Advertisment

12 லக்னப் பலன்கள்...! 8

/idhalgal/balajothidam/12-lagnam-benefits

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 4, 5-ஆம் பாவங்கள் வரை ஏற்கெனவே பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

Advertisment

6-ஆம் பாவம் ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக் கொண்டு பகை, எதிர்ப்பு, கடன் பிரச்சினை, நோய் (ருண ரோகம்) பற்றி அறியலாம்.

guruரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6-ஆம் அதிபதி சுக்கிரனே லக்னாதிபதியும் ஆகும். லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமும் தர்மகர்மாதிபதியுமான சனி 6-ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமையப்பெற் றாலும், 6-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றாலும் எதிர்ப்பில்லாத வாழ்வு உண்டாகும். 6-ஆம் வீடு சூரியனுக்கு நீச வீடு என்பதால் 6-ல் சூரியன் அமையப்பெற் றாலும், 6-ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார் வை செய்தாலும் தேவையற்ற பகைமை உண்டா கும். 6-ஆம் அதிபதி சுபகிரகச் சேர்க்கை யுடன் அமையப்பெற்றால் பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

சுக்கிரன் சுபர் சேர்க்

சுக்கிரன் சுபர் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற் றால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன்- சூரியன் சேர்க்கை பெற்றாலும், 6-ல் சூரியன் இருந்தாலும் உஷ்ண நோய்கள், பகைவர்களால் தொல்லை, பில்லிலி சூன்யத் தால் பாதிப்பு; சுக்கிரன்- சந்திரன் சேர்க்கை பெற்றாலும், 6-ல் சந்திரன் இருந்தாலும் நீர் தொடர்பான உடல் பாதிப்பு; சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், 6-ல் செவ்வாய் இருந்தாலும் ரத்த சம்பந்தமான பாதிப்புகள்; 6-ல் குரு இருந்தால் வாதம், பித்தம், வயிறு பாதிப்பு ஏற்படும். சுக்கிரன்- சனி சேர்க்கை பெற்றிருந்தாலும், 6-ல் சனி இருந்தாலும் ஓரளவுக்கு நற்பலன் உண்டாகும்.

Advertisment

சுக்கிரன் 5-ல் நீசம் பெற்று ராகு, கேது பாவிகள் சேர்க்கை பெற்றால் ரகசிய நோய்கள் உண்டாகும். சுக்கிரன் நீசம் பெற்றாலும், சுக்கிரனை ஒட்டியே சஞ்சரிக்கும் அந்த வீட்டின் அதிபதி புதனுடன் இருந் தாலும், புதன் துலாத்தில் இருந்து சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை பெற்றாலும் நீசபங்கம் உண்டாகும் என்பதால் பெரிய அளவில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

சுக்கிரன்- சனி சேர்க்கை பெற்று 6-ல் இருந்தாலும், சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணத்தில் இருந்தாலும், சுபர் பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருந்தாலும் கடன் பிரச்சினைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அடைக்கும் ஆற்றல், கடன் வாங்கி வாழ்வில் முன்னேறும் அமைப்பு உண்டாகும். 6-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் அமையப் பெற்று சனி வலுவிழந்து காணப்பட்டால் கடன் பிரச்சினைகள் அதிகம் ஏற்படும்.

7-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் ஆகியவற்றைத் தெளிவாக அறியலாம். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமைந்து குரு பார்வை பெற்றாலும், செவ்வாய்- சூரியன், குரு, சந்திரன் போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற் றாலும், மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். செவ்வாய் உச்சம் பெற்றாலும், சுக்கிரன் வலுப்பெற்றாலும் மனைவியால் செல்வம், செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை, திருமணத்தின்மூலமாக வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்.

சூரியன்- குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் 7-ஆம் வீட்டில் தனித்து அமைந்தால் நல்ல அந்தஸ்துள்ள இடத்தில் வாழ்க்கைத்துணை அமையும்.

செவ்வாய்- புதன் இணைந்தாலும் செவ்வாய்- குரு இணைந் தாலும் விருப்பத்தின்பேரில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

செவ்வாய்- சந்திரன் இணைந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றாலும், ரிஷப லக்னத் திற்கு 7-ஆம் வீடு சந்திரனுக்கு நீச வீடு என்பதால் 7-ல் சந்திரன் அமைவது நல்லதல்ல. 7-ல் சந்திரன் அமையப் பெற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணையோ திருமணமான பெண்ணையோ திருமணம் செய்யும் சூழ்நிலை உண்டாகும்.

7-ல் சனி, ராகு-கேது போன்ற பாவ கிரகங்கள் அமைந்தாலும், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.

7-ஆம் வீட்டில் சந்திரன், புதன் இணைந்திருந்தாலும், சந்திரன், சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும் வாழ்க்கைத்துணையின் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.

ரிஷப லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் கடகத்தில் அமையப்பெற்று வலுவான நீசபங்க ராஜயோகம் இல்லாமல் இருந்து, சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றால் தவறான பழக்கவழக்கங்களால் மணவாழ்க்கைபாதிப்படையும். 7-ஆம் வீட்டைக்கொண்டு கூட்டுத் தொழில் பற்றியும் கூறமுடியும். 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று 10-ஆம் அதிபதியான சனியின் சேர்க்கை பெற்று குரு பார்வை பெற்றால் கூட்டுத்தொழில்மூலம் சிறப்பான பலனை அடையமுடியும். செவ்வாய் 10-ல் அமையப்பெற்று குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந் தால் உறுதியாக கூட்டுத்தொழில் மூலம் வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும்.

ரிஷப லக்னத்தின் மற்ற பாவங்கள்

அடுத்த இதழில்...

செல்: 72001 63001

bala220219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe