12 லக்னப் பலன்கள்! 21

/idhalgal/balajothidam/12-lagna-palans-21

21

முனைவர் முருகு பாலமுருகன்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர் களில், 2-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

3-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு சுயமுயற்சி, வீரம், விவேகம், ஆண்மை பலம், இளைய சகோதர- சகோதரி யோகம் போன்றவற்றைத் தெளி வாகக் கூறலாம்.

சிம்ம லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி பெண் கிரகமான சுக்கிரன் என்பதால், சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்று, சந்திரன் சேர்க்கைபெற்று, கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றிருந்தால், சகோதரி யோகம் உண்டாகும் வாய்ப்பு, சகோதரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

3-ஆம் வீட்டில் ஆண் கிரகங் களான செவ்வாய், குரு பலமாக இருந்தாலும், 3-ஆம் அதிபதி சுக்கிரன் கேந்திர- திரிகோணத் தில் செவ்வாய், குரு, சூரியன் சேர்க்கை பெற்றிருந்தாலும், இளைய ஆண் உடன்பிறப்பு அமையும். சிம்ம லக்னத்திற்குச் செவ்வாய் பாதகாதிபதி என்ப தால், செவ்வாய் திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற் றாலும், 3, 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமை யப்பெற்றாலும் மட்டுமே உடன் பிறந்த சகோதரவழியில் அனுகூலம் இருக்கும்.

சுக்கிரன், செவ்வாய் பலமி ழந்து, மிதுனம், துலாத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமை யப்பெற்று, சுபர் பார்வையின்றி இ

21

முனைவர் முருகு பாலமுருகன்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர் களில், 2-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

3-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு சுயமுயற்சி, வீரம், விவேகம், ஆண்மை பலம், இளைய சகோதர- சகோதரி யோகம் போன்றவற்றைத் தெளி வாகக் கூறலாம்.

சிம்ம லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி பெண் கிரகமான சுக்கிரன் என்பதால், சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்று, சந்திரன் சேர்க்கைபெற்று, கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றிருந்தால், சகோதரி யோகம் உண்டாகும் வாய்ப்பு, சகோதரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

3-ஆம் வீட்டில் ஆண் கிரகங் களான செவ்வாய், குரு பலமாக இருந்தாலும், 3-ஆம் அதிபதி சுக்கிரன் கேந்திர- திரிகோணத் தில் செவ்வாய், குரு, சூரியன் சேர்க்கை பெற்றிருந்தாலும், இளைய ஆண் உடன்பிறப்பு அமையும். சிம்ம லக்னத்திற்குச் செவ்வாய் பாதகாதிபதி என்ப தால், செவ்வாய் திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற் றாலும், 3, 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமை யப்பெற்றாலும் மட்டுமே உடன் பிறந்த சகோதரவழியில் அனுகூலம் இருக்கும்.

சுக்கிரன், செவ்வாய் பலமி ழந்து, மிதுனம், துலாத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமை யப்பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தால் உடன்பிறப்பு இல்லை.

ddd3-ஆம் பாவம் வீரம், விவேகம் மற்றும் ஆண்மை யைக் குறிக்கும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சூரியன் வலுவாக இருந்தால், வீரம், விவேகம் சிறப்பாக இருக்கும்.

சூரியனுக்கு 3-ஆம் வீடு நீச ஸ்தானமாகும். சூரியன் 3-ல் அமையப் பெற்று, சுக்கிரனும் அஸ்தங்கம் பெற்றோ, வக்ரம் பெற்றோ இருந்தாலும், குரு வக்ரம் பெற்றிருந்தாலும் ஆண்மைக்குறைபாடு இருக்கும்.

சுக்கிரன் கலை, இசைக்குக் காரகன் என்பதால், இயற்கை யாகவே கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் இருக்கும்.

3-ஆம் அதிபதி சுக்கிரன், சந்திரனுடன் இணைந்து சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாத்திலோ, சந்திரனின் வீடான கடகத் திலோ இருந்தால் இசைத்துறையில் ஈடுபாட்டைக் கொடுக்கும். சுக்கிரன்- சந்திரன், ராகு- கேது சேர்க்கை பெற்று 3-ல் இருந்தால், நகைச்சுவையாகப் பேசும் திறமை உண்டாகும்.

4-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக்கொண்டு சொந்த வீடு, வாகனயோகம், கல்வி, தாய் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.

சிம்ம லக்னத்திற்கு, பூமிகாரகன் செவ்வாயே 4-ஆம் அதிபதி என்பதால், செவ்வாய் ஆட்சி, உச்சம்பெற்றாலும், திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும், சொந்தமாக பூமி, மனை அமையும் யோகம் உண்டாகும். செவ்வாய் வலுப்பெற்று, சுக்கிரன் கேந்திர திரிகோணத்தில் வலுப்பெற்றாலும், ஜாத கருக்கு சொந்த வீடு யோகம் உண்டு. 4-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும். செவ்வாய்- குரு, சூரியன் போன்ற கிரகச்சேர்க்கை பெற்று அமையப் பெற்றால், தந்தை மற்றும் பூர்வீகவழிமூலமாக சொந்த வீடு யோகம் உண்டாகும். செவ்வாய்- சுக்கிரன், சனி சேர்க்கை பெற்றால், மனைவி மூலமாக சொத்துச்சேர்க்கை அமையும். செவ்வாய்- சந்திரன் புதனுடன் பலமாக இருந் தால், தாய், தாய்வழி உறவினர்கள்மூலமாக சொத்துச் சேர்க்கை அமையும்.

4-ஆம் அதிபதி செவ்வாய் சனி, ராகு- கேது போன்ற பாவகிரகச் சேர்க்கை பெற்றாலும், 4-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், செவ்வாய்- சுக்கிரன் பலவீனமாகவோ, வக்ரமாகவோ இருந்தாலும், சொந்த வீடு, வாகனயோகம் அமைய இடையூறுகள் உண்டாகும். சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்று, கேந்திர திரிகோணத்தில் பலமாகவோ இருந்தாலும், 4-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்தாலும், நவீனமான வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வலுப் பெற்று, குரு சேர்க்கை பெற்று அமையப்பெற் றால், சிறப்பான கல்வி யோகம் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப்பெற் றாலும், சுபகிரகப் பார்வை 4-ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், சிறப்பான கல்வி யோகம் அமையும். செவ்வாய்- குரு சேர்க்கைபெற்றால், நிர்வாகம் சார்ந்த கல்வி, சூரியன் சேர்க்கை பெற்றால் பொறியியல் கல்வி, செவ்வாய்- புதன், சூரியன் சேர்க்கைபெற்றால் கணக்கு, கம்ப் யூட்டர், ஆடிட்டிங் தொடர்பான கல்வி, பொறி யியல் கல்வி, செவ்வாய்- சந்திரன், ராகு சேர்க்கை யானால் மருத்துவத்தொடர்புள்ள கல்வி அமையும். சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்று, கேந்திரங்களில் புதன் அமையப் பெற்றோ, 2, 11-ல் அமையப் பெற்றோ, சூரியன் சேர்க்கை பெற்றோ சந்திரனுக்கு கேந் திரத்தில் இருந்தால், தாய் மொழிக் கல்விமூலம் மேன்மை, கணக்கு, கம்ப்யூட்டர்மூலம் நல்ல அறிவுத்திறன் பெற்று, உயர்வான அரசுப்பணி செய்யும் வாய்ப்பு, சூரியன்- புதன் சேர்க்கை குருவீட்டில் இருந் தாலும், குரு சேர்க்கை பெற்றிருந்தாலும், பல்வேறு மொழிகளில் திறமை உண்டாகும். சனி, ராகு போன்ற பாவிகள் 4-ல் இருந்தால், கல்வி கற்பதில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும்.

சிம்ம லக்னத்திற்கு 4-ஆம் வீடு தாய்க்காரகன் சந்திரனுக்கு நீச வீடு என்பதால், தாய்வழியில் மனதளவில் ஏதாவது ஒருகுறை இருக்கும். செவ்வாய் பலமாக கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்று, சந்திரனும் கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும், குரு போன்ற சுபகிரகங்கள் சந்திரன், செவ்வா யைப் பார்த்தாலும், தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். சந்திரன் ஆட்சி, உச்சம்பெற் றாலும், சுபகிரக வீட்டில் அமைந்தாலும், செவ்வாய்- சந்திரன் பலம் பெற்றிருந்தாலும், தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

செவ்வாய்-சனி, ராகு சேர்க்கைபெற்று அமையப்பெற்றாலும், சந்திரன் நீசம், பகை பெற்றோ, சர்ப்ப கிரகமான ராகு- கேது சேர்க்கை அல்லது சாரம்பெற்றோ இருந்தாலும் தாய்க்கு பாதிப்பு உண்டாகும். 4-ஆம் வீட்டிலோ, சந்தி ரனின் வீடான கடக ராசியிலோ சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலும், சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி வலுவிழந் திருந்தாலும் தாய்க்கு பாதிப்பு உண்டாகும்.

4-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபகிரகப் பார்வை 4-ஆம் வீட்டிற்கும், சுக்கிரன், செவ்வாய்க்கும் இருந் தாலும், சுகபோக வாழ்க்கை உண்டாகும். 4-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், செவ்வாய்- சுக்கிரன் பலவீனமாக இருந்து, 4-ஆம் வீட்டை சனி போன்ற பாவிகள் பார்வை செய்தாலும், இருப்பதை அனுபவிக்கத் தடை, சுகவாழ்வு பாதிப்பு உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala310519
இதையும் படியுங்கள்
Subscribe