ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. அதற்குள் பன்னிரண்டு பாவகங்களும் ஒன்பது கிரக காரகர்களும் உள்ளன. இந்த பாவகங்கள் பன்னிரண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக அமைந்துவிடுகிறது.

ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நேரத்தில் அது எந்த லக்னத்தைக் கொண்டுள்ளதோ அதை வைத்தே பாவகங்களின் நிலைப்பாடு உண்டாகிறது.

லக்னம் அமர்ந்த இடத்தை முதல் பாவகமாக வைத்தே அந்த ஜாதகருக்குரிய விதியைத் தீர்மானிக்கமுடியும்.

இந்த பன்னிரண்டு பாவகங்களை ஆட்சி புரிபவர்களாக ஏழு கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஏழு கிரகங்களுடன் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய ஒன்பது கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு காரகத்துவத்தை தமக்கென்று கொண்டுள்ளன.

Advertisment

இருந்தாலும், ஒரு ஜாதகருக்கு கிரக காரகர்கள் வழங்கும் பலன்களைத் தீர்மானிப்பவர்களாக பாவகர்களே உள்ளனர்.

அதனால் கிரக காரகனின் நிலையை, அவர் அமர்ந்த பாவகத்தை வைத்து ஆழ்ந்து நோக்கவேண்டும்.

கிரகங்களின் காரகத்துவம்

Advertisment

சூரியன்: தந்தை, ஆன்மா, மகன், அரசன், பெயர் மற்றும் புகழ், வெளிச்சம், அதிகாரம், அரண்மனை வாசம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க யோகம் போன்றவற்றுக்கெல்லாம் காரகமாகிறார்.

சந்திரன்: தாய், மனம், மகள், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஆடம்பரமான பொருட்கள், பயணங்கள், ஏரி, குளம், ஆறு, கடல், இடப்பெயர்ச்சி, இடமாற்றம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஜோதிடம், வேதங்கள், பாதை மாறுதல், செய்தி, இயக்கம், ஒளி.

செவ்வாய்: சகோதரம், தைரியம், வீரியம், இரண்டாம் இளைய சகோதரர், கணவன், காவல்துறை, இராணுவம், பாதுகாப்புப்படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்கத் தலைவர், அறுவை சிகிச்சை, மருத்துவம், விவசாயம், சுரங்கங்கள், பெட்ரோலியம், வெடிமருந்து, எதிரி, வன்பொருள், ஆயுதங்கள், மின்மாற்றி, மின் மோட்டார், நிலம்.

புதன்: மாமா, மாமனார், மூன்றாம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்புத்துறை, கணக்காளர், கணக்கு ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடர், வழக்கறிஞர், ஓவியர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர், பொறியாளர், ராஜதந்திரம், மென்மையான விஷயங்கள், தகவல்துறை, பதிவுத்துறை, பேச்சு, நாவண்மை, அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள்.

வியாழன்: தனம், புத்திரர், ஜீவனம், சொந்த பந்தங்கள், நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், ஆலோசகர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோவில்கள், தத்துவம், கௌரவம், பெரும் மரியாதை, உண்மை, பொறுமை, அடக்கம்.

சுக்கிரன்: களத்திரம், சகோதரி, மகள், மைத்துனி, விலைமாது, இசை, நடனம், நடிப்பு, நிதி, வங்கி, நகைக்கடை, கால்நடைத்துறை, துணி வியாபாரம், ஃபேன்சி ஸ்டோர், உடல்சேர்க்கை, திருமணம், வீடு, இன்பம், வாகனம், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், இனிப்பு, போதை, அழகானதோற்றம், அழகு, ரகசிய விஷயங்கள், நடனம், அரங்கு, திரையரங்கு, மகளிர்குழு.

சனி: மூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் பெறும் வேலை, தொழில், கேரியர், வேலை, துணிகள், இரும்பு, ஈயம், சுழல்காற்று, புயல், செங்கல்சூளை, சூதாட்டம், எண்ணெய் சுரங்கம், இரும்பு.

ராகு: தந்தைவழி தாத்தா, வெளிநாட்டுப் பயணங்கள், மின்னணுவியல், வான் பயணவியல், நடிகர், புகைப்படம் எடுத்தல், திரைத்துறை, புலனாய்வு அதிகாரி, பாதுகாப்புத்துறை, கடத்தல், திருட்டு, ஊழல், விபத்துகள், தொல்லைகள்.

கேது: தாய்வழி தாத்தா, ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம், நூல், மது, செயல்தடை, ரகசிய நடவடிக்கை, தீர்வு, மருத்துவமனைகள், பிரார்த்தனைக் கூடங்கள், எழுதுதல், ரகசியம், சர்ச்சை, வழக்கு, தடைகள்.

காலபுருஷ தத்துவத்தின்படி ஜாதகத்தில் பொதுவாக பன்னிரண்டு பாவகங்கள் இருந்தாலும், ஒருவர் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் லக்னமே அவரின் ஜென்ம லக்னமாக, அவருடைய ஜாதகத்தின் முதல் வீடாக அமைகிறது.

அந்த முதல் வீடு ஒவ்வொருவருக்கும் மேஷத்திலிருந்து மீனம்வரையில் எதுவாகவும் இருக்கலாம்.

ஒரு நாளுக்குரிய இருபத்துநான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு லக்னங்களுக்குரிய காலங்கள் உள்ளடங்கியுள்ளன என்பதால், அந்த நாளில் ராசியும் நட்சத்திரமும் ஒன்றாகவே இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் லக்னம் என்பது வேறாகிவிடும். இந்த லக்னத்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பலன்கள் அமைகின்றன.

லக்னம் தொடங்கி 12 பாவகங்கள்

ஜாதகத்தில் லக்னம் என்பதே அனைத்திற்கும் முதன்மையும் மூலமுமாகும். இதையே ஜென்மம் என்கிறோம். ஜாதகரின் ஆயுள், உருவம், நிறம், குணம், ஆரோக்கியம், சிந்தனை, பதவி, புகழ், கீர்த்தி, வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகங்கள், இறைவனை வழிபடும் அல்லது வெறுத்திடும் மனநிலை, துக்கம், சந்தோஷம், சொந்த ஊரில் வாழ்வாரா? வெளியூரில் வாழ்வாரா? கோபக்காரரா? அமைதியானவரா? அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும்; அவருடைய உடலின் தலையையும் லக்ன பாவத்திலிருந்தே அறியமுடியும்.

ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த வீடு இரண்டாம் பாவகமாகும். இந்த இடம்தான் ஜாதகரின் தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து ஜாதகரின் வசதி வாய்ப்பு, கல்வி, பேச்சு, உணவு, குடும்பம், சாஸ்திர ஞானம், பொன், பொருள், ஆபரணங்கள், வங்கி சேமிப்பு, பணவரவு, செலவு, எதிர்பாராத யோகங்களையும்; கண் பார்வை, திக்குவாய், முகம் ஆகியவற்றைப் பற்றியும் அறியமுடியும்.

லக்னத்திற்கு மூன்றாவது இடம் மூன்றாம் பாவகமாகும். இந்த இடத்தை வைத்து ஜாதகரின் தைரியம், வீரியம், இளைய சகோதரர்கள் போன்றவற்றையும்; கடிதப் போக்குவரத்து, தகவல் பரிமாற்றங்கள், வீடு மாறுதல், அருகில் வசிப்போர் மற்றும் ஜாதகர் வீரமுள்ளவரா கோழையா என்பதையும்; சங்கீத ஞானம், முன்னோர் கடன், மதபேதம், கனவுகள் பற்றியும்; உடலில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம் போன்றவற்றையும் அறியமுடியும்.

லக்னத்திற்கு நான்காவது இடம் நான்காம் பாவகமாகும். இது மாதுர் ஸ்தானம், சுக ஸ்தானம், வாகன ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து தாயாரின் நிலை, அந்த ஜாதகருக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லற சுகம், வாகனயோகம், வீடு, நிலம், கல்லூரிப் படிப்பு, ஸ்திர சொத்துகள், விளைநிலங்கள், நண்பர்கள், உறவினர் கள், துக்கம், புதையல், கிணறு, தோப்பு, மருமகன், உடலின் மார்பு, இதயப் பகுதியைப் பற்றியெல்லாம் அறியமுடியும்.

ff

லக்னத்திற்கு ஐந்தாவது இடம் ஐந்தாம் பாவகமாகும். இது பூர்வ புண்ணிய- புத்திர ஸ்தானமாகும். அந்த ஜாதகர் போன ஜென்மத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் இந்த பாவகத்தை வைத்துத் தெரிந்துகொள்ள முடியும். குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா? பூர்வீக சொத்துகள் உண்டா என்பதையும்; கலைத்துறையில் அவருக்கு வாய்ப்புண்டா? சினிமா, லாட்டரி, டிராமா, ரேஸ், காதல் திருமணம் போன்றவற்றையும் இந்த பாவகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கீர்த்தி ஸ்தானம், பிரதாப ஸ்தானம் என்றும் இந்த இடம் கூறப் படும். இந்த இடத்தை வைத்து ஜாதகரின் குண இயல்புகள், ஆத்திகரா- நாத்திகரா? பிரபுத்துவம், தாய்மாமன், மந்திர உபதேசம், யோக அப்பியாசம், வணங்கவேண்டிய தெய்வம், தெய்வ அனுக்கிரகம், நூல், நாவல் எழுதுதல், வேதம் ஓதுதல், அறிவுத்திறன், உடலில் வயிற்றுப்பகுதி, வயிற்றுக் கோளாறுகள் பற்றியெல்லாம் அறிய முடியும்.

லக்னத்திற்கு ஆறாவது இடம் ஆறாம் பாவகமாகும். இது ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து ஜாதகருக்கு ஏற்படும் நோய், கவலைகள், துக்கங்கள், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட் வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைப்படுதல், கிரிமினல் விவகாரம், திருடு கொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆகியவற்றை அறிவதுடன், அடிவயிற்றைப் பற்றியும் அறியமுடியும்.

லக்னத்திற்கு ஏழாவது இடம் ஏழாம் பாவகமாகும். இது களத்திர ஸ்தானம், போகஸ்தானம், நட்பு ஸ்தானமாகும். அந்த ஜாதகரின் வியாபாரம் பற்றி இந்த பாவகம் கூறும். இந்த பாவகத்தில் இருந்து காமம், போகம், ஆண் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும், பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும், மற்றும் திருமணம், இல்லற வாழ்வின் நிலை, யாத்திரை, கூட்டுத்தொழில் பற்றியெல்லாம் அறியலாம். உடம்பில் நாபிக்குக் கீழுள்ள இடைப்பகுதியைப் பற்றியும் இந்த பாவகத்தை வைத்தே அறிய முடியும்.

லக்னத்திற்கு எட்டாவது இடம் எட்டாம் பாவகமாகும். இது அஷ்டம ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், அவமான ஸ்தானமாகும். எதிர் பாராத தன, லாப யோகத்தையும் இந்த பாவகத் திலிருந்தே அறியமுடியும். இந்த பாவகத் தின்மூலம் ஜாதகரின் ஆயுட்காலம்,

அவருடைய மரணம் இயற்கையானதா- துர்மரணமா என்பதையும்; அவர் அடைந் திடக்கூடிய அவமானங்கள், கண்டங்கள், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், சிறைவாசம், லாட்டரி, புதையல் போன்ற எதிர்பாராமல் கிடைக்கும் தன லாபங்களையும்; பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளையும், அடிமை மற்றும் அகதியாய் இருக்கும் நிலையையும், உயிர்க்கொல்லி நோய், பால்வினை நோய் பற்றியும்; பெண்கள் ஜாதகத்தில் இந்த பாவகத்தை வைத்து மாங்கல்ய பலத்தையும், விவாகரத்து, சோம்பேறித்தனம் ஆகியவற்றையும் அறியமுடியும். உடல் உறுப்பில் மர்ம ஸ்தானம் மற்றும் பிறப்புறுப்பு பற்றியும் இந்த பாவகத்திலிருந்து அறியமுடியும்.

லக்னத்திற்கு ஒன்பதாவது இடம் ஒன்பதாம் பாவகமாகும். இது பிதுர் ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானமாகும். இந்த பாவகத்தின்மூலம் தகப்பனாரின் நிலை, ஜாதகரின் யோகம், பூர்வ புண்ணியம், சொத்துகள், குறிப்பாக தந்தைவழி சொத்து, வேள்வி, தேவாலயப் பிரதிஷ்டை, கப்பல், யாத்திரை, சாஸ்திர விவேகம், நீண்ட பயணம், தீர்த்த தல யாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு, கோவில் திருப்பணி, அட்டமா சித்துகள், உயர்கல்வி பற்றியெல்லாம் அறியமுடியும். உடலுறுப்பில் தொடைகளைப் பற்றி அறியலாம்.

லக்னத்திற்கு பத்தாவது இடம் பத்தாம் பாவகமாகும். இந்த பாவகத்திலிருந்து ஜாதகரின் தொழில், ஜீவனம், அந்தஸ்து, செல்வாக்கு, தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, தாயார், தகப்பனாருக்கு செய்யும் கர்மங்களின் நிலைகள்பற்றி அறியமுடியும். மேலும், அதிகாரம், அரசியல், செல்வாக்கு, யோகம், யாகம், போஜன ருசி, தகப்பனின் செய்பாவம் ஒழித்தல், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம் பற்றியும்; உடம்பில் முழங்கால்களைக் குறித்தும் அறியலாம்.

லக்னத்திற்கு பதினொன்றாவது இடம் பதினொன்றாம் பாவகமாகும். இந்த பாவகத்திலிருந்து ஜாதகர் அடைந்திடக் கூடிய லாபநிலை, மூத்த சகோதரர் நிலை, இளையதாரம் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். மேலும் தொழில் வழியாகவும், பிற வழிகளாலும் ஏற்படும் லாபங்களையும், பொருளீட்டல், சொத்துகள் அடைதல், தொலைத் தொடர்புகள்வழியே லாபம் காணுதல், கடல் பயணம், சுகங்கள் பற்றியும்; உடலில் கணுக்கால் பற்றியும் அறியமுடியும்.

லக்னத்திற்கு பன்னிரண்டாவது இடம் பன்னிரண்டாம் பாவகமாகும். இது மோட்ச ஸ்தானம், விரய ஸ்தானமாகும். அயன,சயன, போக, பாக்கியம் குறித்தும்; ஜாதகருக்கு உண்டாகும் செலவுகள், நஷ்டங்கள், துன்பம், பாவங்கள், வறுமை, துரதிர்ஷ்டம், மறைமுக எதிர்ப்பு, சிறைவாசம், மறுபிறவி, மோட்சம், தற்கொலை, ராஜதுரோகம், ஜாதி மாறுதல், அந்நியதேச வாசம், உடலுறுப்பில் பாதங்கள் ஆகியவற்றையும் இந்த பாவகத்திலிருந்து அறியலாம்.

பாவகங்களால் மாறும் பலன்கள்

ஒருவரின் ஜாதகம் என்று வரும்போது, கிரக காரகர்களால் உண்டாகும் பலன்கள் அவர்கள் அமரும் பாவகத்தை வைத்து மாறுபடக்கூடும். சுபப் பலன்களை வழங்கும் கிரகங்கள் பாதகாதிபதி வீட்டிலோ, மறைவு ஸ்தானங் களிலோ அமரும்போது அவர்கள் கொடுக்கும் நற்பலன்களை வழங்கிட முடியாதவர்களாகி விடுகின்றனர், பாதகப் பலன்களை வழங்கும் கிரகங்கள் சுப பாவகங்களில் அமரும்போது அந்த பாவகத்தின் பலனையும் எதிர்மறையாக்கி விடுகின்றனர். கிரக காரகன் அவனுக்குரிய ஸ்தானத்தில் இருக்கும்போது- உதாரணமாக களத்திரகாரகன் ஒரு ஜாதகரின் களத்திர ஸ்தானத் திலேயே அமரும் நிலையில் அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

அதேநேரத்தில் லக்னம் தொடங்கி பன்னிரண்டு பாவகங்களும் ஒவ்வொரு ஜாதகருக்கும் உயிர்நாடியாகவே இருந்து தங்கள் பாவகத்திற்குரிய பணிகளின்மூலம் ஜாதகருக்குப் பலன்களை வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொருவரின் பாவகங்களின் காரணமாக கிரக காரகர்களின் நிலைப்பாடு மாற்றம் பெறுவ தால், ஜாதகத்தில் ஒன்பது கிரக காரகர்களைவிட பன்னிரண்டு பாவகங்களே ஜாதகரின் வாழ்க் கையை வழிநடத்திடக் கூடியவையாக உள்ளன.

செல்: 94443 93717