்பலனை உண்டாக்கும்.

மிதுன லக்னத்திற்கு 1, 4-க்கு அதிபதியான புதனும், 7, 10-க்கு அதிபதியான குருவும் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ வலுவாக அமையப்பெற்றால் சிறப்பான அறிவாற்றல், மற்றவர்களை வழிநடத்தக் கூடிய ஆற்றல், மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக விளங்கும் திறன் உண்டாகும். சுபகிர கங்கள் லக்னத்தில் அமையப்பெற்றாலும், மிதுன லக்னத்திற்கு அதிபதியான புதனும், ஆயுள்காரகனும் அஷ்டமாதிபதியுமான சனி வலுப்பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுள், நோய், நொடி இல்லாத வாழ்க்கை உண்டாகும்.

புதன் மற்றும் செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், வக்ரம் பெற்றாலும் தேவையற்ற பகைமைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப்பு உண்டாகும்.

மிதுன லக்னத்திற்கு 1, 4-க்கு அதிபதியான புதனும், 5, 12-க்கு அதிபதியான சுக்கிரனும், புதனுக்கு நட்பு கிரகமான சனியும் யோக கரமான நற்பலன்களை ஏற்படுத்துவார்கள்.

6, 11-க்கு அதிபதியான செவ்வாய் பாவியாகும். 7, 10-க்கு அதிபதியான குரு பாதகாதிபதி என்பதால் திரிகோண ஸ்தானம் அல்லது மறைவு ஸ்தானங்களில் இருந்தால் ஓரளவுக்கு சாதகப்பலன் ஏற்படும். சூரியனும், சந்திரனும் ஒரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் சுபகிரகச் சேர்க்கையோடு இருந்தால் நற்பலன் உண்டாகும்.

மிதுனம் உபய லக்னம் என்பதால் 7, 11-க்கு அதிபதியான குருவும், செவ்வாயும் மாரகாதிபதிகள் ஆகும். இதனால் குரு, செவ்வாய் தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு.

2-ஆம் பாவம்

2-ஆம் பாவத்தைக்கொண்டு பேச்சுத்திறமை, வாக்குவண்மை, குடும்பம், பொருளாதார நிலை, வலதுகண் பற்றி அறியலாம்.

மிதுன லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சந்திரன் என்பதால் இயற்கையாகவே கற்பனைத்திறனுடன் பேசக்கூடிய ஆற்றல் இருக்கும். சந்திரன் மற்றும் புதன் அல்லது குரு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றால் நல்ல பேச்சுத்திறன், பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். 2-ஆம் வீட்டில் அசுப கிரகங்களான செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை அமையப்பெற்று, 2-ஆம் வீட்டை பாவகிரகங்கள் பார்வை செய்தால் பேச்சால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

தன ஸ்தானாதிபதி சந்திரன் தனகாரகன் குருவின் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும், குரு மற்றும் சுக்கிரன், புதன் இணைந்து கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்றாலும், சந்திரன் கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கைப்பெற்றாலும் தாராளமான தனவரவு, பொன் பொருள் சேரும் அமைப்பு உண்டாகும்.

சந்திரன் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது போன்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது சாரம் பெற்றோ அல்லது பலவீனமாக அமைந்தோ குரு வக்ரம் பெற்றோ இருந்தால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் உண்டாகும். சந்திரன் சுபகிரகமான குரு, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கைப்பெற்று கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்றாலும், 2-ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 2-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு அமைந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

மிதுன லக்னத்தை பொருத்தவரை கண் களுக்கு காரகத்துவம் பெறும் தன ஸ்தானத்தில் கண்களுக்குக் காரகனாக விளங்கும் சந்திரன் அதிபதியாக வருவதும், கண்களுக்கு மற்றொரு காரகனான சுக்கிரன் 12-ஆம் வீட்டிற்கு அதிபதியாக வருவதும் ஒரு விசேஷ அமைப் பாகும். சுக்கிரன், சந்திரன் இருவரும் சுபகிரகப் பார்வை- சேர்க்கை பெற்றால் கண் பார்வை யானது மிகவும் சிறப்பாக இருக்கும். சுக்கிரன், பாவிகளான சனி, சூரியனுடன் இணைந்து 2, 12-ல் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு உண்டாகும். 2-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால் வலது கண் பாதிக்கப்படும். சந்திரன் மற்றும் சனி, செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 6, 8-ல் அமையப் பெற்றாலும், சந்திரன் தேய்பிறைச் சந்திரனாகி சனி, செவ்வாய், ராகு சேர்க்கை பெற் றாலும், சந்திரன் மற்றும் சுக்கிரன் வலுவிழந்திருந்தாலும் கண்களில் பாதிப்பு ஏற்படும்.

3-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் பாவத்தைக் கொண்டு இளைய உடன்பிறப்பு, சுயமுயற்சி, வெற்றி, ஆண்மைத்திறன், வலது காது போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.

ஆண் கிரகமான சூரியன் 3-ஆம் அதிபதி என்பதால் குரு, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது தொடர்புடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் (துலாம் தவிர) இளைய ஆண் உடன்பிறப்பு உண்டாகும். சூரியன் மற்றும் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் உடன்பிறந்த சகோதரர்களால் பொருளா தார மேன்மை, அவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

செவ்வாய் 3-ல் இருந்தாலும் மற்ற வீடுகளில் சாதகமாக அமையப்பெற்றாலும் உடன்பிறப்புகளால் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

3-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் போன்ற பெண் கிரகங்கள் அமையப்பெற்றாலும், சூரியன் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் இளைய சகோதரி பாக்கியம் உண்டாகும். 3-ஆம் வீடு சூரியனின் வீடு என்பதால் சூரியனுக்கு ஜென்ம பகை கிரகமும் இயற்கையிலேயே பாவ கிரகங் களுமான சனி, ராகு 3-ல் அமைந்தாலும், சூரியன் மற்றும் சனி, ராகு சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், செவ்வாய் மற்றும் சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், சூரியன் நீசம் பெற்று பாவிகள் சேர்க்கை பெற்றாலும் இளைய உடன்பிறப்பு இருக்காது.

சூரியனுடன் சுக்கிரன் இணைந்து ஆண் ராசியில் அமைந்தால் ஒரு ஆண், ஒரு பெண் உடன்பிறப்பு உண்டாகும். சந்திரன் மற்றும் சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்று பெண் கிரகங்களின் வீடுகளான ரிஷபம், கடகம், துலாத்தில் அமைந்தால் பெண் உடன்பிறப்பு அமையும். சூரியன் ஆண் கிரகங்களின் வீடான மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனத்தில் அமையப்பெற்றால் ஆண் உடன்பிறப்பு அமையும். சூரியன், செவ்வாயுடன் சனி, ராகு போன்ற கிரகங்கள் சேர்க்கை மற்றும் சாரம் பெற்றாலும், சனி, ராகு 3, 6, 11-ல் இருந் தாலும் உடன்பிறப்புகளிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும்.

3-ஆம் வீட்டின் அதிபதி சூரியன் நட்பு கிரகங்களான செவ்வாய், குரு சேர்க்கைப் பெற்று வலுவாக இருந்தால் சொந்த முயற்சி யால் சாதிக்கக்கூடிய ஆற்றல் ஏற்படும்.

3-ஆம் வீட்டில் சனி, ராகு இருந்தால் பகை வீடு என்பதால் உறவினர்களிடையே பகை இருந்தாலும் அசட்டுத்தனமான தைரியம் உண்டாகும்.

நவகிரகங்களில் சூரியன் ஆண்மைக் காரகன். சூரியனும் புத்திரகாரகன் குருவும் பலமாக அமைந்தால் திடகாத்திரமான உடலமைப்பு, வீரம், விவேத்துடன் செயல் படும் அமைப்பு, நல்ல ஆண்மை சக்தி உண்டாகும். சூரியன் பலவீனமாக இருந்து சனி, ராகு சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், குரு வக்ரம் பெற்றாலும் தைரியமின்மை, ஆண்மைக் குறைபாடு ஏற்படும்.

சனி, ராகு 3-ல் அமைந்து புதன் பலவீனமாக இருந்தால் காதுகளில் பாதிப்பு உண்டாகும்.3-ஆம் வீட்டைக்கொண்டு கலை, இசைத்துறைகளில் உள்ள ஆர்வத்தைப் பற்றி அறியலாம். 3-ஆம் அதிபதி சூரியனும், கலைக்காரகன் சுக்கிரனும் பரிவர்த் தனைப் பெற்றாலும், சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து 3-ல் அமையப்பெற்றாலும், சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றாலும் கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)

செல்: 72001 63001

bala080319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe