Advertisment

12 லக்னப் பலன்கள்! (50) -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/12-lagnam-palans-50

கும்ப லக்னம் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

11-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக்கொண்டு லாபம், மூத்த சகோதரம், நட்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு தனகாரகன் குருவே லாப ஸ்தானாதிபதி என்பதால், குரு கேந்திர- திரிகோணங் களில் கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், தாராள தனவரவு உண்டாகும். குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், செவ்வாய், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். நவகிரகங்களில் மிகச்சிறந்த சுபகிரகமாக குரு விளங்குவதால், 8, 12-ல் மறையாமல், வக்ரம், அஸ்தங்கம் பெறாமல் இருந்தாலே, வாழ்வில் தனல

கும்ப லக்னம் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

11-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக்கொண்டு லாபம், மூத்த சகோதரம், நட்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு தனகாரகன் குருவே லாப ஸ்தானாதிபதி என்பதால், குரு கேந்திர- திரிகோணங் களில் கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், தாராள தனவரவு உண்டாகும். குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், செவ்வாய், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். நவகிரகங்களில் மிகச்சிறந்த சுபகிரகமாக குரு விளங்குவதால், 8, 12-ல் மறையாமல், வக்ரம், அஸ்தங்கம் பெறாமல் இருந்தாலே, வாழ்வில் தனலாபங்கள் தாராளமாக வந்தடையும். குரு, செவ்வாய் சேர்க்கை பலமாக இருந்தால், சொந்த முயற்சி யால் பல்வேறு லாபங்களை ஈட்டும் யோகம் உண்டாகும்.

குரு- சூரியன், புதன் சேர்க்கை பெற்றிருந்தால் பூர்வீகவழி யிலும், தந்தையாலும் தனச்சேர்க்கை உண்டாகும். குரு- சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் வெளியூர், வெளிநாடு, ஏஜென்ஸி, கமிஷன் மூலமாகக்கூட தாராளமான தனச்சேர்க்கை உண்டாகும்.

Advertisment

11-ஆம் வீடு மூத்த உடன்பிறப்பைக் குறிக்கும் ஸ்தான மாகும். 11-ஆம் அதிபதி குரு வலுவாக அமைந்து சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், சூரியன், செவ்வாய் வீடுகளில் அமைந்தாலும் மூத்த சகோதரர் அமையும் அமைப்பு, மூத்த சகோதரவழியில் நல்ல தனலாபம், பல்வேறு லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். 11-ஆம் வீட்டை சகோதர காரகன் செவ்வாய் பார்வை செய்வது சிறப்பான அமைப்பாகும். 11-ஆம் வீட்டில் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் அமைந்து, ஆண் கிரகங்கள் பலமிழந்திருந்தால் மூத்த சகோதரி யோகம் உண்டாகும்.

11-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந் தால் மூத்த உடன்பிறப்புக்கு தோஷமாகும். 11-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்தாலும் உடன்பிறப்பு வகையில் பிரச்சினைகள், கருத்து வேறுபாடு உண்டாகும். குரு, பாவிகள் சேர்க்கை பெறுவதும், 11-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மூத்த சகோதரவகையில் அனுகூலமற்ற பலனை உண்டாக்கும்.

12-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு விரயம், கட்டில் சுகம், தூக்கம், மோட்சம் போன்றவற்றை அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி சனி ஆகும். 12-ஆம் அதிபதியே லக்னாதிபதியும் என்பதால், எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் செயல்படவேண்டும். சனி தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெறுவதும், குரு போன்ற சுபகிரகப் பார்வை பெறுவதும் அனுகூலப்பலனை உண்டாக்கும். சனி, சுக்கிரன் சேர்ந்திருந்து உடன் ராகு, செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தால், வீண்விரயங்களாவது மட்டுமின்றி, ஆணாக இருந்து சுக்கிரன் பலவீனமாக இருந்தால், தவறான பெண் சேர்க்கை, பல்வேறு தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகக்கூடிய அமைப்பு- அதன்மூலம் வீண்விர யங்கள் உண்டாகும்.

12-ஆம் அதிபதி சனி 9-ஆம் அதிபதி சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சுக்கிரன்- சனி பரிவர்த்தனை பெற்றாலும், சனி பயணங்களுக்கு காரகனான சந்திரன் சேர்க்கை பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.

சனி- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால்கூட வெளி நாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். 12-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால் வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.

12-ஆம் வீட்டில் பாவிகள் இருந்தாலும், சுபர் பார்வை இல்லாமலிருந்தாலும், சனி பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் இரவில் தூக்கம் பாதிக்கும்.

கட்டில் சுகவாழ்வும் பாதிக்கும். சனி பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் வீண்விரயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, பல்வேறுவகையில் நிம்மதி குறையும்.

(அடுத்த இதழில் மீன லக்னம்)

செல்: 72001 63001

bala030120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe