Advertisment

10-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/10th-pavagadhipathys-benefits

ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாவது வீடு- ஜீவன ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம், கர்ம ஸ்தானம் எனப்படும். அவ்வீட்டுக்கு அதிபதி யான கிரகம் வலிமைபெற்றதாக இருந்தால் பிரசித்தி, யோக, போக வாழ்க்கையைக் கொடுக்கும். அரசாங்கத்தில் பெரிய அங்கம் வகிப்பது, சொத்துகள் நிறைய இருப்பது, வெளி நாடு செல்வது, தான- தர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்கள் செய்வது, ஆடை ஆபரணங்கள் அணிவது, வாகன சுகம், அதிகாரம், செல்வம், செல்வாக்கு என உயர்ந்து விளங்குவார்கள்.

Advertisment

லக்னத்துக்கு பத்தாவது வீட்டிற் குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், சொத்துகள், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, சுக சௌகர் யங்கள், கல்வி, ஞானம், தானதர்மம், தெய்வீக வழிபாடுகள், அரசாங் கத்தில் உயர்பதவி, கௌரவம், நல்ல வருமானம் முதலியவற்றுடன் இருப் பார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிவாளிகள் போன்றோ

ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாவது வீடு- ஜீவன ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம், கர்ம ஸ்தானம் எனப்படும். அவ்வீட்டுக்கு அதிபதி யான கிரகம் வலிமைபெற்றதாக இருந்தால் பிரசித்தி, யோக, போக வாழ்க்கையைக் கொடுக்கும். அரசாங்கத்தில் பெரிய அங்கம் வகிப்பது, சொத்துகள் நிறைய இருப்பது, வெளி நாடு செல்வது, தான- தர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்கள் செய்வது, ஆடை ஆபரணங்கள் அணிவது, வாகன சுகம், அதிகாரம், செல்வம், செல்வாக்கு என உயர்ந்து விளங்குவார்கள்.

Advertisment

லக்னத்துக்கு பத்தாவது வீட்டிற் குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், சொத்துகள், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, சுக சௌகர் யங்கள், கல்வி, ஞானம், தானதர்மம், தெய்வீக வழிபாடுகள், அரசாங் கத்தில் உயர்பதவி, கௌரவம், நல்ல வருமானம் முதலியவற்றுடன் இருப் பார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிவாளிகள் போன்றோர் நட்புடன் இருப்பார்கள்.

Advertisment

vvபத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 2-ல் இருந்தால், ஒளிபொருந்திய அழகுடன் இருப்பார்கள். வாக்கு வண்மை, திறம்பட பேசும்சக்தி, தைரியம் இருக்கும். செல்வந்தர்களாகவும், செல்வாக்குடனும், பிரபல நட்புடனும் இருப்பார்கள். சொத்துகள், வாகனங்கள் அமைந்திருக்கும். பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால், சகோதரர்கள் இருந்தாலும் புகழுடன் இருக்கமாட்டார்கள். சகோதர தோஷமுண்டு. பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 4-ல் இருந்தால், பெரிய மதிப்புள்ள வீடு, நில புலன்கள், அழகான குடும்பம், வாகனங் கள், பணியாட்கள், செல்வம், செல்வாக்கு, பால் பாக்கியம், தாய், தாய்வழி ஆதரவு முதலியவை உண்டாகும்.

4-ல் லாபாதிபதியான 11-ஆவது வீட்டுக் குரியவரும், 10-ஆவது வீட்டுக்குரியவரும் சேர்ந்திருந்தால் பூமியிலிருந்து பொன் சுரங்கம் போன்று புதையல் முதலியவற்றைப் பெறுவார்கள்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 5-ல் இருந்தால், புத்திர விருத்தி உண்டு. செல்வாக்கு கொண்ட குடும்பத்துடன், பெரிய மனிதர் நட்பையும் பெற்று, கௌரவமான வாழ்க்கை வாழ்வார்கள்.

அரசாங்கத்தின் உயர்பதவி கிட்டும்.

தெய்வீக வழிபாடுகள், சாஸ்திரங்களைக் கற்றறிந்து பிரபல யோகங்களுடன் விளங்குவார்கள்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 6-ல் இருந்தால், தந்திர புத்தியுடையவர்களாக வும், பொருளை அபகரிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். திடதேகம், தேஜஸ், அந்தஸ்து இல்லாத வர்கள்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 7-ல் இருந்தால், களத்திர தோஷம் ஏற்படும். மனைவி ஒற்றுமையாக இருக்கமாட்டார். கணவனின் பேச்சை மீறி தகாதவழிகளில் செல்லவும் கூடும். இரண்டு அல்லது மூன்று களத்திரங்கள் உண்டு எனலாம். மனைவிமூலம் பொருள் சேரும்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந்தால், நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியாக சந்தோஷங்களில் ஈடுபட முடியாது. தத்து, அபிமானப் பிள்ளைகள் அமைவார்கள்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 9-ல் இருந்தால், தகப்பனாரின் சொத்துகள் விரயமாகும். புத்திர விருத்தி இருக்காது. சிரமமான வாழ்க்கையை அனுபவிக் கும்படி இருக்கும். தெய்வீக வழிபாடுகளில் நிறைந்து விளங்குவார்கள். அரசாங்க ஆதரவையும், பெரிய மனிதர்களின் நன்மதிப்பை யும் பெறுவார்கள். தானதருமங்களிலும், சத்தியவழிகளிலும் நடப்பார்கள். பிற்கால வாழ்க்கை சிறப்புடன் அமையும்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 10-ல் ஆட்சியாக இருந்தால், உலக விஷயங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக இருப் பார்கள். பெரிய மனிதர்கள், உறவினர்களின் ஆதரவு இருக்கும். ஜீவன பலம் பெரிதாக அமையாது. சமபலமாக அமையும். தெய்வீக வழிபாடுகளில் பற்றுதல் இருக்கும். தானதருமம், புண்ணிய காரியங்களைச் செய்து புகழ்பெறுவார்கள்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 11-ல் இருந்தால், செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றிலும், பிரமாதமான லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் மூத்த சகோதர- சகோதரிகள் சிரமப்பலனை அனுபவிப் பார்கள். மாரகமும் ஏற்படலாம்.

பத்தாவது வீட்டிற்குரிய கிரகம் 12-ல் இருந்தால், அனாவசியமான செலவு களும், பொருள் நஷ்டமும், சிரமமும் ஏற்படும். போஜன சுகம், சயன சுகம் இருக்கும். புத்திரர்களால் கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டு. சொத்துகள் அழியும்.

பரிகாரம்

தொழிலில் சிறந்துவிளங்க உங்கள் ஊர் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவருதல் வேண்டும். ஒருமுறை திருச்செந்தூர் சென்றுவர தொழில் சிறக்கும். சிறப்பான வாழ்வு அமையும்.

செல்: 94871 68174

bala070619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe