மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் 7-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
8-ஆம் பாவம்
8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத- உழைக்காமல் கிடைக்கும் பணவரவுகள், திருமணத்தின் மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மிதுன லக்னத்திற்கு ஆயுள் காரகனான சனியே 8-ஆம் அதிபதியுமாவார். 8-ஆம் அதிபதி சனி என்பதால் ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும் சுபர் சேர்க்கை பெற்று, சுபர் பார்வை யுடன் வலுவிழக்காமல் இருந்தாலும் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை உண்டாகும். 8-ஆம் வீட்டின் அதிபதி சனி பாவிகள் சேர்க்கை பெறாமல் இருந்தால் ஆயுள்,
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் 7-ஆம் பாவங்கள்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
8-ஆம் பாவம்
8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத- உழைக்காமல் கிடைக்கும் பணவரவுகள், திருமணத்தின் மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மிதுன லக்னத்திற்கு ஆயுள் காரகனான சனியே 8-ஆம் அதிபதியுமாவார். 8-ஆம் அதிபதி சனி என்பதால் ஆட்சி, உச்சம் பெற்றிருந் தாலும் சுபர் சேர்க்கை பெற்று, சுபர் பார்வை யுடன் வலுவிழக்காமல் இருந்தாலும் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை உண்டாகும். 8-ஆம் வீட்டின் அதிபதி சனி பாவிகள் சேர்க்கை பெறாமல் இருந்தால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சனி- சூரியன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், இதயக் கோளாறு, கண்களில் பாதிப்பு உண்டாகும். சனி- செவ்வாய் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். சனி- குரு சேர்க்கை பெற்று வலுவிழந்தால் மற்றவர்களின் சாபத்திற்கு ஆளாகும் நிலை, சனி- சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவிழந்தால் ரகசிய உடல்நிலை பாதிப்பு, சனி- ராகு சேர்க்கை பெற்றால் அஜீரணக் கோளாறு, சனி- சந்திரன் சேர்க்கை பெற்றால் ஜலத்தொடர் புள்ள உடல் பாதிப்பு, கண்களில் கோளாறு போன்றவை ஏற்படும்.
சனி- ராகு, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், சனி வக்ரம் பெற் றாலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். 8-ஆம் அதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் எதிர்பாராத தனசேர்க்கை, இன்சூரன்ஸ்மூலம் எதிர்பாராத தனயோகம் உண்டாகும்.
பாவகிரகமான சனி 8-ஆம் அதிபதி என்பதால் திருமணத்தின்மூலம் உண்டாகக் கூடிய உறவுகளிடையே ஒற்றுமைக்குறைவு உண்டாகும்.
9-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக்கொண்டு தந்தை, பாக்கியம், வசதி வாய்ப்பு, தந்தைவழி உறவினர்கள், வெளியூர் யோகத்தைப் பற்றி அறியலாம்.
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சனி, குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங் களில் அமையப் பெற்றால் தந்தைக்கு நீண்ட ஆயுள், தந்தையால் முன்னேற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
தந்தைக்காரகன் சூரியனின் வீடான சிம்மத்தில் சுபர்கள் அமையப் பெற்று சூரியன் சுபர் சேர்க்கையுடன் (துலாம் தவிர) கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமையப் பெற்றால் தந்தைக்கு முன்னேற்றமும், தந்தை யால் அடையக்கூடிய முன்னேற்றங்களை தடையின்றிப் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.
சூரியன்- சனி இணைந்திருந்தாலும், சூரியன்- சனி இணைந்து உடன் ராகு- செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு இருந்தாலும் தந்தைவழி உறவினர்வகையில் பகைமை, தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மிதுன லக்னத்திற்கு 9-ஆம் வீடு சனியின் வீடு என்பதால் தந்தை, தந்தைவழி உறவினர்கள் வகையில் பெரிய அளவில் அனுகூலம் இருக்காது.
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சனி- குரு, புதன், சுக்கிரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்றால் செல்வம், செல்வாக்கு, அசையும், அசையா சொத்து களின் சேர்க்கை யாவும் சிறப்பாக அமையும்.
9-ஆம் அதிபதி சனி- செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 6, 9, 12-ல் அமையப் பெற்றாலும், செவ்வாய், சுக்கிரனுடன் பரிவர்த்தனைப் பெற்றாலும் வெளியூர், வெளிநாடுகளின்மூலமாக லாபகரமான பலன்கள் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)
செல்: 72001 63001