கடக லக்னத்தில் பிறந்தவர்களின் 9-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
10-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத் தைக்கொண்டு ஒருவரின் ஜீவன அமைப்பு, கருமம், வசதி வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வா யாகும். செவ்வாயே 5-ஆம் அதிபதியும் ஆகும். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய், லக்னாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகம் என்பதால், இந்த லக் னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாகும். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதனால், கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்களாகவும், அதிகார குணம் மிக்கவர் களாகவும் இருப்பார்கள்.
அரசு, அரசு சார்ந்த துறை களுக்கு காரகனான சூரியன், கடக லக்னத்திற்கு 10-ஆம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று, உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவி களை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வை பெற்றால், அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ், ராணுவம், பாதுகாப் புத்துறைகளில் பணிபுரியும் அமைப்பு, பலருக்கு உதவிசெய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய் 10-ல் அமையப்பெற்று சனி பலம்பெற்றிருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சூரியன் செவ்வாயுடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க் கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத் துறையில் அறுவைச்சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கை பெற்றிருந்தால் கட்டடப் பொறியாளர், கணினிப் பொறியாளராக விளங்கக்கூடும். செவ்வாய் மற்றும் சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, ரசா யனத் தொடர்புடைய துறை, வேளாண்மை, உணவு வகைகள், ஓட்டல் போன்றவற்றிலும், குரு பார்வை பெற்றால் அரசுத் துறையிலும் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் தனக்கு நட்பு கிரகங் களான சூரியன், சந்திரன், குரு போன்ற வர்களின் சேர்க்கை பெற்று பலம்பெற்றிருந் தால் செய்யும் தொழில், உத்தியோகரீ தியான உயர்வுகளையும், அரசுவழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெறமுடியும்.
செவ்வாய், குரு, புதன் சேர்க்கை பெற்று வலுவாக அமையப்பெற்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம், வங்கிப்பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், கொடுக்கல்- வாங்கல், பங்குச்சந்தை மற்றும் கமிஷன் ஏஜென்சி போன்றவற்றின்மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு, புதன் 10-ல் அமையப்பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழிநடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
குரு, புதனுடன் சனியும் பலம்பெற்றால் வக்கீல் பணி, நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப்பெற்றால் கூட்டுத்தொழில்மூலமாக அனுகூலம், கட்டடக்கலை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்கமுடியும்.
செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று, சந்திரனும் உடனிருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்.
செவ்வாய், சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால், சொந்தத்தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய் மற்றும் சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால், சட்டச் சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10-ஆம் வீட்டில் சனி நீசம்பெறுவதால், சனி 10-ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கை பெற்றால் அடிமைத்தொழில், நிரந்தர வருமானமற்ற நிலை ஏற்படும். செவ்வாய், புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, பூமி, மனைமூலம் லாபம், உடன் பிறந்த வர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.
11-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானத்தைக் கொண்டு தனலாபம், மூத்த சகோதரம், சகோதரி அமைப்பு போன்றவை பற்றி அறியலாம்.
கடக லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். சர லக்னமான கடகத்திற்கு 11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், லாபங்கள் அடைவதற்கு பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். 11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், அதன் அதிபதி சுக்கிரன் திகோண ஸ்தானங்களான 1, 5, 9-லோ, மறைவு ஸ்தானங்களான 6, 8 ,12-லோ சுபகிரகச் சேர்க்கையுடன் அமையப் பெற்றால் மட்டுமே லாபகரமான பலன்களை அடையமுடியும்.
11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மூத்த சகோதர பாக்கியமும் சிறப்பாக இருக் காது. 11-ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் என்ப தால், சுக்கிரன் வலுவாக இருந்தால் சகோதரி யோகம் உண்டாகும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 11-ல் சந்திரன் இருந்தாலும் சகோதரி யோகம் உண்டாகும். ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு வலுவுடன் அமையப்பெற்றாலும், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 11-ல் இருந்தாலும் மூத்த சகோதர பாக்கியம் உண்டாகும்.
சுக்கிரன் சனி, ராகு சேர்க்கை பெற்று வலுவிழந்து காணப்பட்டாலும், 11-ல் சனி, ராகு- கேது இருந்தாலும் மூத்த சகோதர தோஷமாகும். அசுர குருவான சுக்கிரன் தேவ குருவான குரு சேர்க்கை பெற்று, வலுவிழந்து அமையப் பெற்றால் பெண்களால் அவமானங் களை சந்திக்கநேரிடும்.
சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், சுக்கிரன், சந்திரன் சேர்க்கை 1, 11-ல் இருந்தாலும், சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும் கலை, இசை மற்றும் சினிமா போன்ற வற்றில் நாட்டமும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும்.
12-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் பாவத்தைக் கொண்டு அயன, சயன, சுகபோகங்களைப் பற்றியும், வீண்விரயங்களைப் பற்றியும் அறியலாம்.
கடக லக்னத்திற்கு விரயாதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், சனி, குரு சேர்க்கை சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், நட்பு கிரகமான சனி யின் வீடான மகரம், கும்பத்தில் அமையப் பெற் றாலும், சுபகிரகச் சேர்க்கை பெற்றாலும் ஏற்படக்கூடிய விரயங்கள் சுபவிரயங்களாக இருப்பது மட்டுமின்றி, வீண்செலவுகளும் ஏற்படாது.
ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டில் புதன் வலுப்பெற்றுக் காணப்பட்டாலும், குரு, சந்திரன், சுக்கிரன் போன்ற சுபகிரகப் பார்வை பெற்றாலும் நிம்மதியான உறக்கம், சிறப்பான கட்டில் சுகம் அமையும். விரய ஸ்தானத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்று, சுபகிரகப் பார்வையின்றி இருந்தால் உறக்கமின்மை, கட்டில் சுகவாழ்வில் பாதிப்பு ஏற்படும்.
புதன், சூரியன், சுக்கிரன், சேர்க்கை பெற்றிருந்தால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் உண்டாகும். 12-ஆம் வீட்டை குரு பார்வை செய்தால் ஏற்படும் விரயங்கள் சுபவிரயங் களாகவும், சனி பார்வை செய்தால் வீண்விர யங்களும், வாழ்வில் சந்தோஷமற்ற நிலையும் உண்டாகும். புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, சாதகமற்று அமையப்பெற்றால் பெண்களால் விரயங்கள் அதிகமாக ஏற்படும். கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகா திபதி என்பதால், பெண்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருப்பது மிகவும் உத்தமம்.
புதன், பாக்கியாதிபதி குரு சேர்க்கை பெற்றோ, புதன், குரு பரிவர்த்தனை பெற்றோ, சந்திரன், ராகு சேர்க்கை பெற்று 9, 12-ல் அமையப்பெற்றோ, ராகு 9, 12-ல் அமையப் பெற்றோ இருந்தால் கடல்கடந்து வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
(அடுத்த இதழில் சிம்ம லக்னம்)
செல்: 72001 62001