சென்ற இதழ்வரை தனுசு லக்னம் 7-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

8-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் பாவத்தைக் கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத தனச்சேர்க்கை பற்றி அறியலாம்.

தனுசு லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி சந்திரன், லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகமாகும்.

Advertisment

லக்னாதிபதி குருவுக்கு 8-ஆம் வீடு உச்ச ஸ்தான மாகும். குரு, சந்திரன் ஆட்சி, உச்சம் பெற் றாலும், கேந்திர- திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றாலும் நீண்ட ஆயுள், சிறப் பான ஆரோக்கியம், எதிர்பாராத தனயோகம், சிறப்பான உடலமைப்பு உண்டாகும்.

சந்திரன்- குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெறுவதும், கேந்திர- திரிகோணத்தில் அமை வதும், பாவகிரகச்சேர்க்கையின்றியிருந் தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

சந்திரன் மனோகாரகன் என்பதால், நீசம் பெற்றாலும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது சேர்க்கை பெற்றாலும் கடுமையான தோஷ மாகும். சந்திரன், ராகு- கேது சேர்க்கை பெற்றால் கிரகண தோஷமாகும். இதனால் மனக்குழப்பம், மனநிலை பாதிக்கக்கூடிய அமைப்பு, நீர் தொடர்புள்ள உடல்நிலை பாதிப் புகள் உண்டாகும். சந்திரன் பலமிழந்திருந்தால் மனோதைரியம் குறைந்துவிடும்.

Advertisment

8-ஆம் வீட்டில் சூரியன் அமையப்பெற் றால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப் புகள், இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். செவ்வாய்க்கு 8-ஆம் வீடு நீச ஸ்தானமாகும். (கடகம்). செவ்வாய் 8-ல் அமை யப்பெற்று, சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் வெட்டுக்காயம், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்தசோகை, ரத்தப் புற்றுநோய், விபத்துகளால் உடலுறுப் புகளை இழக்கக்கூடிய அமைப்புண்டாகும்.

குரு 8-ல் அமையப்பெற்றால், கிரகச் சேர்க் கையுடன் இருப்பதும், வக்ரம் பெறாமலிருப் பதும் உத்தமம். சனி 8-ல் அமையப்பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும், பாவி களுடன் அமையப்பெற்றால் உடலில் பலவீ னம் ஏற்படும். புதன் 8-ல் அமையப்பெற்று பலமிழந்தால் நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்திக்குறைவு போன்ற உடல்நிலை பாதிப் புகள் உண்டாகும்.

8-ல் ராகு பலமிழந்தால் தவறான பழக் கவழக்கங்களால் உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். கேது அமையப்பெற்றால், மனக் குழப்பம், விஷத்தால் கண்டம் உண்டாகும்.

9-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக் கொண்டு பாக்கியம், செல்வம், செல்வாக்கு, தானதர்மம், தந்தை போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.

தனுசு லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சூரியன்.

தந்தைக்காரகன் சூரியன் 9-ஆம் அதிபதி என்பதால், காரகோ பாவ நாசரீதியாக 9-ல் அமைவது சிறப்பல்ல. சூரியன் தனக்கு நட்பு கிரகமான குரு, செவ்வாய், சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், தந்தைக்கு அனுகூலமும், நீண்ட ஆயுள், ஆரோக்கியமும் உண்டாகும்.

சூரியன்- சந்திரன், குரு சேர்க்கை பெற்று பலம்பெற்றால், தாராள தனவரவு அமைவது மட்டுமின்றி, பல்வேறு தானதர்மக் காரியங் களைச் செய்யுமளவிற்கு பலம், வலிமை உண்டாகும்.

சூரியன் நீசம் பெறுவதும், சனி வீடான மகரம், கும்பத்தில் அமைவதும், சூரியன்- சனி, ராகு- கேது சேர்க்கை, சாரம் பெறுவதும் தந்தைக்கு கண்டத்தையும், ஆரோக்கிய ரீதியான பாதிப்பையும் உண்டாக்கும். சூரியன் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமையப் பெற்றால் தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். சூரியன் பலம்பெறுவது மட்டு மின்றி, சந்திரனுக்கு 9-ஆம் அதிபதியும் பலம் பெற்றால் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

சூரியன் பலமிழப்பதும், இரு பாவிகளுக் கிடையே அமைவதும் சிறப்பல்ல.

சூரியன் தனுசு லக்னத்திற்கு 9-ஆம் அதிப தியுமாவதால், அவர் குரு சேர்க்கை பெற்று அமையப்பெற்றால், தந்தைவழியில் வீடு, வாகன யோகம், செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உண்டாகும். சூரியன், செவ்வாய், சேர்க்கை பெற்று குரு பார்வை பெற்றால், பூர்வீக சொத்துமூலமாக ஏற்றம், உயர்வுண்டாகும்.

சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், பெரும்பாலும் சூரியன் சேர்க்கை பெற்றிருப் பார். தனுசு லக்னத்திற்கு சூரியன்- புதன் இணைவதன்மூலம் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால், தாராள தனவரவை அடையும் அமைப்பு, சமுதாயத்தில் உயர்வான நிலையை அடையும் யோகம் உண்டாகும். சூரியன்- புதன் இணைந்து, உடன் செவ் வாய் இருந்தால் வெளியூர் யோகம் உண்டாகும். 9-ல் சனி, ராகு அமையப் பெற்றால் தந்தைக்குக் கெடுதி என்றாலும், சனி, ராகுவுடன் சந்திரன், புதன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று 9-ல் இருந்தால், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.

10-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

தனுசு லக்னத்திற்கு புதன் 10-ஆம் அதிபதி. புதன் ஆட்சி, உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால், நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து செயல்படக்கூடிய திறன் போன்றவை யாவும் சிறப்பாக இருக்கும். புதனே ஜீவனாதிபதியாக விளங்குவதால்- பலம் பெற்றிருந்தால், தொழில், உத்தியோகரீதியாக சிறப்பான உயர்வினை அடையமுடியும்.

புதன் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன், லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைந்தால், நிலையான தொழிலும், சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று, சூரியன், செவ்வாய் 10-ல் அமையப்பெற்றால், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்பத விகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்குக் காரகன் என வர்ணிக்கக்கூடிய சனி வலிமை பெற்று, 10-ல் சூரியன், செவ்வாய் இருந்தால், அரசாங் கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடிவரும்.

அதிகாரம்மிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10-ல் சூரியன், செவ்வாய் இருந்தாலும், புதன்- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரி யக்கூடிய வாய்ப்புண்டாகும்.

புதனுடன் 9, 12-க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து, 9, 12-ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல்கடந்து அந்நிய நாடு களுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்புண்டாகும். புதன் பலம் பெற்று, உடன் சனி, சுக்கிரன் சேர்க்கை யுடன் வலிமையாக அமையப்பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடிகட்டிப் பறக்கும் யோகம் உண்டாகும்.

புதன்- செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாயத் தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புண்டாகும். 10-ல் புதன்- சந்திரன் சேர்க்கை பெற்று, பலம்பெற்றால் நீர் தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.

pppபுதனுடன் சனி சேர்க்கை பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத்தொழில் செய்யக்கூடிய சூழ் நிலையும் உண்டாகும்.

புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர- திரிகோணங்களில் அமையப்பெற்று குரு பார்த்தால், பெண்கள்வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப் புண்டாகும். புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப்பெற்றால் கலை, இசை, இலக் கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்புண்டாகும்.

புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச்சந்தை போன்றவற்றில் அனுகூலமும், குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூலாசிரியர், பதிப் பகம், பத்திரிகைத்துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ்பெறக்கூடிய யோகமும் அமையும்.

புதன் பலமிழந்தாலும், பாவிகளுக் கிடையே அமையப்பெற்றாலும், புதனுக்கு 7-ல் சனி, செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மை யடைய இடையூறுகள் உண்டாகும். ராகு- கேது போன்ற பாவிகளின் சேர்க்கை பெற் றால் சட்டத்திற்குப் புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.

தனுசு உபய லக்னம் என்பதாலும், புதன் 10-ஆம் அதிபதி மட்டுமின்றி 7-ஆம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந் தால் மட்டும் கூட்டால் நற்பலனைப் பெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத்தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது,

11-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டைக்கொண்டு லாபங்கள், மூத்த உடன்பிறப்பு பற்றித் தெளிவாக அறியலாம்.

தனுசு லக்னத்திற்கு லாப ஸ்தானாதிபதி சுக்கிரன் என்பதால், பொருளாதாரரீதியாக ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, சனி, புதன் போன்ற நட்பு கிரகச் சேர்க்கை பெற்றோ அமையப் பெற்றால் எதிர்பாராத தனலாபம், நவீன பொருட்களை அடையும் யோகம், பெண் களால் அனுகூலம் உண்டாகும்.

11-ஆம் வீடு சனி உச்சம்பெறும் ஸ்தானம் என்பதால், 11-ல் சனி அமையப்பெற்றால் வாழ்வில் மிகப்பெரிய அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரன் 8, 12 ஆகிய ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும், கன்னியில் நீசம் பெற்று, பலமான நீசபங்க ராஜயோகம் இல்லாமலிருந்தாலும், வாழ்வில் பொருளா தாரரீதியாக நஷ்டங்களை சந்திக்கக்கூடிய அமைப்பு, லாபங்கள் அடைய இடையூறுகள் உண்டாகும்.

லாப ஸ்தானமான 11-ஆம் வீடு மூத்த உடன்பிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். தனுசு லக்னத்திற்கு 11-ஆம் வீடு சுக்கிரன் வீடு என்பதால் மூத்த சகோதரி யோகம் பலமாக இருக்கும். 11-ஆம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றாலும், சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று 11-ல் பாவிகள் இல்லா மலிருந்தாலும், மூத்த சகோதரி யோகம் பலமாக உண்டாகும். குரு, செவ்வாய் போன்ற ஆண் கிரகங்கள் 11-ல் அமையப்பெற்றால் மூத்த சகோதர யோகம் உண்டாகும். 11-ஆம் வீடு சுக்கிரனின் வீடு என்பதாலும், குருவுக்கு பகை வீடு என்பதாலும், சூரியனுக்கு நீச வீடு என்பதாலும், ஆண் மூத்த சகோதர உடன் பிறப்பு இருப்பது அரிது. 11-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால் மூத்த உடன்பிறப்பு இருக்காது. சுக்கிரன் பலம்பெற்றால், உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும்.

12-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு ஏற்படக்கூடிய விரயங் கள், கட்டில் சுகம், வெளியூர்ப் பயணம் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.

தனுசு லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி செவ்வாய், லக்னாதிபதி குரு மற்றும் லாபாதிபதி சுக்கிரனைவிட பலம் பெறுவது நல்லதல்ல. செவ்வாய்- குரு சேர்க்கை பெற்றோ, குரு பார்வை பெற்றோ அமையப் பெற்றால் ஏற்படக்கூடிய விரயங்கள் சுபவிரயங்களாக இருக்கும். செவ்வாய் நட்பு வீட்டில் அமைவதும், ஆட்சி, உச்சம் பெறுவதும், 6-ஆம் வீட்டில் அமைவதும் அனுகூலத்தைத் தரும்.

உஷ்ண கிரகமான செவ்வாய் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால், தவறான பழக்கவழக்கங்களால் விரயங்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, கண்களில் பாதிப்பு உண்டாகும்.

செவ்வாய் குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றால் கட்டில் சுகவாழ்வு சிறப்பாக இருக்கும். சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 12-ல் பாவிகள் அமையப்பெற்றால் கட்டில் சுகவாழ்வில் பாதிப்புகள் ஏற்படும். செவ்வாய் சூரியன், புதன் சேர்க்கை பெற்றாலும், 12-ல் ராகு அமையப்பெற்றாலும், செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்றாலும், அதன் தசாபுக்திக் காலங்களில் வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய அமைப்புண்டாகும்.

செவ்வாய் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைபெற்றால் வீண்விரயங்கள் ஏற்படக்கூடிய அமைப்பு, உடன்பிறந்த வர்களால் விரயங்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, தவறான சேர்க்கை- அதனால் சமுதாயத்தில் அவப்பெயர் உண்டாகும்.

(அடுத்த இதழில் மகர லக்னம்)

செல்: 72001 63001