துலா லக்னத்தில் பிறந்தவர் களில் 9-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண் போம்.
10-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக்கொண்டு தொழில், உத்தியோகம் பற்றித் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திரன், ஒரு வீட்டு ஆதிபத்தியம் கொண்டது. சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை யுடன் நட்பு கிரக வீடுகளில் அமை யப்பெற்றால், சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில்ரீதியாக கைநிறைய சம்பாதித்து சுகவாழ்க்கை வாழக் கூடிய யோகம் உண்டாகும். சந்திரன் நீர்க்காரகன் என்பதால், துலா லக்னத்திற்கு 9, 12-க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதனின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12-ல் அமையப்பெற் றால், கடல்கடந்து அந்நிய நாடு களுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக் கக்கூடிய வாய்ப்பும், அந்நிய நாட்டவர்களால் அனுகூலங் களும் உண்டாகும்.
குரு மற்றும் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று 10-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றிருந் தால், அரசு, அரசு சார்ந்த பணிகளில் உயர்பத விகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு மற்றும் சந்திரன் பலம்பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலா லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாகி யோகக்காரகனாகிய சனி பலம்பெற்று அமைந்திருந்தாலும் அரசாங்க அதிகாரியாகவும், அரசுத்துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். சந்திரனுக்கு
துலா லக்னத்தில் பிறந்தவர் களில் 9-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண் போம்.
10-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக்கொண்டு தொழில், உத்தியோகம் பற்றித் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திரன், ஒரு வீட்டு ஆதிபத்தியம் கொண்டது. சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை யுடன் நட்பு கிரக வீடுகளில் அமை யப்பெற்றால், சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில்ரீதியாக கைநிறைய சம்பாதித்து சுகவாழ்க்கை வாழக் கூடிய யோகம் உண்டாகும். சந்திரன் நீர்க்காரகன் என்பதால், துலா லக்னத்திற்கு 9, 12-க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதனின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12-ல் அமையப்பெற் றால், கடல்கடந்து அந்நிய நாடு களுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக் கக்கூடிய வாய்ப்பும், அந்நிய நாட்டவர்களால் அனுகூலங் களும் உண்டாகும்.
குரு மற்றும் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று 10-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றிருந் தால், அரசு, அரசு சார்ந்த பணிகளில் உயர்பத விகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு மற்றும் சந்திரன் பலம்பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலா லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாகி யோகக்காரகனாகிய சனி பலம்பெற்று அமைந்திருந்தாலும் அரசாங்க அதிகாரியாகவும், அரசுத்துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும் குருவும் பலம்பெற்று அமைந்தாலும் அரசுத்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும்.
துலா லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில், அந்த வீட்டதி பதியான சந்திரன் தனித்து ஆட்சிபெற்று பலமாக அமைந் திருந்தால், நீர் சம்பந்தப்பட்ட தொழில், உணவு சம்பந் தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும்.
மேலே குறிப்பிட்டதுபோல சந்திரன் நீர்க்காரகன் என்பதால், கடல்சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சூரியன், செவ்வாய் 10-ல் பலம் பெறுகிறபோது அரசுத்துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும்.
குரு 10-ல் பலம்பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில்ரீதியாக முன்னேற்றம், வாக்கால்- பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம், வக்கீல் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும். சுக்கிரன் பலம்பெற்று, உடன் சந்திரன் 10-ல் அமையப்பெற்றால், கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின்மூலம் சம்பாதிக்கக் கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம்பெற்று 10-ல் அமையப்பெற்றால், கலை, இசை, சினிமாத்துறை போன்ற வற்றின்மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம்பெற்று 10-ல் அமைந்தால், பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதன் பலம்பெற்று 10-ல் அமைந்து, குரு பார்வை இருக்குமேயானால், கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிகத் தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்கமுடியும். புதன், சந்திரன் சேர்க்கை பெற்று, 10-ல் கேது அமையப்பெற்றால், மருந்து, ரசாயனத் தொடர்புடைய தொழிலில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று சுபர் சேர்க்கையுடன் அமைந்து, 10-ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும்.
சந்திரன் பலமிழந்து, சனி 10-ஆம் வீட்டில் அமைந்தாலும், சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10-ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத்தொழில் செய்யக்கூடிய நிலை, சட்டத்திற்கு விரோதமான சில தொழில் கள்செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
சனி பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருந்தாலும், சந்திரனுக்கு இருந் தாலும் தொழில்ரீதியாக நிறைய போராட்டங்களைச் சந்திக்கநேரிடும். சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருந்து, சனி, ராகு போன்ற பாவகிரகங் களின் சேர்க்கை பெற்றால் நிலையான தொழில் அமையாமல் வாழ்க்கை போராட்டகரமாகவே இருக்கும்.
11-ஆம் பாவம்
சர லக்னமான துலாத்திற்கு 11-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். 11-ஆம் வீட்டைக்கொண்டு மூத்த சகோதரன், வாழ்வில் ஏற்படக்கூடிய லாபங்கள், நட்புகள் பற்றி அறியலாம்.
துலா லக்னத்திற்கு 11-ஆம் அதிபதி பாதகாதிபதி என்பதால், 11-ஆம் அதிபதி சூரியன் திரிகோண ஸ்தானமான 5, 9-ல் அமையப்பெற்றாலும், மறைவு ஸ்தானமான 3, 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், தனக்கு நட்பு கிரகமான சந்திரன், குரு சேர்க்கை பெற்று சாதகமாக அமையப்பெற் றாலும் லாபங்கள் சிறப்பாக இருக்கும். சூரியன்- சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், சாரம் பெற் றாலும், அனுகூலமற்ற ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் லாபங்களை அடைய முடியாது. சூரியன், லக்னாதிபதி சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், பாக் கியாதிபதி புதன் சேர்க்கை பெற் றாலும் ஓரளவுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும்.
சூரியன் தனக்கு நட்பு கிரகமான குரு, செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றால் மூத்த சகோதர யோகம் உண்டாகும். சூரியன்- சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும், 11-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றாலும் மூத்த சகோதரி யோகம் உண்டாகும்.
பொதுவாக 11-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால் மூத்த சகோதர அமைப்பு இருக்காது. இயற்கையாகவே 11-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் மூத்த உடன்பிறப்புகள் அதிகம் இருக்காது. மூத்த உடன்பிறப்புகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்காது.
சூரியன் தனக்கு நட்பு கிரகமான குரு சேர்க்கை பெற்று திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால், ஆன்மிகப் பணி, இறைப்பணிகளில் ஈடுபாடு, பொதுக் காரியங்களுக்காக செலவுசெய்யும் அமைப்பு உண்டாகும். துலா லக்னத்திற்கு சூரியன் பாதகாதிபதி என்பதால், சனி, ராகு சேர்க்கை பெறு வதும், 11-ஆம் வீட்டில் சனி, ராகு அமையப்பெற்று சுபர் பார்வையின்றி இருப்பதும் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கும். சூரியன் வலுவிழந்து மேற்கூறியவாறு அமையப்பெற்று சூரியதசை வந்தால் சட்டச்சிக்கல்களை சந்திக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
12-ஆம் பாவம்
லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு விரயங்கள், அயன, சயன, போகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்று 12-ல் இருந்தாலும் அல்லது மிதுனத்தில் ஆட்சி பெற்றாலும், புதன் தனது நட்பு கிரகமான சனி வீடான மகரம், கும்பத்தில் அமையப்பெற்றாலும் ஏற்படக்கூடிய விரயங்கள் சுபவிரயங்களாகவும், வீண் செலவின்றியும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
புதன்- சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் ஏற்படும் விரயங்கள் சுபவிரயங்களாக இருக்கும். அமைதியான தூக்கம், நிம்மதியான வாழ்க்கை உண்டாகும்.
12-ல் பாவிகள் அமையாமல் சுபகிரகப் பார்வை ஏற்பட்டால், கட்டில் சுகவாழ்வு சிறப்பாக இருக்கும். 12-ல் சுக்கிரன் அமையப்பெற்று உடன் ராகு, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகள் அமையப்பெற்று, சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படாமல் இருந்தால், கட்டில் சுகவாழ்வில் பாதிப்பு, தேவையில்லாத பெண் சேர்க்கை, உறக்கத்தில் நிம்மதியற்ற நிலை, வீண்விரயங்கள், நஷ்டங்கள் உண்டாகும்.
புதன் 9, 12-ஆம் அதிபதி என்பதால், சந்திரன் சேர்க்கை பெற்றோ, ராகு, சனி சேர்க்கை பெற்றோ 9, 10, 12-ல் அமையப்பெற்றால் கடல்கடந்து அந்நிய நாடு செல்லக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். புதன் பலம்பெற்றால் அடிக்கடி பயணங்கள் நிகழும்.
(அடுத்த இதழில் விருச்சிக லக்னம்)
செல்: 72001 63001