பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் தனித்தன்மையோடு கூடிய ஆன்மாதான். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணம் உள்ளது. அந்த பயணத் தொடர்ச்சியில் இனிமையான இல்வாழ்க்கைப் பயணம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. காசு, காமம், சொத்து சுகம் இவையனைத்தையும் கடந்து, "எனக்கு நீ உனக்கு நான்' என்ற ஆத்மார்த்த அன்பைப் பகிர்ந்துவாழும் பல ஆதர்சன தம்பதிகள் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கள். அதேநேரத்தில் திருமணமான ஆறு மாதத்தில் கோர்ட் படி ஏறி விவாகரத்து பெறும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.
அறுபது வயதானாலும் குழந்தைகள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கருத்து வேறுபாட்டுடன் வாழும் தம்பதி களும் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தா லும் கடைசிகாலம்வரை தன் அன்பை, உணர்வைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணை வேண்டுமென்பது மறுக்கமுடியாத நிதர்சனமான உண்மை.
ஒரு திருமணம்கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக்கொண்டிருக்கும் காலத்தில், சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோற்ற பலர், இரண்டாம் திரு மணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா என்று பட்டிமன்றம் வைத்துத் தீர்ப்பெழுதும் வகையில் நாட்டில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.
நடைமுறை வாழ்வில் திருமண வாழ்க்கையில் தோல்வி ஏற்படுத்துவதற்கு முன்ஜென்ம வினைப் பயன்தான் முழுமுதற் காரணமாக அமைகிறது. வரதட்சணைக் கொடுமை, மாமியார்- மாமனார், நாத்தனார் கொடுமை, குழந்தை பாக்கியமின்மை, வாழ்க்கைத் துணையின் இறப்பு, புரிதல் இல்லாத காதல் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால் இரண்டாவது வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கவேண்டிய சூழ்நிலை பலருக்கு உருவாகிவிடுகிறது.
சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், இன்ப ஸ்தானம் எனப்படும் ஏழாம் பாவகம்மூலம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும், பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம். அதாவது வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது?
அவர் நல்லவரா?
பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மனமகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசிவரை சேர்ந்து வாழ்வார்களா போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். பன்னிரண்டு பாவகங்களில் மிக முக்கியமானவையாக 2, 7-ஆம் பாவகங்களைக் கூறலாம். இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமும் ஏழாமிடமான களத்திர ஸ்தானமும் 90 சதவிகிதத் தினருக்கு, பிறவி என்பது எவ்வளவு பெரிய கொடூர மான தண்டனை என்பதைத் திருமணத்திற்குப்பிறகு உணர்த்துகிறது. மாரக ஸ்தானங்களான 2, 7-ஆம் பாவகங்கள் உலகியல் தத்துவத்தை திருமணத்திற்குப் பிறகே புரியவைக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12laknam_5.jpg)
திருமண வாழ்க்கை சொர்க்கமா? நரகமா என்பதை ஜனனகால ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் அமர்ந்த கிரகங்களின் பலம், பலவீனம் மிகத் துல்லியமாகக் காட்டும். நடை முறையில் லக்னம் மற்றும் ஏழாமிடத்திற்கு அசுப கிரகங்கள் சம்பந்தம் இருக்கக் கூடாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அதேநேரம் முழுச் சுபரான குரு பகவான் ஏழாமிடத்தில் நிற்கும்போது தனித்து நின்றா லும், சுப- அசுப கிரகங்களுடன் சேர்ந்து நின்றாலும் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வசதியான உயர்ந்த குலத்தைச் சேர்ந்த களத்திரம் அமையும். திருமணத்திற்குப்பிறகு பொருள் சேர்க்கை அதிகரிக்கும் என்று பல்வேறு சுபப் பலன்கள் கூறலாம். ஆனால் நடைமுறையில் பலருக்கும் திருமணத் தடை அல்லது திருமணம் நடந்தால் மணமுறிவை உருவாக்குகிறது. அதே போல ஏழாம் வீட்டில் ஆட்சி, உச்சம் பெற்றால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகும். பலருக்கு மணவாழ்க்கையில் பல்வேறுவிதமான சங்கடங்களைத் தருகிறது.
நவகிரக சுப கிரகங்களில் தலைசிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல்- வாங்கல், பொதுக்காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றுக்குக் காரகன். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்றிருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்திருப்பது நல்லதல்ல. குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பொதுவாக எவ்வளவு தோஷமிருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகிவிடும். குருவின் பார்வைபட்ட பாவகப் பலன் பெருகும். குருவின் பார்வைக்கு மூன்றுவிதமான சக்திகள் உண்டு 1. எந்த பிரச்சினையும் வராமல் காப்பாற்றப் படுவது.
2. மிகப் பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்றப்படுவது.
3. கடுமையாக பாதிக்கப்பட்டாலும் வெளியே தெரியாமல் காப்பாற்றப்படுவது.
ஐந்தாம் பார்வைப் பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை பதினொன்றா மிடத்தில் பதியும். இந்த இடம் வாபஸ்தானம்.
மூத்த சகோதரம், இளைய மனைவி, வழக்குகளில் வெற்றி, சொத்துகளால் ஆதாயம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். வளமான வாழ்க்கை உண்டு. அதிர்ஷ்டத்தால் பல்வேறு வழிகளில் பொருள் குவியும். மூத்த சகோதரத்தால் லாபம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். பொருள் சேர்க்கை மிகுதியாக இருக்கும்போது, கிளிபோல மனைவி இருந்தாலும் குரங்குபோன்ற ஒரு இரண்டாம் துணையையும் கொடுக்கும். 7-ல் நின்ற குருவின் 5-ஆம் பார்வை, பலருக்கு திருமணத்திற்குப்பிறகு புதியகாதலை போனஸாகத் தந்துவிடுகிறது.
ஏழாம் பார்வைப் பலன்கள்
குருவின் 7-ஆம் பார்வை ராசிக்கு இருப்ப தால் ஆன்மபலம், உடல் பொலிவு ஏற்படும். சுயநலமான சிந்தனை தோன்றும். தான் என்ற கௌரவம் தலைதூக்கும். ஈகோ முதல் வரிசையில் நிற்கும். குடும்பத்தில் தம்பதி களிடையே நடக்கும் பல்வேறு பிரச்சினைக்கு, சம்பந்தமில்லாத பல புதிய நபர்களின் குறுக்கீடு வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஒன்பதாம் பார்வைப் பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை மூன்றா மிடத்திற்கு இருப்பதால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் வாழ்வில் ஏற்படும் கடனுக்கு அல்லது குடும்பத்திற்கு இவர்கள் பணம் செலவுசெய்ய நேரும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு, தொழில் நடத்துமிடம் என ஏதாவதொரு இடமாற்றம் செய்ய நேரும்.
இனி, பன்னிரண்டு லக்னங்களுக்கும் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் குரு நிற்பதால் ஏற்படும் சுப- அசுபப் பலன்களையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.
மேஷ லக்னம்
மேஷத்திற்கு குரு 9, 12-ஆம் அதிபதி. வரன் தேடிவரும் சிலர் திருமணத்திற்காக மதம் மாறலாம். திருமணத்திற்குப்பிறகு தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்துவாழும் நிலை உண்டாகும். தம்பதிகளின் தசாபுக்திக்கு ஏற்ப பிரிவினை என்பது குறுகிய காலத்திற்கோ, நீண்ட காலத்திற்கோ, நிரந்தரமானதாகவோ இருக்கும். சிலருக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் நிலையும் உண்டாகும். அப்படி பிரிந்துவாழ்பவர்கள் எதற்காகப் பிரிந்தார்கள் என்பதை எளிதில் அறிய முடியாது அல்லது வெளியில் சொல்ல மாட்டார்கள். சிலர் சட்டரீதியாகப் பிரிந்து, மறுமணமும் செய்யமாட்டார்கள். ஏழாம் பாவத்தின் பாவாத்பாவம் ஒன்பதாம் பாவம் என்பதால், தம்பதிகளின் பிரிவினைக்கு உடன்பிறந்த இளைய சகோதர- சகோதரி களே காரணமாக இருப்பார்கள். ஒரு கேந்திராதிபதி திரிகோணத்தில் இருப்பது நல்லது. ஒரு திரிகோணாதிபதி கேந்திரத்தில் இருந்தால், ஆதிபத்திய உயிரை பாதிப் படையச் செய்கிறது.
பரிகாரம்
காலபைரவருக்கு தொடர்ந்து 21 வியாழக்கிழமைகள் மஞ்சள்நிற வாசனை மலர்கள் மற்றும் வஸ்திரம் சாற்றி 21 நெய் தீபமேற்றி வழிபட நல்ல மாற்றம் ஏற்படும்.
ரிஷப லக்னம்
இந்த லக்னத்திற்கு குருபகவான் அஷ்ட மாதிபதி மற்றும் லாபாதிபதி. ஏழில் அமரும் அஷ்டமாதிபதி காலதாமத் திருமணத்தைத் தரலாம். திருமணத்திற்குப்பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும். இளம்வயதில் அஷ்டமாதிபதியின் தசாபுக்தி நடந்தால் ரகசியத் திருமணம் நடக்கும். இவரே 11-ஆம் பாவகாதிபதியாக இருப்பதால் மத்திம வயதில் இரண்டாம் திருமணம் நடக்கும். கணவன்- மனைவியாக சேர்ந்துவாழும் வாய்ப்பு குறைவு. ஒரு மறைவு ஸ்தானாதி பதி கேந்திரம் ஏறும்போது உயிர் மற்றும் பொருள் காரகத்துவம் மிகுந்த பாதிப்பைத் தரும். ரிஷபத்திற்கு குருபகவான் அஷ்டமாதி பதி வேலையைப் பரிபூரணமாகச் செய்வார். சுபப் பலன்களை வழங்குவது அரிது. இவர் களுக்கு ஏழில் நிற்கும் குரு பலரின் சாபத்தை திருமணத்தின்மூலம் எளிதில் பெற்றுத் தரும்.
பரிகாரம்
15 வெள்ளிக்கிழமைகள் நவகிரக சந்நிதி யிலுள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றி குரு கவசம் படித்துவர பாதிப்பு வெகுவாகக் குறையும்.
மிதுன லக்னம்
இது உபய லக்னம். ஏழாமதிபதியான குருவே பாதகாதிபதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதியாக இருப்பதால், ஏழில் ஆட்சிபெறும் குரு மீளமுடியாத பாதகம் மற்றும் மாரகத்தை நிச்சயம் கொடுப்பார். குரு தசை வாழ்வில் நடக்காதவரை இவர்கள் காட்டில் அடைமழைதான். குரு தசை, புக்தி நடக்கும் காலங்களில் நிம்மதியைவிட பலமடங்கு பாதகமும் மாரகமும் இருக்கும். ஆட்சிபலம் பெற்ற குரு திருமணத்தில், திருமண வாழ்க்கையில் சுபத்தைவிட அசுபத்தையே மிகுதிப்படுத்துவார். பாதகாதி பதி குருவே மாரகாதிபதியாக இருப்பதால் மகிழ்வான திருமண வாழ்க்கை வாழும் பலர் குரு தசை, குரு புக்தியில் அறுபது வயதில்கூட பிரிந்துவாழ உடன்படுகிறார்கள் அல்லது தம்பதிகளை ஏதேனும் காரணத்தால் பிரித்துவிடுகிறது. ஏழாமிடத்தில் ஆட்சிபலம் பெற்ற குரு திதிசூன்ய பாதிப்படைந்தால், மிதுன ராசியினருக்கு திருமணம் என்ற அத்தியாயத்தை வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடுகிறது. இதன் சூட்சுமம் அறியாத பலர் "ஏழாமதிபதி ஏழில் ஆட்சி. எப்படி திருமணம் நடக்காமல் போகும்?' என்று காரணம் சொல்கிறார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
பரிகாரம்
திருமணத் தடையை சந்திப்பவர்கள் வியாழக்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் நந்திக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வர தடை அகலும்.
கடக லக்னம்
இந்த லக்னத்தினருக்கு குரு ஆறாமதிபதி மற்றும் பாக்கியாதிபதி. ஆறாமதிபதி குரு ஏழில் நிற்பதால் காலதாமதத் திருமணம் நடைபெறும். அல்லது திருமணத்திற்குப்பிறகு களத்திரம் நோய்வாய்ப்படுவார் அல்லது கடன் உருவாகும். ஒன்பதாம் அதிபதியாகிய குரு ஏழில் இருப்பதால் பூர்வஜென்ம கடன் தீர்க்க (விட்டகுறை, தொட்டகுறை) இந்த ஜென்மத்திலும் தம்பதிகளாக இணைவார்கள். கடகம் குருவின் உச்ச வீடு. ஏழாமிடமான மகரம் குருவின் நீச வீடு. லக்னம் மற்றும் ஏழாமிடத்திற்கு உச்ச- நீச பாதிப்பு இருப்பதால் வாழ்க்கையிழந்த ஒருவரை, ஒருத்தியை மணக்கும்போது பெரிய பாதிப்பு இருக்காது. பலர் "ஆறாமதிபதி ஏழில் நீசம்; கடன் வாங்கினால் எளிதில் அடைபடும்' என்ற தவறான வழிகாட்டுதலால் களத்திரத் தின் பெயரில் கடன்வாங்கி, கடனுக்காக சண்டையிட்டுப் பிரிகிறார்கள். களத்திரம் நல்ல உத்தியோகத்தில் இருந்தால் வாழ்க்கை யின் போக்கு தெரியாது.
பரிகாரம்
சனிக்கிழமை காலை 7.00-8.00 மணிவரை யிலான குரு ஓரையில் ருண விமோசன ஈஸ்வரை வழிபடவேண்டும். அல்லது சிவபுராணம் படிக்கலாம்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு குரு ஐந்தாமதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சிம்ம லக்னத் திற்கு ஏழில் நிற்கும் குரு திருமணத்தைத் தடைசெய்வதில்லை. ஆனால் வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணத்தைத் தருவார். அதே நேரத்தில் பல பெண்கள் கடன் தொல்லை, தாங்கமுடியாத வம்பு வழக்கால் தாலியைக் கழற்றி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார் கள். முழுச்சுபரான குருவின் செயல்பாடே இப்படியென்றால் அசுப கிரகங்களின் செயல்பாடு எப்படி இருக்குமென்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? குரு தசை, புக்திக் காலங்களில் அல்லது கோட்சாரத்தில் அசுப கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் இதுபோன்ற கிரகங்களின் செயல்பாட்டை அவ்வளவு எளிதில் யாரும் நிதானிக்க முடியாது. வெகுசிலரின் வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் குறைபாட்டையும் தந்துவிடுகிறது. ஏழில் குரு இருக்கும் சிம்ம லக்னத்தினர், எவ்வளவு வசதி இருந்தாலும் மஞ்சள் கயிற்றில் தாலி அணியும்போது பெரிய பாதிப்பு நிச்சயம் இருக்காது.
பரிகாரம்
இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திக்கும் தம்பதிகள் தெய்வங்களின் திருமண வைபவங் களில் கலந்து கொள்ளவேண்டும். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஆசிபெற வேண்டும்.
கன்னி லக்னம்
உபய லக்னமான கன்னிக்கு குரு நான்கு மற்றும் ஏழாமதிபதி. பாதகாதிபதி, கேந்திராதிபதி மற்றும் மாரகாதிபதியும் குருவே. இவர்களுக்கு பெரிய திருமணத் தடையோ அல்லது திருமண வாழ்வில் பாதிப்போ இருக்காது. என் அனுபவத்தில் தம்பதிகள் மன நிறைவுடனே வாழ்கிறார்கள். குரு தசை, புக்தி நடக்கும் காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத் தையும் மாரகத்தையும் செய்யத் தவறு வதில்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதி பதியாக வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது. நேரடியாக எதிர்பாராத தண்டனையைக் கொடுத்துவிடுவதுதான் விபரீத விளைவு. உபய லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும்முன்பு தண்டனையே கிடைத்துவிடும். சொத்து தொடர்பான வம்பு வழக்கு, தாய்வழி உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு குரு தசை, புக்திக் காலங்களில் எந்த பாதிப்பையும் தராது. ஏழில் மீனத்தில் குரு ஆட்சிபலம் பெற்று குரு தசை நடப்பவர்கள் கவனமாக செயல்பட்டால் பாதகத்தைக் குறைக்க முடியும். மேலும் என் அனுபவத்தில் பல கன்னி லக்னத்தினர் குரு தசைக் காலங்களில் கனக புஷ்பராகக் கல்லை அணியக்கூடாது.
பரிகாரம்
வசதி வாய்ப்பிருந்தால் அந்தணர்களுக்கு பசுமாட்டை தானம் தரலாம். வசதி இல்லாத வர்கள் கோபூஜை செய்யவேண்டும். அல்லது பசுவுக்கு உணவு தரவேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/12laknam-t.jpg)