11-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். தானம் செய்பவராக இருப்பார்.

அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அனைவரிடமும் அன்புடன் பழகுவார். பணக்காரராக இருப்பார்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அதுவே பாவ கிரகமாக இருந்தால், ஜாதகர் குறைவாக சாப்பிடுவார். சந்தோஷம் குறைவாக இருக்கும். உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். பணவசதி குறைவாக இருக்கும். அதுவே சுபகிரகமாக இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல பண வசதி இருக்கும்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன்னுடன் பிறந்தவர்களை ஏமாற்றுவார். தன் மனைவி யையும் ஏமாற்றுவார். ஆனால், வெளியே தன்னை நல்ல மனிதராக காட்டிக் கொள்வார். ஜாதகருக்கு நல்ல முக அழகு இருக்கும். அருமையாக பேசுவார்.

Advertisment

vv

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். தந்தையுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகர் தர்மத்தைக் காப்பாற்றுவார். நல்ல பணவசதி இருக்கும். அன்னையால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.

11-ஆம் பாவத் திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் மகனிடம் பாசமாக இருப்பார்.

வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பிள்ளைகள் வளர.... வளர வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். நோய்கள் இருக்கும். தேவையற்றதைப் பேசி, ஜாதகர் மாட்டிக்கொள்வார். எதிரிகளால் அவருக்கு பெரிய அளவில் ஆபத்து இருக் கிறது.

‌‌ 11-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண் டிருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் பெரிய பதவியில் இருப்பார். மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வார்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நோய்களின் பாதிப்பு இருக்கும். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். சுப கிரகமாக இருந்தால், நீண்ட ஆயுள் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பல சாஸ்திரங்களைக் கற்றவராக இருப்பார். பல விஷயங்களையும் அறிந்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். செய்யும் தொழி-ல் பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் அன்னையை மதிப்பார். ஆனால், தந்தையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும். பணக்கார ராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். அவர் பலரையும் காப்பாற்றுபவராக இருப்பார். குடும்பத்தை நல்லமுறையில் பார்த்துக்கொள்வார். பிடிவாத குணம் இருக்கும்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நீண்ட ஆயுள் இருக்கும். நிறைய வாரிசுகள் இருப்பார்கள். ஜாதகர் நல்ல செயல்களைச் செய்வார். நல்ல மனிதராக இருப்பார். நல்ல தோற்றத்துடன் இருப்பார்.

11-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத் தில் இருந் தால், ஜாத கர் பல பொருட் களைச் சேர்த்து வைக்கக்கூடியவராக இருப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் அதிகமாக சிந்திப்பார். சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று பணம் சம்பாதிப்பார்.

செல்: 98401 11534