Advertisment

12 லக்னப் பலன்கள்...!

/idhalgal/balajothidam/12-lagana-benefits

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 2, 3-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம்.

இனி, ரிஷப லக்னத்தாரின் மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

4-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக் கொண்டு தாய், வீடு, வாகன யோகம், கல்வி போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

சூரியன், சந்திரன் சுபகிரகச் சேர்க்கை யுடன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றால் தாய்க்கு மேன்மைகள் உண்டாகும்.

சந்திரனுக்கு 4-க்குடைய சூரியன் சுபர்சேர்க்கை யுடன் இருந்தால் தாய்க்கு நீண்டஆயுள் உண்டாகும். சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால் தாயை இழக்க நேரிடும். தாய்க்காரகன் சந்திரனும், 4-ஆம் அதிபதி சூரியனும் பாவிகள் சேர்க்கைப் பெற்றால் தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். சந்திரன் பாவிகள் சேர்க்கைப் பெற் றாலும், சந்திரனின் வீடான கடகத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்ôலும் தாயிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

Advertisment

ஜென்ம லக்னாதிபதி சுக்கிரனும், 4-ஆம் அதிப

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 2, 3-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம்.

இனி, ரிஷப லக்னத்தாரின் மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

4-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக் கொண்டு தாய், வீடு, வாகன யோகம், கல்வி போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

சூரியன், சந்திரன் சுபகிரகச் சேர்க்கை யுடன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றால் தாய்க்கு மேன்மைகள் உண்டாகும்.

சந்திரனுக்கு 4-க்குடைய சூரியன் சுபர்சேர்க்கை யுடன் இருந்தால் தாய்க்கு நீண்டஆயுள் உண்டாகும். சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றால் தாயை இழக்க நேரிடும். தாய்க்காரகன் சந்திரனும், 4-ஆம் அதிபதி சூரியனும் பாவிகள் சேர்க்கைப் பெற்றால் தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். சந்திரன் பாவிகள் சேர்க்கைப் பெற் றாலும், சந்திரனின் வீடான கடகத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்ôலும் தாயிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

Advertisment

ஜென்ம லக்னாதிபதி சுக்கிரனும், 4-ஆம் அதிபதி சூரியனும் கேந்திரதிரி, கோணங்களில் வலுவாக இருந்தால் சொந்த வீடு யோகம் சிறப்பாக அமையும். சூரியன் தந்தை காரகனாகி, பூர்வீக ஸ்தானாதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால், பூர்வீக சொத்துகளால் லாபம் மற்றும் தந்தைவழி சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். செவ்வாய் சுபகிரகச் சேர்க்கை பெற்று வலுவாக இருந்தால் பூமி, மனை வாங்கும் யோகம் சிறப்பாக அமையும்.

சூரியன் பலமிழந்து சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தால் பூர்வீக ஊரில் சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காது. சனி, ராகு, கேது போன்ற பாவிகள் 4-ஆம் வீட்டில் அமைந்தாலும், சுக்கிரனுக்கு 4-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலும், சனி, செவ்வாய் பார்வை 4-ஆம் வீட்டிற்கு அமைந்தாலும் சொந்த மாக வீடு வாங்கத் தடைகள் ஏற்படும்.

அப்படியே வாங்கினாலும் அந்த வீட்டில் வாழ்ந்து அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். வீடு ஓரிடத்திலும், ஜாதகர் ஓரிடத்திலும் இருக்கும் நிலை ஏற்படும்.

parvathi

4-ஆம் அதிபதி சூரியன்- புதன் சேர்க்கை யுடன் வலுப்பெற்றிருந்தால் கற்ற கல்வி மூலம் சாதனைகள் செய்யும் வாய்ப்பு, சிறந்த புத்திசாலிலித்தனம் இருக்கும். சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்று 4-ல்இருந்தாலும், மற்ற ஸ்தானங்களில் வலுப்பெற்றாலும் மருத்துவம், நிர்வாகத் தொடர்புடைய கல்வி அமையும்.

சூரியன்- புதன், குரு போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் கம்ப்யூட்டர் துறை, ஆசிரியர் பணிக்கான கல்வி, வழக்கறிஞர் கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டும். சூரியன்- சந்திரன், ராகு, கேது சேர்க்கை பெற்றால் ரசாயனம் மற்றும் மருந்து தொடர்புள்ள கல்வி உண்டாகும். உடன் செவ்வாய் இருந்தால் மருத்துவத்துறையில் அறுவைச்சிகிச்சை தொடர்புடைய கல்வி உண்டாகும்.

4-ஆம் வீட்டதிபதி சூரியன் பலமிழந்து சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் அல்லது 4-ல் சனி, ராகு இருந்தாலும் கல்வியில் தடை உண்டாகும்.

5-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திர பாக்கியம், பூர்வீகம் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர் களுக்கு கல்விக்காரகனும் 5-ஆம் வீட்டு அதிபதியுமான புதன் ஆட்சி, உச்சம் பெற்று சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் நல்ல அறிவாற்றல், கணிதத்தில் ஆர்வம், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட உயர்கல்வி கற்கும் வாய்ப்பு உண்டாகும். புதன் வலுப்பெற் றால் வாக்கால் பேச்சால் முன்னேறும் கல்வி, பலருக்கு உபதேசம் செய்யும் கல்வி போன்றவற்றை கற்கும் வாய்ப்பு அமையும்.

புதன்- சுக்கிரன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழும் அமைப்பு உண்டாகும். புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் பூர்வீகவழியில் தாராள தன சேர்க்கை, பூர்வீக சொத்தால் அனுகூலங்கள் உண்டாகும். புதன் சுபகிரகச் சேர்க்கையுடன் பலம் பெறுகின்றபோது பூர்வீகத்தால் லாபங்கள், தாய்மாமன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

புதன்- சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றால் பூர்வீகவழியில் சாதகப்பலன் இருக்கும். புதன் பலமிழந்திருந்தாலும், 5-ல் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலும், சிம்மத்தில் சனி, ராகு இருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

5-ஆம் வீட்டிற்கு மற்றொரு முக்கிய காரகத்துவம் சந்ததி விருத்தி எனப்படும் புத்திர பாக்கியமாகும். நவகிரகங்களுள் புதன் அலிலிகிரகமாகும். ரிஷப லக்னத்திற்கு புதன் 5-ஆம் வீட்டதிபதியாக வருவதால் புத்திர பாக்கியம் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று அமைந்து, 5-ல் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்து 5-ஆம் வீட்டை குரு பார்வை செய்தால் ஆண் சந்ததி விருத்தி உண்டாகும். புதன்- குரு, சூரியன், செவ்வாய் போன்ற ஆண் கிரகச் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்றால் ஆண் சந்ததி விருத்தியும், புதன்- சந்திரன், சுக்கிரன் போன்ற பெண் கிரகச் சேர்க்கை சேர்க்கை பெற்றால் பெண் குழந்தை பாக்கியமும் உண்டாகும்.

புதனும்- குருவும் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன்- குரு நீசம், வக்ரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் இருக்காது. புதன் நீச கிரகச் சேர்க்கை பெற்று குரு பார்வையின்றி இருந்தாலும் புத்திர பாக்கியம்இல்லை.

ரிஷப லக்னத்தின் மற்ற பாவங்கள்

அடுத்த இதழில்...

செல்: 72001 63001

bala150219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe