12 லக்னப் பலன்கள்! 44

/idhalgal/balajothidam/12-lagnam-benefits-0

முனைவர் முருகு பாலமுருகன்

44

கர லக்னம் 3-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

4-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரது சுகவாழ்வு, வீடு, வாகனயோகம், பூமி, மனையோகம், தாய், கல்வி, பெண்களுக்குக் கற்பு போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

மகர லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும்; திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும்; தனக்கு நட்பு கிரகமான குரு, சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றாலும்; சுக்கிரன் சேர்க்கை பெற்று பலம்பெற்றாலும் சுகபோக வாழ்க்கை, சொந்த வீடு யோகம் அமையும். செவ்வாய்- சுக்கிரன் பலம் பெறுவது மட்டுமின்றி, செவ்வாய் சுபகிரகச் சேர்க்கை- பார்வை பெறுவதன்மூலம் சொந்த வீடு ஏற்படும்.

சுக்கிரன் சுகவாழ்வு, வீடு, வாகனத்திற்குக் காரகன்; மகர லக்னத்திற்கு 5, 10-க்கு அதிபதியாகி மிகச்சிறந்த யோகக் கா

முனைவர் முருகு பாலமுருகன்

44

கர லக்னம் 3-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

4-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரது சுகவாழ்வு, வீடு, வாகனயோகம், பூமி, மனையோகம், தாய், கல்வி, பெண்களுக்குக் கற்பு போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

மகர லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும்; திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும்; தனக்கு நட்பு கிரகமான குரு, சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றாலும்; சுக்கிரன் சேர்க்கை பெற்று பலம்பெற்றாலும் சுகபோக வாழ்க்கை, சொந்த வீடு யோகம் அமையும். செவ்வாய்- சுக்கிரன் பலம் பெறுவது மட்டுமின்றி, செவ்வாய் சுபகிரகச் சேர்க்கை- பார்வை பெறுவதன்மூலம் சொந்த வீடு ஏற்படும்.

சுக்கிரன் சுகவாழ்வு, வீடு, வாகனத்திற்குக் காரகன்; மகர லக்னத்திற்கு 5, 10-க்கு அதிபதியாகி மிகச்சிறந்த யோகக் காரகனாவார். செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமைந்துவிட்டால் சொந்த வீடு யோகம், சுகபோக வாழ்க்கை, வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன்- செவ்வாய் பலம்பெறுவது மட்டுமின்றி, சந்திரனுக்கு 4-ஆம் அதிபதியும் பலம் பெற்றால் வாகனயோகம், அசையா சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

செவ்வாய் பூமி காரகன் என்பதால், செவ்வாய் பலம்பெற்றிருப்பதன்மூலம் பூமியோகம், மனையோகம் இயற்கையாகவே அமையும். செவ்வாய், லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்றாலும்; சுக்கிரனுடன் சனி இருந்தாலும் பழைய வீட்டை வாங்கி அதனை அனுபவிக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். செவ்வாய்- சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றிருந்தால் பூர்வீக சொத்து, தந்தைவழியில் சொந்த வீடு யோகம், பூமியோகம் உண்டாகும். செவ்வாய்- சுக்கிரன் இணைந்தால் பெண் களால் அனுகூலத்தை அடையமுடியும். செவ்வாய்- சுக்கிரனுடன் சந்திரன் இணைந்தால் மனைவிமூலம் அசையா சொத்துகள் கிடைக்கும். செவ்வாய்- சந்திரன் சேர்க்கை பெற்றாலும்; சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றாலும் மனைவி மூலம் சொத்துகள், கூட்டால் அசையா சொத்து யோகம் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும்; செவ்வாய் நீசம் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ, வக்ரம் பெற்றோ இருந்தாலும் சொத்து ஏற்பட தடை உண்டாகும்.

4-ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றனவோ, செவ்வாய்- சுக்கிரன் எத்தனை கிரகச்சேர்க்கை பெறுகிறதோ, அக்கிரகங்களின் சுபத் தன்மைக்கேற்ப அத்தனை வீடுகள் உண்டாகும். 4-ஆம் வீட்டுடன் தொடர்புடைய கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் சொந்த வீடு யோகம் ஏற்படும்.

4-ஆம் வீடு தாய் ஸ்தானம். 4-ஆம் அதிபதி செவ்வாய், தாய்க்காரகன் சந்திரன் கேந்திர, திரிகோணங்களில் அமையப் பெற்று சுபகிரகச் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். செவ்வாய் பலமிழந்து 4-ஆம் வீடான மேஷத்திலோ, சந்திரனின் வீடான கடகத்திலோ சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றால் தாய்க்கு பாதிப்பு, தாய்வழி உறவினர்களுடன் பகையுண்டாகும். செவ்வாய்- சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் தாய்க்கு கண்டம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீடு கல்வி ஸ்தானம்.

கல்விக்காரகன் புதன். 4-ஆம் அதிபதி செவ்வாயும் புதனும் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோணங் களில் அமையப்பெற்றால் கல்வியில் சிறப்பான பலன்கள் உண்டாகும். 4-ஆம் அதிபதி செவ்வாய் என்பதால் சிறந்த நிர்வாகியாகத் திகழ்வார்கள். செவ்வாய் பலம்பெறுவதன்மூலம் நிர்வாகத் தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பக் கல்வி யோகத்தை உண்டாக்கும். செவ்வாய்- குரு சேர்க்கை பெற்றிருந்தால் சிறந்த நிர்வாகியாகவும், சிறந்த ஆலோசகராக விளங்குவதற்கு வழிவகுக்கும் கல்வியும் அமையும்.

சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசாங்க நிர்வாகத் தொடர்புடைய கல்வி; செவ்வாய்- புதன் சேர்க்கை பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், வங்கித் துறை, பங்குச்சந்தை தொடர்புடைய கல்வி; செவ்வாய்- சந்திரன், ராகு சேர்க்கை பெற்றால் ரசாயனம், மருந்து, மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை தொடர்புடைய கல்வி; செவ்வாய்- சூரியன், புதன் சேர்க்கை பெற்றால் பொறியியல், கம்ப்யூட்டர் கல்வி, பல மொழிகள் அறியக் கூடிய கல்வி உண்டாகும். செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் கலை, இசை, நவீன கல்வியைக் கற்கக் கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் பலத்துடன் இருந்தால் தெலுங்கு மொழியில் நாட்டம் ஏற்படும். 4-ல் சூரியன் இருந்தால் சாஸ்திரக் கல்வியில் ஈடுபாடுண்டாகும். செவ்வாய்- புதன் பலமிழந் தால் சோம்பேறித்தன்மை ஏற்படும். 4-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால் கல்வியில் இடையூறு ஏற்படும். 4-ஆம் வீட்டையோ செவ்வா யையோ பாவிகள் பார்த்தால் கற்ற கல்வியை முழுமையாகப் பயன்படுத்தமுடியாது.

bala151119
இதையும் படியுங்கள்
Subscribe