12 லக்னப் பலன்கள்!

/idhalgal/balajothidam/12-lagnam-palans

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களில் 1 முதல் 12-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம். அடுத்து கடக லக்னத்தாரின் பன்னிரண்டு பாவங்கள் பற்றிக் காணலாம்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமை யுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் இருக்கும். எல்லாரிடத்திலும் சகஜமாகப் பழகி எதையும் எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். எந்தவொரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள், துணிந்தபின் துயரமில்லை என்ற சொல்லுக்கேற்ப நண்டுபிடிபோட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் இருந்தாலும், எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரியமுடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்துபோவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்ன தான் தியாக மனப்பான்மை இருந்தாலும், வாக்களித்தவர்களையும், சொன்னதைச் செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாகப் பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால், இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. ஒருசிலர் பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல், தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களில் 1 முதல் 12-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம். அடுத்து கடக லக்னத்தாரின் பன்னிரண்டு பாவங்கள் பற்றிக் காணலாம்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமை யுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் இருக்கும். எல்லாரிடத்திலும் சகஜமாகப் பழகி எதையும் எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். எந்தவொரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள், துணிந்தபின் துயரமில்லை என்ற சொல்லுக்கேற்ப நண்டுபிடிபோட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் இருந்தாலும், எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரியமுடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்துபோவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்ன தான் தியாக மனப்பான்மை இருந்தாலும், வாக்களித்தவர்களையும், சொன்னதைச் செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாகப் பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால், இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. ஒருசிலர் பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல், தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகிவிடுவார்கள்.

கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் என்பதால் மனவலிமையும், கற்பனை வளமும், சாமர்த்தியமும், தைரியமும், பிடிவாத குணமும் மிக்கவராகவும் இருப்பார்கள். சிவந்த நிறமும், நல்ல உடல்வாகும் இருக்கும்.

செல்வம், செல்வாக்கு கொண்டவர்கள்.

பயணங்களை அதிகம் விரும்புவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை எளிதில் மதிக்க மாட்டார்கள். உடலில் மறைவான இடத்தில் மச்சம் இருக்கும். பல்வேறு பொதுவிஷயங் களை அறிந்துகொள்ளும் திறன் இருக்கும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். 5, 19, 20, 25 ஆகிய வயதுகளில் எதிர்பாராத கெடுதிகள் ஏற்படும்.

சுப கிரகங்கள் ஜென்ம லக்னத்தைப் பார்வை செய்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். கடக லக்னத்திற்குப் பொன்னவன் எனப் போற்றப் படும் குருவும் செவ்வாயும் யோகக்காரகர்கள்.

சுக்கிரன், புதன் மகாபாவிகள். சூரியன், சனி, ராகு அதிக கெடுதிகளைச்செய்யும்.

h

கடக லக்னம் 1-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்தைக் கொண்டு ஒருவரின் உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம், செல்வ நிலை போன்றவற்றைப் பற்றி அறிலாம்.

கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் என்பதால்- வளர்பிறையில் சுபராக இருப்ப தால் நல்ல மனவலிமை, தைரியம், துணிவு யாவும் சிறப்பாக இருக்கும். சந்திரன் சுபர் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், லக்னத்தில் சுபகிரகம் இருந்தாலும் திடகாத்திரமான உடலமைப்பு, மற்றவர்களைக் கவரக்கூடிய அழகிய தோற்றம் இருக்கும். தேய்பிறையில் பிறந்திருந்தால்- சந்திரன் பாவி என்பதால் அதிக மனக்குழப்பம் உண்டாகும். சந்திரன்- சனி, ராகு- கேது போன்ற பாவகிரகச் சேர்க்கை யுடன் இருந்தாலும், லக்னத்தில் அசுப கிரகம் இருந்தாலும் அழகற்ற தோற்றம், மனநிலை பாதிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

சந்திரன்- குரு, செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும், ஆயுள் காரகன் சனி ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரும். சந்திரன் தனக்கு நட்பு கிரகமான சூரியன், செவ்வாய், குரு சேர்க்கை அல்லது சாரம் பெற்று, சனியும் பலமாக இருந்து, கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் ஏற்படும்.

சந்திரன்- சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கைப் பெற்றாலும் சாதகமான பலன் களை அடையமுடியும். அதுவே சந்திரன்- சனி, ராகு-கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும், சனி வக்ரம் பெற்றிருந் தாலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.

கடக லக்னத்திற்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும், சந்திரனுக்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

கடக லக்னம் சர லக்னம் என்பதால் 2, 7-க்கு அதிபதியான சூரியன், சனி மாரகாதிபதிகள் ஆகும். இதனால் சூரியன், சனியின் தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக் கொண்டு பொருளாதார நிலை, வாக்குவலிமை, குடும்ப ஒற்றுமை போன்றவற்றினை அறியலாம்.

கடக லக்னத்திற்கு தனாதிபதியான சூரியனும், தனக்காரகன் குருவும் சுபர் சேர்க்கை பெற்று வலுவாக அமையப்பெற்றால் தனம், செல்வம், செல்வாக்கு சிறப்பாக இருக்கும். சூரியன் தனக்கு நட்பு கிரகமான செவ்வாய், சந்திரன், குரு சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற் றாலும் தாராள தன வரவுகள் உண்டாகும். சூரியன் சுபகிரகச் சேர்க்கையின்றி சனி, ராகு- கேது சேர்க்கை பெற்று வலுவிழந்திருந்தாலும், சிம்மத்தில் சனி, ராகு இருந்தாலும் பொருளா தார நெருக்கடி, எவ்வளவு பணம் வந்தாலும் தேவையற்ற வீண்விரயங்கள் உண்டாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். சூரியனுடன் சனி, ராகு- கேது சேர்ந்தால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அதிகமாக இருக்கும்.

சூரியன், புதன், குரு போன்ற கிரகச் சேர்க்கைப் பெற்று, 2-ல் சுபகிரகங்கள் இருந்தால் நல்ல பேச்சாற்றல், எதிலும் சிந்தித்துச் செயல்படும் திறன், பேச்சால்- வாக்கால் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் 2-ல் பலமாக சுபர் பார்வை யுடன் இருந்தால் பேச்சில் அதிகாரத்துவம் இருக்கும். 2-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் இருப்பது நல்லது. அதுவே இயற்கை பாவி மட்டுமல்லாமல் 2-ஆம் அதிபதி சூரியனுக்கு பகை கிரகமான சனி, ராகு போன்ற பாவிகள் 2-ல் இருந்தாலும், சூரியன், சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும் பேச்சால் வீண்பிரச் சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை, வயதில் மூத்த ஆண்களிடம் கருத்து வேறுபாடு, முரட்டுத்தனம், தகாத வார்த்தைகளைப் பேசும் சுபாவம், மற்றவர்களை உதாசீனப் படுத்தும் குணம் உண்டாகும்.

சூரியன் தனக்கு நட்பு கிரகமான குரு, சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், சுபகிரக நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும், 2-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்துச்செல்லும் குண அமைப்பு உண்டாகும்.

2-ஆம் அதிபதி சூரியன் பகைகிரகமான சனி, ராகு சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், 2-ல் பாவிகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்படும்.

2-ல் சனி, ராகு அமையப்பெற்று அதன் தசாபுக்தி நடைபெறும் காலத்தில் குடும்ப வாழ்க்கையின்றி தனியாகத் தத்தளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

சூரியன் சிம்மம், துலாம், கும்பம், மிதுனத் தில் இருந்து உடன் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். தேய்பிறைச் சந்திரனாக இருந்து 2, 12-ல் அமையப்பெற்று சனி பார்வை பெற்றால் மத்திம வயதில் கண் பார்வை மறையும். சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று வலுவிழந் திருந்தால் கண்களில் ரத்தம் கசிதல், ரணம் போன்ற பாதிப்புகள், சூரியன்- கேது சேர்க்கை பெற்றிருந்தால் கண்களில் புரை வளரும். சூரியன், குரு போன்ற சுபர் பார்வை செய்தால் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

(அடுத்த இதழில் மற்ற பாவங்கள்...)

செல்: 72001 63001

bala190419
இதையும் படியுங்கள்
Subscribe