முனைவர் முருகு பாலமுருகன்
39
விருச்சிகம் வரையிலான 1 முதல் 12 பாவங்களைச் சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, தனுசு லக்னப் பலன்களைக் காணலாம்.
தனுசு லக்னம்
தனுசு லக்னக்காரர்கள் சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும், தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர் காலத்தில் நடக்கப்போ வதைக்கூட முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய் வார்கள். பொய் பேசுபவர் களையும், தீய பழக்கவழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால், எதிரில் யாருமே நிற்கமுடியாது. எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் சிறப்பாகச் செய்துமுடிப்பார்கள். எல்லாருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாகப் பழகும் இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது.
யாருக்கும் கீழ்ப்படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களால் இயலாத காரி யமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள். இவர் களிடம் அன்பாகப் பழகினால் எதையும் சாதித்துக் கொள்ள லாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்கள் ஆதலால், அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். சிறுவயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.
பெரியோர்கள்மீது அதிகப் பிரியம் கொண்டு செயல்படு வார்கள். தங்களைவிட இளைய வயதுடையவர்களைக் கண்டு சற்று பயப்படுவார்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு, சமுதாயத்தில் சுகத்துடனும், புகழ், பெருமையுடனும் வாழ்வார்கள். பகைவர்களை எளிதில் வெல்லும் ஆற்றல் இயற்கையாகவே இருக்கும். பல்வேறு வித்தைகளை இளம்வயதிலேயே கற்றுக்கொள்வார்கள். பண நடமாட்டம் மிக்கவர்கள். பயணங்கள் மேற்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். வாழ்வின் மத்தியில் பல்வேறு அலைச்சலையும், பெண்களால் இழப்பையும் எதிர்கொள்வார்கள்.
இவர்களுக்கு 12, 15, 32, 40 வயதுகளில் எதிர்பாராத உடல்நிலை பாதிப்பு, கண்களில் நோய் உண்டாகும். லக்னாதிபதி குரு, 5-ஆம் அதிபதி செவ்வாய், பாக்கியாதிபதி சூரியன் ஆகியோர் அதிகப்படியான யோகப்பலனை உண்டாக்குவார்கள். ஆன்மிகம், தெய்வீக நாட்டம் இயற்கையாகவே அதிகமிருக்கும்.
1-ஆம் பாவம்
ஜென்ம லக்னாதிபதி குரு திரிகோண ஸ்தானமான 5, 9-ல் அமையப்பெற்றாலும், கிரகச்சேர்க்கையுடன் அமையப் பெற்றாலும் நீண

ஜென்ம லக்னாதிபதி குரு திரிகோண ஸ்தானமான 5, 9-ல் அமையப்பெற்றாலும், கிரகச்சேர்க்கையுடன் அமையப் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். ஆயுள்காரகன் சனியும், அட்டமாதிபதி சந்திரனும் பலம் பெறுவது விஷேசமான பலனைத் தரும். குரு- சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குரு செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்திலும், சூரியன் வீடான சிம்மத்திலும், சந்திரன் வீடான கடகத்திலும் அமையப் பெறுவது ஏற்றமிகு பலனை உண்டாக்கும்.
தனகாரகன், புத்திரக்காரகன் என வர்ணிக் கப்படும் குரு தனித்தமைவது சிறப்பல்ல என்பதால், கிரகச்சேர்க்கையுடன் அமைவது நல்லது. தனுசு லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்க ளெல்லாம் சுபகிரகங்களின் வீடென்பதால், குரு கேந்திரத்தில் அமையப்பெற்றால் கேந்திரா திபதி தோஷம் உண்டாகுமென்பதால், கேந் திரத்தில் அமைவது சிறப்பல்ல. குரு, சந்திரன் இருவரும் பலமாக மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மீனத்தில் அமையப் பெற்றால், நீண்ட ஆயுள் உண்டாகும். சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு, சூரியன், புதன் பலமாக அமையப்பெற்று, சனி போன்ற பாவிகள் பார்க்காமலிருந்தால், நீண்ட ஆயுள் உண்டாகும். குருவுக்கு இருபுறமும் பாவிகள் அமைவதும், ஜென்ம லக்னத் திற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் நல்லதல்ல.
சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் ஜென்ம லக்னத்திற்கு 8-லோ, சந்திரனுக்கு 8-லோ அமையப்பெற்றால், எதிர்பாராத கண்டம் உண்டாகும். குரு பகை, நீசம் பெற்று, சந்திரன் பலமிழந்தால், இளம்வயதில் பாதிப்புகள் ஏற்படும். குரு, சந்திரன் பலமிழந்து, 8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால், இளம்வயதில் கண்டம் உண்டாகும்.
குரு பலமிழப்பது நல்ல தல்ல. சனி, சந்திரன் பலமிழந் தாலும் பாதிப்புகள் உண்டாகும். தனுசு லக்னத் திற்கு குரு 1, 4-க்கு அதிபதி என்பதால், திரிகோண ஸ்தா னங்களில் அமைவதும், மறைவு ஸ்தானங்களில் சூரியன், செவ்வாய் போன்ற சுபர் சேர்க்கை பெறுவதும் மிகவும் அற்புதமான பலனை உண்டாக்கும். 2, 3-க்கு அதிபதியான சனி மத்திமப் பலனைத் தரும் என்றாலும், மகரம், கும்பம், ரிஷபம், கன்னி, துலாத்தில் அமையப்பெற்றால், மிக விஷேசமான பலன் உண்டாகும்.
5, 12-க்கு அதிபதியான செவ்வாய் பஞ்சமாதிபதி என்பதால், விஷேசப் பலனை கேந்திர, திரிகோணங்களில் அமையப் பெற்றால் தரும். தனுசு லக்னத்திற்கு 6, 11-க்கு அதிபதி யான சுக்கிரன் நற்பலனைத் தராது. பாக்கியா திபதி சூரியன் கேந்திர, திரிகோண ஸ்தா னங்களில் அமையப்பெற்றால், மிகவும் அனுகூல மான பலனை உண்டாக்கும். சந்திரன் அஷ்டமா திபதி என்பதால், சில கெடுதிகளைத் தரும் என்றாலும், லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதால் அதிக கெடுதலைத் தராது.
தனுசு லக்னத்திற்கு 7, 10-க்கு அதிபதியான புதன் பாதகாதிபதி என்பதால், கெடுபலனைத் தரும் என்றாலும், திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றால் அதிகக் கெடுதலைத் தராது. குருவின் லக்னத்தில் பிறந்திருப்பதால், பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபடக்கூடிய நபராகவும், ஆன்மிகப் பணிகள் அதிகம் செய்பவராகவும் விளங்குவார்கள். செவ்வாய், சூரியன் யோகாதிபதி என்பதால், அவர்கள் பலத்துடன் அமையப்பெற்று, தசாபுக்தி நடைபெறும் காலங்களில் சமுதாயத்தில் மற்றவர்களை வழிநடத்தக்கூடிய அற்புத அமைப்பு, உயர்பதவிகளை வகிக்கக் கூடிய யோகம் உண்டாகும். தனுசு உபய லக்னம் என்பதால், 7, 11- க்கு அதிபதியான புதன், சுக்கிரன் மாரகாதிபதிகளாகும்.
சுக்கிரன், புதன் தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
2-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத் தைக்கொண்டு தனம், வாக்கு, கண்பார்வை, குடும்பம், வசதிவாய்ப்பு போன்றவை பற்றித் தெளிவாகக் கூறலாம்.
தனுசு லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சனி. சனியும், தனகாரகன் குருவும் பலமாக அமையப்பெற்றால், பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமையப்பெற்றாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சனி, தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றால், சிறப்புமிகு பலன்கள், தாராள தனவரவு உண்டாகும். சனி- சுக்கிரன் புதன் சேர்க்கை பெற்றால், வாழ்நாளில் பணக்கஷ்டம் இருக்காது. சனி, குரு சேர்க்கை பெற்றாலும், குரு, சனி பலம் பெற்றாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சனி- சூரியன், செவ்வாய் போன்ற பகை கிரகச் சேர்க்கை பெற்றால், தனவரவில் சில தடைகள் இருக்கும். சனி ஒருபுறம் பலம் பெற்று, சூரியன், செவ்வாய் பலம்பெற்றால், பூர்வீகவழியில் தனலாபம், பொருளாதார மேன்மை, லட்ச லட்சமாகப் பணம் சேரக்கூடிய அமைப்புண்டாகும். சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தால், சில தவறானவழிகளில் சம்பாதிக்கக்கூடிய அமைப்புண்டாகும். குரு, சனி பலமிழந்து, வக்ரம், பகை, நீசம் பெற்றாலும், இருவரும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும் பொருளாதாரரீதியான இழப் புகள் உண்டாகும். சனி பலம்பெற்று, குரு, சூரியன் இணைந்து பலம்பெற்றால், தந்தைவழியில் தாராளமான தனவரவினை அடையலாம்.
சனி பலமிழந்து, சந்திரன், செவ்வாய், ராகு போன்ற கிரகச்சேர்க்கை பெற்றால், பணம் சம்பாதிக்க கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, நிறைய கடன்களை சந்திக்கக்கூடிய அமைப் புண்டாகும். சனி- மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகத்தில் அமைவது சிறப்பல்ல.
2-ஆம் அதிபதி சனி, தனது நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றோ, லக்னாதிபதி குரு சேர்க்கை பெற்றோ இருந்தால், சிறப்பான குடும்ப வாழ்க்கை உண்டாகும். 2-ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லா மலிருந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
2-ல் ராகு அமையப்பெற்றால், குடும்ப வாழ்வில் அமைதியிருக்காது. சனி- சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகச்சேர்க்கை பெற்றாலும், 2-ஆம் வீட்டை பாவகிரகங்கள் பார்வை செய்தாலும், குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. சந்திரனுக்கு 2-ஆம் வீட்டிலும் பாவிகள் இல்லாமலிருப்பது நற்பலனை உண்டாக்கும். 2-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்று, அதன் தசாபுக்தி நடை பெற்றால், குடும்பத்தில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.
2-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 2-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், சிறப்பான பேச்சாற்றல் உண்டாகும். 2-ஆம் வீடு சனிக்கு சொந்த வீடு என்றாலும், 2-ல் சனி அமையப்பெற்றால், நாவடக்கி செயல்படுவதே நல்லது. சனி- செவ்வாய், ராகு சேர்க்கை பெற்றாலும், 2-ல் செவ்வாய், ராகு அமையப்பெற்றாலும், முரட்டுத்தனமான பேச்சு, பேச்சால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, பேச்சால் மற்றவர்களைத் துன்பப்பட வைக்கும் நிலையுண்டாகும். 2-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்றால், பேச்சில் நாணயமிருக்காது.
2-ஆம் வீடு வலது கண்ணைக் குறிக்கும் ஸ்தானமாகும். சனி பலம்பெற்று அமையப் பெற்றாலும், நட்பு வீட்டில் அமையப் பெற்றாலும், சுபகிரகப் பார்வை பெற்றாலும், கண் பார்வை சிறப்பாக இருக்கும். கண் களுக்குக் காரகன் சூரியன்- சுக்கிரன், சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், சனி பலமிழந்து, 2-ல் செவ்வாய், ராகு, சூரியன் போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், சூரியன்- சுக்கிரன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், சூரியனுக்கு 7-ல் பாவகிரகங்கள் அமையப்பெற்றாலும், சனி, சூரியன் போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், கண்களில் நோயுண்டாகும். சனி பாவிகள் சேர்க்கை பெற்று, உடன் சந்திரன் இருந்தால், கண்களில் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.
3-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக் கொண்டு சுயமுயற்சி, இளைய சகோதர அமைப்பு, வீரம், விவேகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
தனுசு லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி சனி என்பதால், இயற்கையாகவே சகோதர தோஷம் சிறிதுண்டு. சகோதர காரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று, சனி கேந்திர, திரிகோணங்களில் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் அமையப்பெற்றால், இளைய சகோதர ரீதியாக ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். சனி ஆட்சி, உச்சம் பெற்று, குரு, செவ்வாய், சூரியன் போன்ற ஆண் கிரகங்கள் பலம்பெற்று 3- ஆம் வீட்டில் அமையப்பெற்றால், இளைய சகோதர வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதர காரகன் செவ்வாய் பலம்பெற்றாலும், 3- ஆம் வீட்டை செவ்வாய் பார்த்தாலும், சகோதர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
3-ஆம் அதிபதி சனி சுக்கிரன், சந்திரன் போன்ற பெண்கிரகச் சேர்க்கை பெற்று, 3-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப்பெற்றாலும், 3-ஆம் வீட்டை சுக்கிரன், சந்திரன் பார்த்தாலும், இளைய சகோதரி பாக்கியம் உண்டாகும். சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று பலமிழந்தாலும், அலிகிரகம் என வர்ணிக் கப்படக்கூடிய புதன் வீட்டில் அமையப்பெற் றாலும், இளைய சகோதர, சகோதரி தோஷ மாகும். சகோதர காரகன் செவ்வாய் நீசம் பெற்றாலும், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், செவ்வாய், சனி பாவி களுக்கிடையே அமையப்பெற்று, சுபர் பார்வை யின்றி இருந்தாலும் சகோதர தோஷமாகும்.
3-ஆம் வீடு முயற்சி ஸ்தானமாகும். உபஜெய ஸ்தானமான 3-ஆம் வீட்டில் பாவகிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்றவர்கள் சுபர் பார்வையுடன் அமையப்பெற்றால், எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தனித்து விளங்கக்கூடிய அமைப்புண்டாகும்.
3- ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் அமையப் பெற்றாலும், 3-ஆம் அதிபதி சனி- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், கலை, இசை போன்றவற்றில் அதிக நாட்டம் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001