Advertisment

12 லக்னப் பலன்கள்!

/idhalgal/balajothidam/12-lagana-palans-0

டக லக்னத்தில் பிறந்தவர்களின் 6-ஆம் பாவங் கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

7-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் பாவத்தைக் கொண்டு திருமண வாழ்க்கை, கூட்டுத் தொழில் போன்றவற்றை அறியலாம். கடக லக்னத்திற்கு 7-ஆம் வீட்டதிபதி சனி பாவ கிரகம் என்பதாலும், களத்திரக் காரகன் சுக்கிரன் சர லக்னமான கடகத்திற்கு பாதகாதிபதி என்பதாலும் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை.

தேவையற்ற சண்டை சச்சரவு, ஒற்றுமை இல்லாத அமைப்பு உண்டாகிறது. 7-ஆம் வீட்டதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை, சுபர் சாரம் பெற்றாலும், சுபகிரக வீடுகளில் அமையப் பெற்றாலும் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் மணவாழ்வில் மகிழ்ச்சிக் குறைவு உண்டாகும்.

சனி- தேய்பிறைச் சந்திரன் சேர்க்கை பெற்று பாவ கிரகச் சேர்க்கை மற்றும் பார்வையுடன் அமையப் பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவரை மணக் கக்கூடிய சூழ்நிலை, சில தவறான தொடர் புகள் ஏற்படும். சனி- ராகு, கேது சேர்க்கை பெற்றால் கலப்புத் திருமணம் உண்டா கிறது.

Advertisment

கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதி பதி என்ப

டக லக்னத்தில் பிறந்தவர்களின் 6-ஆம் பாவங் கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

7-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் பாவத்தைக் கொண்டு திருமண வாழ்க்கை, கூட்டுத் தொழில் போன்றவற்றை அறியலாம். கடக லக்னத்திற்கு 7-ஆம் வீட்டதிபதி சனி பாவ கிரகம் என்பதாலும், களத்திரக் காரகன் சுக்கிரன் சர லக்னமான கடகத்திற்கு பாதகாதிபதி என்பதாலும் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை.

தேவையற்ற சண்டை சச்சரவு, ஒற்றுமை இல்லாத அமைப்பு உண்டாகிறது. 7-ஆம் வீட்டதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை, சுபர் சாரம் பெற்றாலும், சுபகிரக வீடுகளில் அமையப் பெற்றாலும் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் மணவாழ்வில் மகிழ்ச்சிக் குறைவு உண்டாகும்.

சனி- தேய்பிறைச் சந்திரன் சேர்க்கை பெற்று பாவ கிரகச் சேர்க்கை மற்றும் பார்வையுடன் அமையப் பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவரை மணக் கக்கூடிய சூழ்நிலை, சில தவறான தொடர் புகள் ஏற்படும். சனி- ராகு, கேது சேர்க்கை பெற்றால் கலப்புத் திருமணம் உண்டா கிறது.

Advertisment

கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதி பதி என்பதால், சுக்கிரன் திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் மணவாழ்க்கை ஓரளவுக்கு நன்றாக இருக்கும். 7-ஆம் வீட்டில் சூரியன், செவ் வாய் அமையப் பெற்றாலும், சனி, சூரியன் சேர்க்கை பெற்றாலும் மணவாழ்க்கையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும்.

7-ஆம் வீட்டில் ஒன்றுக்கும் மேற் பட்ட பாவகிரகங்கள் அமைந்து இருந் தாலும், 7-ஆம் அதிபதி சனி பாவ கிரகச் சேர்க்கை, சாரம், வக்ரம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை சிறப்பாக இருக்காது. சனி வக்ரம் பெற்று ராகு, கேது, செவ்வாய் போன்ற பாவகிரகச் சேர்க்கை பெற்றால் வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், உடல் பலவீனம் உண்டாகும்.

சனி சுபகிரக வீட்டில் அமையப் பெற்று 10-ஆம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், சனி, செவ்வாய் பரிவர்த்தனை பெற்றாலும் கூட்டுத் தொழில் மூலமாக லாபங்கள் உண்டாகும்.

8-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் பாவத் தைக் கொண்டு ஆயுள், ஆரோக்கியம், உழைக்காமல் கிடைக்கும் பணம், திரு மணத்தால் உண்டாகக்கூடிய உறவுகள் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

கடக லக்னத்திற்கு ஆயுள்காரகன் சனியே 8-ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றாலும், சுபகிரக வீட்டில் அமை யப் பெற்றாலும் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை உண்டாகும். சனி தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று வலுப் பெற்றுக் காணப்பட்டால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்க்கையும் உண்டாகும்.

mu

சனி தனக்கு பகை கிரகமான செவ்வாயின் வீடான மேஷம், விருச்சிகத்திலோ, சூரியனின் வீடான சிம்மத்திலோ அமையப் பெற்று பாவ கிரகச் சேர்க்கையுடன் இருந்தாலும், வக்ரம் பெற்றாலும் நோய் நொடிகள் ஏற்பட்டு ஆரோக் கிய பாதிப்பு உண்டாகும்.

8-ஆம் அதிபதி சனி, ராகு, செவ்வாய் சேர்க்கை பெற்றோ, சம சப்தமப் பார்வை பெற்றோ அமையப் பெற்றால் தீராத நோய்களும், எதிர்பாராத விபத்து களும் உண்டாகும். சனி- சூரியன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றால் இதயக் கோளாறு, உஷ்ண நோய்கள், கண்களில் பாதிப்பு உண்டாகும்.

சந்திரன்- சனி சோக்கை பெற்று வலு இழந்திருந் தால் ஜலத் தொடர்புள்ள உபாதைகள், செவ்வாய் சேர்க்கை பெற்று வலு இழந்து காணப்பட்டால் ரணக் காயம், ரத்தக்காயம், விபத்துகளை எதிர் கொள்ளும் அமைப்பு, அறுவை சிகிச்சை மேற் கொள்ளும் சூழ்நிலை, சனி- புதன் சேர்க்கை பெற் றால் நரம்புத் தளர்ச்சி, சுக்கிரன் சேர்க்கை பெற்று வலு இழந்து காணப்பட்டால் ரகசிய நோய், சர்க்கரை நோய், ராகு சேர்க்கை பெற்றால் அலர்ஜி பாதிப்பு, எதிர்பாராத கண்டங்கள், சனி- கேது சேர்க்கை பெற்றால் அஜீரணக் கோளாறு, விஷத் தால் கண்டம், கண்களில் பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக காரகர் அந்த பாவத்தில் அமையப் பெற்றால் தோஷம் என்றாலும், சனிக்கு மட்டும் காரகோ பாவ நாச விதியில் விதிவிலக்கு உண்டு என்பதால், சனி 8-ல் அமையப் பெற்றிருந் தால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

சனி ஆட்சி, உச்சம் பெற்று குரு பார்வை செய் தால் எதிர்பாராத பணவரவுகள், இன்சூரன்ஸ் மூலம் திடீர் லாபங்கள் உண்டாகும். 8-க்கு அதிபதி சனி என்பதால் மனைவிவழி உறவினர்களிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்காது.

9-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் பாவத்தைக் கொண்டு பாக்கியம், தந்தை, செல்வம், செல்வாக்கு, அயல்நாட்டுப் பயணங்கள் போன்றவற்றை அறியலாம்.

கடக லக்னத்திற்கு பாரம்பரியத்தைக் குறிக்கக்கூடிய குரு 9-ஆம் அதிபதி ஆவார். குரு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபகிரகச் சேர்க்கையுடன் அமையப் பெற்றால் தந்தைக்கு உயர்வுகள், நீண்ட ஆயுள் உண்டாகும். குரு 5-ஆம் அதிபதி செவ்வாய் அல்லது தந்தைகாரகன் சூரியன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் தந்தையால் நல்ல அனுகூலங்கள், அசையும் அசையா சொத்துச் சேர்க்கை, பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும்.

குரு சந்திரனுக்கு திரிகோண ஸ்தானத்தில் அமையப் பெற்றால் தந்தைக்கு நீண்ட ஆயுளும், தந்தையால் சிறப்பான பலன்களும் உண்டாகும். குரு- சந்திரன், சூரியன், சுக்கிரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் தந்தை வழியில் அதிகமான யோகம் உண்டாகும். சூரியன் அல்லது குருவுடன் சனி சேர்க்கை பெற்றாலும், சனி- குரு அல்லது சூரியனை பார்வை செய்தாலும் தந்தைக்கு பொருளாதார நிலையில் அனுகூலமற்ற பலன் உண்டாகி, ஜாதகரின் சொந்த முயற்சியால் வாழ்வில் உயர்வும் உண்டாகும்.

சனி- சூரியன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனுக்கு சமசப்தம ஸ்தானத்தில் இருந் தாலும், சிம்ம ராசியில் சனி- ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், குரு- சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், 9-ஆம் வீட்டில் சனி- ராகு, கேது அமையப் பெற்றாலும் தந்தைக்கு அனுகூல மற்ற பலன்கள் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும்.

கடக லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி குரு, 12-ஆம் அதிபதி புதன், லக்னாதிபதி சந்திரன் சேர்க்கை பெற்று 1, 9, 12-ல் இருந்தாலும், குரு- புதன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், 9-ல் ராகு அமையப் பெற்று உடன் சந்திரன், புதன் இருந்தாலும், 9-ல் சந்திரன் அமையப் பெற்று குரு, புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)

செல்: 72001 63001

bala100519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe