முனைவர் முருகு பாலமுருகன்

49

கும்ப லக்னம் 6-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

7-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சூரியன், லக்னாதிபதி சனிக்கு ஜென்ம பகை என்ற காரணத்தால், பெரும்பாலான கும்ப லக்னத்தினரின் திருமண வாழ்க்கையில் கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்காது. 7-ஆம் அதிபதி சூரியன் கேந்திர, திரிகோணங்களில் குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன் கிரகச் சேர்க்கையின்றி இருந்தால், மணவாழ்வு சிறப்பாக இருக்கும். சூரியன் தனக்கு நட்பு கிரகமான சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் வீடுகளில் இருந்தாலும், சுபர் சாரம் பெற் றாலும் மணவாழ்வில் மகிழ்ச்சியுண்டாகும். சூரியன்- சனி, ராகு- கேது போன்ற கிரகங் களின் சாரம் பெறாமலிருந்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும். 7-ஆம் வீட்டில் கிரகங்கள் எதுவுமின்றி, சூரியன் கிரகச் சேர்க்கையின்றி சுபர் பார்வையுடனிருந்து, களத்திரகாரகன் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை யின்றி பலமாக இருந்தால் மகிழ்ச்சியான மணவாழ்க்கை உண்டாகும். ஏக தாரத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையினை அடையும் யோகம் உண்டாகும்.

சனி, ராகு- கேது போன்ற பாவிகளில் ஒன்றுக்கு மேற்பட்டு 7-ஆம் வீட்டில் அமை யப்பெற்று, அக்கிரகங்கள் ஏதாவதொன்றின் தசை திருமண வயதில் நடைபெற்றால், திருமண வாழ்க்கை அமையாது. சூரியன் நீசம் பெற்றாலும், சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், ராகு- கேது சாரம் பெற் றாலும் கடுமையான களத்திர தோஷ முண்டாகி மணவாழ்க்கை அமைவதே கேள்விக்குறியாகிவிடும்.

Advertisment

கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி என்பதால், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தாலும், பாவிகள் சேர்க்கையின்றி இருந்தாலும் மணவாழ்வில் மகிழ்ச்சிகரமான பலன், பெண்கள்மூலமான அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்தாலும், பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பெண்களால் அவமானம், பொருளாதாரரீதியான இழப்புகள் உண்டாகும். 7-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைந்தாலும் மணவாழ்வு சிறப்பாக இருக்காது. 7-ஆம் வீட்டைவைத்துக் கூட்டுத்தொழில் பற்றித் தெளிவாகக் கூறலாம். லக்னாதிபதி சனிக்கு சூரியன் பகை கிரகம் என்பதால், கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்காது; இருந் தாலும், சூரியன், 10-ஆம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், சூரியன்- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றாலும் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய அமைப்பும், அதன்மூலம் அனுகூலம் அடையக்கூடிய யோகமும் உண்டாகும். சூரியன்- செவ்வாய் சேர்க்கையை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தால், மனைவிமூலமாக அனுகூலம், நெருங்கியவர்களால் சாதகங்கள் உண்டாகும். சூரியன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை உண்டானால் களத்திர தோஷம் என்றாலும், கூட்டுத்தொழில்மூலமாக அனுகூலங்கள், பெண்களால் சாதகம் மிகுந்த பலன்கள் உண்டாகும்.

8-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் வீட்டைக் கொண்டு ஆயுள் ஆரோக்கியம் பற்றித் தெளிவாக அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி புதன், சுபர் சேர்க்கை பெற்று, கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமைந்தாலும், லக்னாதி பதியும் ஆயுள்காரகனுமான சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி- புதன் தங்களுக்கு நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், நட்பு வீடுகளான ரிஷபம், துலாம், கன்னி, மிதுனம், மகரம், கும்பத்தில் இருந்தாலும் நல்ல ஆரோக் கியம், நீண்ட ஆயுள் உண்டாகும்.

11

சனி, புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று குரு பார்வை அல்லது சேர்க்கை பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். புதன் பாவிகள் சேர்க்கை பெறாமலிருப்பதும், 8-ல் செவ்வாய், சூரியன், ராகு- கேது போன்ற பாவிகள் அமையாமலிருப்பதும் நல்லது. புதன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 8-ல் பாவிகள் அமைந்திருந்தாலும், அக்கிரகங்களின் இயல்பிற்கேற்ப உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு புதன் 8-ஆம் அதிபதி என்பதால், பாவிகள் சேர்க்கை பெற்று பலமிழந் திருந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல்பலவீனம், கைகால் வலிப்பு போன்ற நரம்பியல் நோய்கள் உண்டாகும். 8-ல் சூரியன் இருந்தாலும், புதன் சேர்க்கை பெற்று பலமிழந்திருந்தாலும் இதய நோய், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்களில் பாதிப்பு; 8-ல் சந்திரன் பலமிழந்தால் நீர்த் தொடர்புடைய உடல்நிலை பாதிப்புகள்; செவ்வாய் 8-ல் பலமிழந்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உடலுறுப்புகள் இழப்பு, வெட்டுக்காயம்; 8-ல் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் எதிர்பாராதவகையில் விபத்துகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலை; குரு 8-ல் பலமிழந்தால் வாயு சம்பந்தப்பட்ட பாதிப்பு, வயிற்றுக் கோளாறு; 8-ல் சுக்கிரன் அமைந்தால் ரகசிய நோய்கள் உண்டாகும்.

சுக்கிரன் 8-ல் நீசம்பெறுவதால், பலமான நீசபங்க ராஜயோகம் இருந்தால் மட்டுமே கெடுதியில்லை. சனி 8-ல் அமைந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். 8-ல் ராகு- கேது அமைந்தால் செரிமானக்கோளாறு, எதிர்பா ராத உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். ராகு- கேது, சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 8-ல் அமைந்தால், தவறான சேர்க்கை, விஷத்தால் கண்டம் உண்டாகும்.

9-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக் கொண்டு வீடு பாக்கியம், செல்வம், செல்வாக்கு, வசதிவாய்ப்பு, தந்தை, தானதர்மங்கள் பற்றி அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். 9-ஆம் அதிபதி சுக்கிரன், ஜென்ம லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதால், செல்வம், செல்வாக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும், பெண்களால் இழப் புகளை சந்திக்கநேரிடும். சுக்கிரன் திரிகோண ஸ்தானங்களில் அமைந்தாலும்; சனி, புதன், ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமைந்தாலும் வசதிவாய்ப் புகள் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் திரிகோணத்தில் அமைவதும், 6, 12-ல் அமை வதும் மிகவும் அனுகூலமான பலனை உண்டாக்கும். பொருளாதாரரீதியான உயர்வுகள் உண்டாகும்.

சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் பாவிகள் சேர்க்கை பெறாமலிருந்தாலும், சூரியன் பலமிழக்காமல் கேந்திர, திரிகோணங் களில் அமைந்தாலும் தந்தைக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். தந்தைக்காரகன் சூரியன், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெறுவதும், சூரியனுக்கு ஜென்ம பகை கிரகமான சனி, ராகு சிம்மத்தில் அமைவதும் தந்தைக்கு நல்லதல்ல. சூரியன், சனி, ராகு சேர்க்கை பெறுவதும், பலமிழப்பதும், சனி வீடான மகரம், கும்பத்தில் அமைவதும் தந்தைக்கு நல்லதல்ல. கும்ப லக்னத்திற்கு சனி லக்னா திபதி என்றாலும், சூரியன் சேர்க்கை பெறுவது நல்லதல்ல. தந்தை ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி, ராகு அமைவதும், 9-ஆம் அதிபதி சுக்கிரன், சனி, ராகு சேர்க்கை பெறுவதும், 9-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் தந்தைக்கு நல்லதல்ல.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதாலும், லக்னாதிபதி சனிக்கு சூரியன் பகை கிரகம் என்பதாலும் தந்தைவழி உறவினர்களிடமும், தந்தையிடமும் ஒற்றுமை சிறப்பாக இருக் காது. சூரியனும் சுக்கிரனும் சிறப்பாக அமைந் தால் மட்டுமே தந்தைக்கு நீண்டஆயுள், தந்தை வழியில் பொருளாதாரரீதியான அனு கூலங்கள் உண்டாகும். சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன் பலமாக இருந்தால், தந்தை வழியில் பொருளாதாரரீதியான அனு கூலங்கள் உண்டாகும்.

பாக்கியாதிபதி சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கை பெற்று திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமைந்தாலும், 5, 9-ல் பாவிகள் இல்லாமலிருந்தாலும் தந்தைவழியில் பூர்வீக சொத்துரீதியாக எதிர்பாராத லாபங்கள் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சுக்கிரன் 1, 12-க்கு அதிபதியான சனி சேர்க்கை பெற் றாலும், 6-ஆம் அதிபதி சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சனி, சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றாலும் வெளியூர், வெளிநாடுமூலம் எதிர் பாராத அனுகூலங்கள், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன், ராகு சேர்க்கை பெற்று 6, 9, 12-ல் அமைந்தால் வெளியூர், வெளிநாடுமூலம் அனுகூலங்கள் அதிகரிக்கும்.

ராகு 9-ல் அமைவது தந்தைக்கு கெடுதி என்றாலும், வெளிநாடுமூலம் அனுகூலத் தைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். கும்ப லக்னத்திற்கு தந்தைவழியில் சின்னச் சின்ன சங்கடங்கள் இருந்தாலும், பொருளா தாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும்.

10-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகம் பற்றித் தெளிவாகக் கூறமுடியும்.

கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாகும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று, குரு பார்வை பெற்றால், சமுதாயத் தில் கௌரவ நிலையை அடையக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் நிர்வாகத் திறமைக்கும், போலீஸ், இராணுவம், பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவி வகிப்பதற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறார்.

செவ்வாய் பலமாக அமைந்து, சூரியன் சேர்க்கை பெற்று, சுபர் பார்வையுடன் அமைந்தால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர்பதவி வகிக்கும் யோகம்; உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்க அதிகாரியாகும் யோகம், பலரை வழிநடத்திச் செல்லக்கூடிய அமைப்புண்டாகும். தனது நட்பு கிரகங்களான சூரியன், குரு, சந்திரன் சேர்க்கை பெற்று செவ்வாய் பலமாக இருந்தால், சமுதாயத்தில் மதிக்கப்படக் கூடிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று, உடன் சந்திரன், ராகுவும் அமைந்தால், மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால், மருந்து, ரசாயனத் தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் களிலும் சம்பாதிக்கும் யோகத்தைக் கொடுக்கும்.

செவ்வாய் பலமாக அமைந்தவர் களுக்கு அதிகாரமிக்க குணமிருக்கும் என்பதால், செவ்வாய், சந்திரன், குரு சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒன்றுக் கொன்று கேந்திர, திரிகோணங் களில் அமைந்தாலும் அதிகாரமிக்க உயர்பதவி வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கை பெற்றிருந்தால், சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங் களில் பலமாக அமைந்தால், கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும்; செவ்வாய், சுக்கிரனுடன் சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகளின்மூலம் சம்பா திக்கக்கூடிய வாய்ப்பும்; 10-ல் குரு அமைந்து, உடன் புதன் சேர்க்கையும் ஏற்படுமேயானால், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு, பள்ளி, கல்லூரி களில் பணிபுரியும் வாய்ப்பும் உண்டாகும்.

செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந் திருந்தாலும், சனி பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருந்தாலும் ஒருநிலையான தொழில் இல்லாமல், எதிலும் எதிர்நீச் சலடித்தே முன்னேற வேண்டி யிருக்கும். 10-ல் ராகு அமைந்து, உடன் சனி இருந்து, சுபர் பார்வையின்றி இருந்தால், சட்டத்திற்குப் புறம்பான தொழில்செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001