சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த் தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண் போம்.
11-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவருக்கு ஏற்படக்கூடிய லாபங்கள், மூத்த உடன்பிறப்பு பற்றித் தெளிவாகக் கூறலாம்.
சிம்ம லக்னத்திற்கு 11-ஆம் வீடு புதனின் வீடு என்பதால், தொழில், வியாபாரத் தின்மூலம் அபரிதமான யோகத்தை அடையும் அமைப்புண்டு. புதன் ஆட்சி, உச்சம் பெற்றுக் காணப்பட்டாலும், குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும், லக்னாதிபதி சூரியன் சேர்க்கை பெற்று வலுவ
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த் தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண் போம்.
11-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவருக்கு ஏற்படக்கூடிய லாபங்கள், மூத்த உடன்பிறப்பு பற்றித் தெளிவாகக் கூறலாம்.
சிம்ம லக்னத்திற்கு 11-ஆம் வீடு புதனின் வீடு என்பதால், தொழில், வியாபாரத் தின்மூலம் அபரிதமான யோகத்தை அடையும் அமைப்புண்டு. புதன் ஆட்சி, உச்சம் பெற்றுக் காணப்பட்டாலும், குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும், லக்னாதிபதி சூரியன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப்பெற்றாலும் தாராள தனவரவு உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகமான சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப்பெற்றால், வாழ்வில் ஏற்றங்கள் பல ஏற்படும். புதன் 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், பாதக ஸ்தானமான 9-ல் அமையப்பெற்றா லும் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இடையூறுகள் ஏற்படும்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதி பதி என்பதால், சகோதரவழியில் ஏற்படக் கூடிய அனுகூலங்களைவிட சகோதரி வழியில்தான் அனுகூலம் இருக்கும். 11-ஆம் வீடு மூத்த சகோதர, சகோதரி ஸ்தானமாகும். 11-ஆம் அதிபதி புதன், ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குருவுடன் பலமாக அமையப்பெற்றால், மூத்த சகோதர யோகமும், அவர்கள்மூலம் நல்ல தனலாபமும், பல்வேறு வகையில் அனுகூலங்களும் உண்டாகும். 11-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றால், மூத்த சகோதரி யோகமும், கிரகநிலைக்கேற்ப அவர்கள்மூலம் ஏற்றத் தாழ்வுகளும் உண்டாகும். சனி, ராகு போன்ற பாவிகள் 11-ஆம் வீட்டில் அமையப்பெற்றால், உடன்பிறப்பு வகையில் பிரச்சினைகளும், தேவையற்ற கருத்து வேறுபாடும் உண்டாகும்.
12-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு விரயங்கள், கட்டில் சுகம் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.
சிம்ம லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி சந்திரன் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருப்பதும், சுபர் பார்வை பெறுவதும், சந்திரன் 6, 8-ல் மறைவதும் விரயங்களைக் குறைக் கும். 12-ஆம் அதிபதி சந்திரன் வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாவராகவும் செயல்படுவதால், வளர்பிறையில் பிறந்திருந்தால் நற்பலனை அடையும் வாய்ப்புண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சூரியன், புதனைவிட சந்திரன் பலம் பெறுவது நல்லதல்ல. சந்திரன், புதனைவிட பலம்பெற்றால் விரயங்கள் அதிகமாக இருக்கும்.
வளர்பிறையில் பிறந்து, சந்திரன் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பு என்பதால், நிம்மதியான உறக்கம், தாம்பத்திய வாழ்வில் நிறைவு ஆகியவை உண்டாகும். சந்திரன்- சனி, ராகு- கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும், தேய்பிறையில் பிறந்திருந்தாலும், சுபர் பார்வையின்றி இருந்தாலும், சுகவாழ்வு பாதிப்பு, கண்களில் பாதிப்பு உண்டாகும்.
சந்திரன் 9-ல் அமையப்பெற்று, 9-ஆம் அதிபதி செவ்வாய் 12-ல் அமையப்பெற்று, செவ்வாய்- சந்திரன் பரிவர்த்தனை பெற் றாலும், சந்திரன்- சனி பரிவர்த் தனை பெற்று அமையப்பெற் றாலும், சந்திரன்- சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று வலுவுடன் காணப்பட்டாலும், கடல்கடந்து அன்னிய நாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திரன்- செவ்வாய் சேர்க்கை, சந்திரன்- ராகு சேர்க்கை பெற்று, அதன் தசா, புக்தி நடைபெற்றால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
(அடுத்த இதழில் கன்னி லக்னம்)
செல்: 72001 63001