Advertisment

12 லக்னப் பலன்கள்...! 9

/idhalgal/balajothidam/12-lagana-palans

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 6, 7-ஆம் பாவங்கள் வரை ஏற்கெனவே பார்த்தோம்.

இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

8-ஆம் பாவம்

Advertisment

8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றியும், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி குரு சுபர்சேர்க்கையுடன் கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும், ஆயுள் காரகன் சனி ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். 8-ஆம் வீடான தனுசுவில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். குரு பாவகிரகச் சேர்க்கை இல்லாமல் இருந்து, 6, 8-ல் பாவிகள் இல்லாமல் இருந்து, சுபர் பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருந்தால் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். குரு பலவீனமாக இருந்தாலும், வக்ரம் பெற்றாலும் வாயுத்தொல்லை, வயிறு பாதிப்பு ஏற்படும்.

8-ஆம் வீட்டில் சூரியன் பாவ கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் இதய நோய், உஷ்ண சம்பந்தமான பாதிப்பு, ரத்த சம்பந்தப் பட்ட நோய்கள் உண்டாகும். 8-ஆம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந் தால் நீர்த் தொடர்புள்ள பாதிப்புகள் உண்டாகும். 8-ல் செவ்வாய் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் வெட்டுக்காயம், ரத்த சம்பந்த பாதிப்புகள் உண்டாகும். 8-ல் செவ்வாய்- சனி சேர்க்கையோ, செவ்வாய்- ராகு சேர்க்கையோ ஏற்பட்டால் விபத்துகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.

8-ல் சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் ரகசிய நோய்கள், கண்களில் பாதிப்பு; புதன் அமையப் பெற்று உடன் பாவகிரகச் சேர்க்கை, பார்வை ஏ

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 6, 7-ஆம் பாவங்கள் வரை ஏற்கெனவே பார்த்தோம்.

இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

8-ஆம் பாவம்

Advertisment

8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றியும், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி குரு சுபர்சேர்க்கையுடன் கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும், ஆயுள் காரகன் சனி ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். 8-ஆம் வீடான தனுசுவில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். குரு பாவகிரகச் சேர்க்கை இல்லாமல் இருந்து, 6, 8-ல் பாவிகள் இல்லாமல் இருந்து, சுபர் பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருந்தால் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். குரு பலவீனமாக இருந்தாலும், வக்ரம் பெற்றாலும் வாயுத்தொல்லை, வயிறு பாதிப்பு ஏற்படும்.

8-ஆம் வீட்டில் சூரியன் பாவ கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் இதய நோய், உஷ்ண சம்பந்தமான பாதிப்பு, ரத்த சம்பந்தப் பட்ட நோய்கள் உண்டாகும். 8-ஆம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந் தால் நீர்த் தொடர்புள்ள பாதிப்புகள் உண்டாகும். 8-ல் செவ்வாய் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் வெட்டுக்காயம், ரத்த சம்பந்த பாதிப்புகள் உண்டாகும். 8-ல் செவ்வாய்- சனி சேர்க்கையோ, செவ்வாய்- ராகு சேர்க்கையோ ஏற்பட்டால் விபத்துகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.

8-ல் சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் ரகசிய நோய்கள், கண்களில் பாதிப்பு; புதன் அமையப் பெற்று உடன் பாவகிரகச் சேர்க்கை, பார்வை ஏற்பட்டால் நரம்புத் தளர்ச்சி; ராகு-கேது அமையப்பெற்றால் தவறான பழக்கவழக் கங்கள், அலர்ஜி, விஷத்தால் கண்டம் உண்டாகும்.

Advertisment

குரு ஆட்சி, உச்சம் பெற்று பலமாக அமையப்பெற்றால் எதிர்பாராத தன சேர்க்கை களை அடையும் யோகம் உண்டாகும்.

8-ஆம் வீடு குருவின் வீடு என்பதால் வாழ்க்கைத்துணையின் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

9-ஆம் பாவம்

9-ஆம் வீட்டைக்கொண்டு தந்தை, செல்வம், செல்வாக்கு, வசதி வாய்ப்பு களைப் பற்றி தெளிவாகக் கூறலாம்.

ரிஷப லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், 9-ஆம் பாவம் பாதக ஸ்தானம் என்பதால் 9-ஆம் பாவம் ரீதியான பலன்கள் நற்பலனை அதிகம் தருவதில்லை. 9-ஆம் அதிபதியான சனி சுபர்சேர்க்கையுடன் ஆட்சி, உச்சம் பெற்று, தந்தைக்காரகனான சூரியன் சுபர்சேர்க்கை யுடன் சுபஸ்தானங்களில் அமையப் பெறு கின்றபோது தந்தைக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். 9-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்து, 9-ல் பாவிகள் அமையப் பெறாமல் இருந்து, சூரியனுக்கு 9-ல் பாவிகள் அமையப்பெறாமல் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

சனி- சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 9-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்று சூரியன் வீடான சிம்மத்தில் பாவிகள் அமையப்பெற்றாலும் தந்தையிடம் ஒற்றுமைக்குறைவு, தந்தைவழி உறவினர் களிடையே பகைமை, வசதி வாய்ப்புகள் குறைவு, தந்தைக்கு பாதிப்பு உண்டாகும்.

சனி சுபர்சேர்க்கை பெற்று சுபர்பார்வை 9-ஆம் வீட்டிற்கு அமையப்பெற்றால் தந்தை வழியில் சொத்துகள் கிடைக்கும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு உண்டாகும்.

ரிஷப லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சனி 10-ஆம் வீட்டிற்கும் அதிபதி என்ப தால் தர்மகர்மாதிபதி ஆவார். சனி திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ல் அமையப் பெற்றிருந்தாலோ, 6-ஆம் வீட்டில் உச்சம் பெற்றிருந்தாலோ செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் உயர்வடையும். 3, 8-ல் இருந்தாலும் ஓரளவுக்கு நற்பலனை அடையமுடியும். சனி வக்ரம் பெற்றோ, பாவகிரகச் சேர்க்கைபெற்றோ மேஷம் அல்லது சிம்மத்தில் அமையப்பெற்றிருந்தால் தேவையற்ற பகைமை, பொருளாதார நெருக்கடி, ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும்.

12laganamsசனி 12-ஆம் அதிபதி செவ்வாய் சேர்க்கை அல்லது சந்திரன் சேர்க்கை பெற்று 3, 6, 12-ல் அமையப்பெற்று 9-ல் ராகு அமையப்பெற் றால் கடல்கடந்து வெளிநாடு செல்லும் யோகம், அதன்மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்டும் அமைப்பு உண்டாகும்.

10-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றி தெளிவாக அறியலாம்.

ரிஷப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதி பதி சனி. சனி 9, 10-க்கு அதிபதியாகி தர்மகர் மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கி ரனுக்கு நட்பு கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாகும். சனி ஆட்சி, உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ இருந்தால், கௌரவமான பதவிகளை வகிக்கும் யோகம், அதன்மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம்பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கையுடன் இருந்தால் சொந்தத்தொழில் செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசை நடைபெற்றால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10-ஆம் அதிபதி சனி என்பதால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

சனி, சுக்கிரனின் சேர்க்கையைப்பெற்றால் வண்டி, வாகனங்கள்மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டடத்துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று, இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றா லும், பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

சனி- புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இதுமட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10-ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழிநடத்துவது, ஆலோசனை கூறுவது, தாங்கள் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.

சனி- குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சனி- செவ்வாய் சேர்க்கையுடன் இருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டடங் களைக் கட்டி விற்கும் துறை, கட்டட வல்லுந ராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சனி- செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9, 12-ல் ராகு அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டுத் தொடர் புடைய தொழில், கடல்கடந்து அயல்நாடு களுக்குச்சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி- ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள்- குறிப்பாக பல்வேறு மறைமுகத்தொழில்களில் ஈடுபட்டு கோடிகோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலவீன மாக அமைந்துவிட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டி யிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.

10-ஆம் அதிபதி சனிக்கு சூரியன், செவ்வாய் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறையில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப் புகள் குறைவாகவே இருக்கும். கும்ப ராசியில் (10-ஆம் வீடு) அமையும் சூரியன், செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்துவிடாமல் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூரட்டாதியிலோ அமைந்திருந்தால் அரசு, அரசுசார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, குரு பார்வையுடன் இருந்தால் உயர்பதவிகள், அரசுத்துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசுவழியில் நல்ல பணியினை அடையமுடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷப லக்னத்தின் மற்ற பாவங்கள்

அடுத்த இதழில்...

செல்: 72001 63001

bala010319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe