கடக லக்னத்தில் பிறந்தவர்களின் 4-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம். 5-ஆம் பாவம் ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக் கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர் கல்வி போன்றவற்றினைத் தெளிவாக அறியலாம்.
கடக லக்னத்தில் பிறந் தவர்களுக்கு 5-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும், புத்திரகாரகன் குரு பலம் பெற்றாலும் அழகான புத்திர பாக் கியம் அமையும்.
செவ்வாய் ஆண் கிரகங்களான குரு, சூரியன் சேர்க்கை பெற்றோ ஆண் கிரகங்களின் வீடுகளான மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனத்தில் அமையப் பெற்றோ இருந்தால் ஆண் புத்திர பாக்கியம் உண்டாகி, அதன்மூலம் சிறப்பு மிக்க பலன் ஏற்படும்.
5-ஆம் வீட்டில்
சுக்கிரன் வலுவாக அமையப் பெற்று, செவ் வாய், குரு பலமிழந்திருந்தால் பெண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்று, 5-ஆம் அதிபதி செவ்வாயும் புத்திர காரகன் குருவும் பாவ கிரக சேர்க்கையின்றி வலுப் பெற்றிருந்தாலும், குருவின் வீடான தனுசு மீனத்தில் சனி, ராகு இல்லாமல் இருந்தாலும் புத்திர வழியில் சிறப்பு மிக்க பலன் உண்டாகும்.
செவ்வாய்- சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 5-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது, புதன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்ôலும் புத்திர பாக்கியம் ஏற்பட இடையூறுகள், தடை ஏற்படும்.
செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று அமையப் பெற்றாலும், 5-ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெறாமல் குரு போன்ற சுபர்கள் பார்வை 5-ஆம் வீட்டிற்கு இருந்தாலும், தந்தைகாரகன் சூரியனும், 9-ஆம் அதிபதி குருவும் வலுவாக இருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங் கள் உண்டாகும். செவ்வாய்- சூரியன் சேர்க்கை பெற்று மேஷம், சிம்மம், விருச்சிகம், மீனத்தில் அமையப் பெற்றால் தந்தையாலும், தந்தைவழி பூர்வீகத்தாலும் அளவுக்கு அதிகமாக சொத்துகள் கிடைக்கும். செவ்வாய்- சூரியனுடன் இணைந்து வலுப்பெறுகின்றபோது தந்தைவழி உறவினர்கள் மூலம் சிறப்பு மிக்க பலன் உண்டாகும். செவ்வாய் வலுப்பெற்றுக் காணப்பட்டால் செல்வம், செல்வாக்கு, பூமி யோகம் வலுவாக அமையும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
5-ஆம் அதிபதி செவ்வாய்- குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று வலுவாக இருந்து, 5-ஆம் வீட்டில் பாவிகள் அமை யாமல் இருந்தால் உயர்கல்வி யோகம் சிறப்பாக இருக்கும். செவ்வாய்- சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், 5-ல் சனி, ராகு அமையப் பெற்றாலும், செவ்வாய், புதன் வக்ரம் பெற்றாலும் உயர்கல்வியில் தடை ஏற்படும்.
6-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக் கொண்டு எதிர்ப்பு, நோய், கடன் பற்றி அறியலாம்.
6-ஆம் வீடு உபஜெய ஸ்தானமாகும். உபஜெய ஸ்தானத்தில் பாவிகள் இருப்பது சிறப்பு என்பதால், கடக லக்னத்திற்கு 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு அமையப் பெற்று சுபகிரகப் பார்வை பெற்றிருந்தால் எதிர்ப்பில்லாத வாழ்க்கை உண்டாகும். 6-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்து 6-ல் பாவிகள் அமையப் பெற்றாலும், 6-ஆம் அதிபதி குரு தனக்கு நட்பு கிரக சேர்க்கை பெற்று சிறப்பாக அமையப் பெற்றாலும் எதிரிகளை வெல்லும் ஆற்றல், எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை அமையும். 6-ஆம் வீட்டை சனி பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதே பெரிய வேலையாகிவிடும்.
6-ஆம் அதிபதி- குரு, லக்னாதிபதி, சந்திரனின் சேர்க்கை யுடன் சுபகிரக சாரம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங் களில் அமையப் பெற்று, 6-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் நல்ல ஆரோக்கியம், திட காத்திரமான உடல் அமைப்பு உண்டாகும். 6-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்று 6-ஆம் அதிபதி சற்று வலு இழந்தாலும், வக்ரம் பெற்றாலும் நோய் நொடிகள் ஏற்பட்டு அதன்மூலம் தேக ஆரோக்கியம் பாதிக்கும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
6-ஆம் வீட்டில் சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் உஷ்ண நோய், தோல் வியாதி, இதயம் சம்பந்தபட்ட பாதிப்பு உண்டாகும். 6-ல் சந்திரன் வலு இழந்து காணப்பட்டால் ஜலத் தொடர்புள்ள பாதிப்பு, சீதளம், வாத நோய்கள் உண்டாகும். செவ்வாய் 6-ஆம் வீட்டில் வலு இழந்து காணப்பட்டால் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். 6-ல் புதன் அமையப் பெற்று பாவ கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் காச நோய், ஞாபக சக்தி குறையும் அமைப்பு, நரம்புத் தளர்ச்சி, காக்காய் வலிப்பு உண்டாகும். சுக்கிரன் வலு இழந்து 6-ல் அமையப் பெற்றால் ரகசிய நோய், வாத நோய், சர்க்கரை வியாதி ஏற்படும். சனி 6-ல் அமையப் பெற்று வலு இழந்தால் வாதம், பித்தம், உடல் பலவீனம் உண்டாகும். ராகு 6-ல் வலு இழந்து காணப்பட்டால் அஜீரணக் கோளாறு, அலர்ஜி பாதிப்பு ஏற்படும். கேது 6-ல் அமையப் பெற்று வலு இழந்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், விஷத்தால் கண்டம் உண்டாகும்.
குரு- சந்திரன், புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், குரு வலுப்பெற்று 6-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்யாமல் இருந்தாலும், கடன்களுக்குக் காரகனான சனி வலுவாக இருந்தாலும் கடன் இல்லாத வாழ்க்கை உண்டாகும். குரு, சனி பலவீனமாகவோ வக்ரம் பெற்றோ 6-ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று, 6-ஆம் அதிபதி பாவகிரகப் பார்வை, சாரம் பெற்றிருந்தால் தீராக்கடன் உண்டாகும். 6-ல் பாவிகள் அமைந்து அதன் தசா புக்தி நடைபெற்றால் உடல் ஆரோக்கிய பாதிப்பு தேவையற்ற பகை உண்டானாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல், எதிர்பாராத பணச் சேர்க்கை உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)
செல்: 72001 63001