12 லக்னப் பலன்கள்! லிமுனைவர் முருகு பாலமுருகன் 26

/idhalgal/balajothidam/12-lagana-palans-3

ன்னி லக்னத்தில் பிறந்தவர்களில் 7-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

8-ஆம் பாவம் 8-ஆம் பாவத்தைக் கொண்டு ஆயுள், ஆரோக் கியம், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றி அறியலாம்.

கன்னி லக்னத்திற்கு ஆயுள் ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும், சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். செவ்வாய் பலமாக இருந்து சனி, சூரியன், ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கை பெறா மலிருந்தாலும் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் உஷ்ண நோய், இதயக்கோளாறு, கண்களில் பாதிப்பு, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வெட்டுக்காயங்கள் உண்டாகும். செவ்வாய், சந்திரன் சேர்க்கை பெற்று வலு விழந்து அமைந்தால் நீர்த்தொடர்புள்ள உடல் பாதிப்பு, கண்களில் பாதிப்பு உண்டாகும்.

செவ்வாய், குரு சேர்க்கை பெற்று வலுவிழந்தால் சாபங்கள், அஜீரண பாதிப்பு, குடல் பாதிப்பு, எதிர்பாராத உடல் உபாதைகள் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவிழந்தால் ரகசிய உடல்நிலை பாதிப்புகள், தேவையற்ற பெண் தொடர்புகள் உண்டாகும்.

செவ்வாய், சனி சேர்க்கை பெற்று அமையப்பெற்றால் ரத்த சம்பந்த பாதிப்புகள், எதிர்பாராத விபத்துகள், உடலில் வலிமைக்குறைவு போன்ற அனுகூலமற்றவை உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் அஜீரணக்கோளாறு, விபத்துகள்மூலம் கண்டம், விஷத்தால் கண்டம் உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பெற்றால் வாகனங்களில் செல்லும்போது கவனம

ன்னி லக்னத்தில் பிறந்தவர்களில் 7-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

8-ஆம் பாவம் 8-ஆம் பாவத்தைக் கொண்டு ஆயுள், ஆரோக் கியம், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றி அறியலாம்.

கன்னி லக்னத்திற்கு ஆயுள் ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும், சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். செவ்வாய் பலமாக இருந்து சனி, சூரியன், ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கை பெறா மலிருந்தாலும் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் உஷ்ண நோய், இதயக்கோளாறு, கண்களில் பாதிப்பு, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வெட்டுக்காயங்கள் உண்டாகும். செவ்வாய், சந்திரன் சேர்க்கை பெற்று வலு விழந்து அமைந்தால் நீர்த்தொடர்புள்ள உடல் பாதிப்பு, கண்களில் பாதிப்பு உண்டாகும்.

செவ்வாய், குரு சேர்க்கை பெற்று வலுவிழந்தால் சாபங்கள், அஜீரண பாதிப்பு, குடல் பாதிப்பு, எதிர்பாராத உடல் உபாதைகள் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவிழந்தால் ரகசிய உடல்நிலை பாதிப்புகள், தேவையற்ற பெண் தொடர்புகள் உண்டாகும்.

செவ்வாய், சனி சேர்க்கை பெற்று அமையப்பெற்றால் ரத்த சம்பந்த பாதிப்புகள், எதிர்பாராத விபத்துகள், உடலில் வலிமைக்குறைவு போன்ற அனுகூலமற்றவை உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் அஜீரணக்கோளாறு, விபத்துகள்மூலம் கண்டம், விஷத்தால் கண்டம் உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பெற்றால் வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

செவ்வாய் பாவகிரகச் சேர்க்கை பெற்றால் உடல்நலப் பாதிப்புகள், ஜுரம், உஷ்ண நோய்கள், அடிக்கடி அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளும் அமைப்புண்டாகும்.

செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று குரு பார்வை செய்தால் எதிர்பாராத பணவரவுகள், இன்சூரன்ஸ் மூலம் திடீர் லாபங்கள் உண்டாகும். 8-க்கு அதிபதி செவ்வாய் என்பதால் மனைவிவழி உறவினர்களிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்காது. வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

9-ஆம் பாவம்

9-ஆம் பாவத்தைக்கொண்டு பாக்கியம், செல்வம், செல்வாக்கு, தந்தைவழி உறவினர் களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி லக்னத்திற்கு 9-ஆம் அதிபதியான சுக்கிரன் இயற்கையிலேயே சுகக்காரகன். வீடு, வாகனம், பெண் யோகம் போன்றவற்றுக்குக் காரகனான சுக்கிரனே பாக் கியாதிபதி என்பதாலும், கன்னி லக்னத் திற்கு யோகக்காரகன் என்பதாலும் சுக்கிரன் கேந்திர, திரிகோணத்திலோ, நட்பு ஸ்தா னத்திலோ அமையப்பெற்று சுபகிரகப் பார்வை, சுபர் சேர்க்கை பெற்றிருந் தால், வாழ்க்கை வசதிவாய்ப்புகளுடன் மிகச்சிறப்பாக இருக்கும்.

சூரியன், சுக்கிரன் இணைந்து நட்பு ஸ்தானங்களில் அமையப்பெற்று, அதனுடன் புதன் பலமாக இருந்தால் தந்தைவழியில் செல்வம், செல்வாக்கு ஏற்படும்.

சுக்கிரன் வலுப்பெற்று, சூரியன் ஆட்சி, உச்சம், கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றால் தந்தைக்கு நீண்ட ஆயுள், தந்தைவழியில் நிலையான செல்வம், செல்வாக்கு உண்டாகும். சுக்கிரன் தனக்கு நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றால் தந்தை, தந்தைவழியில் அனுகூலங்கள் ஏற்படும்.

129-ஆம் வீட்டில் ஒரு பாவி அமையப்பெற்றாலும், சூரியன், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் தந்தைக்கு அனுகூலமற்ற பலன் உண்டாகும். சுக்கிரன் பாவகிரக வீட்டில் அமையப்பெற்றாலும், பாவிகள் சேர்க்கை பெற்றாலும், சூரியனுக்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற் றாலும் தந்தைக்கு அனுகூலமற்ற பலன் உண்டாகும். சுக்கிரன் நீசம் பெற்றோ, செவ்வாய் வீடான 3, 8-ல் அமையப்பெற்றோ இருந்து, சூரியன் வலுவிழந்தால் இளம்வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.

சூரியன், சுக்கிரன் வலுவிழந்திருந் தாலும், 9-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், சூரியன், சுக்கிரன் இருவரும் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 9-ஆம் வீட்டிலும், சூரியனின் வீடான சிம்மத் திலும் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும் தந்தையிடம் கருத்து வேறுபாடு, தந்தைக்கு அனுகூலமற்ற பலன் உண்டாகும்.

கன்னி லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சுக்கிரன், 12-ஆம் அதிபதியான சூரியன் சேர்க்கை பெற்றாலும், 6-ஆம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலும், சனி சுக்கிரன் அல்லது சனி, சூரியன் பரிவர்த்தனை பெற்றாலும் வெளியூர், வெளிநாடுமூலம் எதிர்பாராத அனுகூலங்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டாகும். சுக்கிரன், ராகு சேர்க்கை பெற்று 6, 9, 12-ல் அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடுமூலம் அனுகூலங்கள் அதிகரிக்கும்.

9-ஆம் வீட்டில் ராகு அமைவது தந்தைக்கு சற்று சாதகமற்ற பலன் என்றா லும், ரிஷப ராகு என்பதால் பலமடங்கு உயர்த்தும் உன்னத யோகம் உண்டாகும். 9-ல் ராகு சுபகிரகப் பார்வையுடன் அமையப் பெற்றால் அயல்நாடு செல்லக்கூடிய வாய்ப்புண்டாகும்.

10-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத் தைக்கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

10-ஆம் வீடு பலம்பெற்றால்தான் ஒருவர் சுயமாக சம்பாதிக்கும் யோகத்தை அடையமுடியும். கன்னி லக்னத்திற்கு 10-ஆம் பாவாதிபதி புதனாக இருப்பதே மிகச் சிறப்பான அமைப்பாகும். புதன் லக்னா திபதி என்பதால் அறிவாற்றல், பொது அறிவு யாவும் சிறப்பாக இருக்கும். ஜீவனாதிபதி புதன் வலுப்பெற்று ஆட்சி, உச்சம் பெற்று சுபர் சேர்க்கையுடன் அமையப்பெற்றால் சிறப்பான வாழ்க்கை உண்டாகும்.

புதன் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கை பெற்று குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றால் சமுதாயத்தில் உயர்வான நிலை உண்டாகும். புதனுக்கு குரு போன்ற சுபகிரகப் பார்வை அமையப் பெற்று சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை உண்டானால் அதிகாரமிக்க பதவி கிட்டும்.

10-ஆம் வீட்டில் புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி, சூரியன், செவ்வாய் 10-ல் அமையப்பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறையில் அதிகாரமிக்க உயர்பதவி அடையும் யோகமுண்டாகும்.

புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை யுண்டாகி 9, 12-ல் ராகு அமையப் பெற்றால் கடல்கடந்து வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பமையும்.

புதன்- சனி, சுக்கிரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத் தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஆற்றல் உண்டாகும். புதன் பலம் பெறுவது மட்டுமின்றி 10-ல் சூரியன், செவ்வாய் அமையப்பெற்று சனி வலுப்பெற்றிருந் தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும்.

புதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று, சந்திரனும் பலமாக அமைந்து குரு பார்வை செய்தால் அரசு, அரசாங்கம் சார்ந்த உத்தியோகத் தில் பணிபுரியும் அமைப்பும், அதன்மூலம் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.

சூரியன், சந்திரன் இணைந்து புதன் வலுப் பெற்றால் அரசாங்கத்தில் அதிகாரப் பதவி கிட்டும்.

புதனுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாயத் தொடர் புடைய பணிகள் அமையும். புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரன் பலமிழந் தால் பயிர்த்தொழில்மூலம் சிறப்படைய நேரிடும். சனி, புதன் சேர்க்கை பெற்று வலுவிழந்தால் அடிமைத்தொழில் உண்டாகும். புதன் ராகு, கேது சேர்க்கை பெற்று வலுவிழந்திருந்தால் இழிவான வேலையினைச் செய்ய நேரிடும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழில், அரசாங்க ஜீவனம் உண்டாகும்.

புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்று, குரு பார்த்தால் பெண்கள்வழியில் தன லாபம் கிட்டும். கணிதம், கம்ப்யூட்டர் துறையிலும் மேன்மை உண்டாகும்.

புதனுக்கு இருபுறமும் பாவிகள் அமையப் பெற்றாலும், புதனுக்கு 7-ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும், எவ்வளவு திறமை இருந் தாலும் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும்.

10-ஆம் அதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று 10-ல் வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீதத் துறையில் புகழ் பெறும் அமைப்புண்டாகும். புதன் தனித்து பலம்பெற்று குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றால் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகை, புத்தகம் வெளியீடு செய்யும் அமைப்பு போன்ற துறையில் அனுகூலம் உண்டாகும். புதன் நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனி வீடுகளில் அமைவதும் நல்லது.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala190719
இதையும் படியுங்கள்
Subscribe