"தொகை மிகு தனவான் குரூரவான் தூல
தேகவான் கர்வியே தகனாம்
துலங்கிய உரோம அழகுடையோனாம்
சோர்வது னா நாற்பதம் தொட்டோன்.''
-சாதக அலங்காரம்
பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், எதையும் ஆராய்ந்து செய்யாதவன். ஆனால் ஊக்கமுள்ளவன்.
காற்றிலாடும் சுடர் ஒளி தராது. ஆற்றிலாடும் ஓடம் கரை சேராது. கிரகங்களும், பாவங்களும், சரியான அமைப்பில் இல்லாது போனால், வாழ்க்கை சக்கரம் சரியாக ஓடாது. தசாபுக்திகளின் வேறுபாடே, நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன.
23. அவிட்டம்
பொதுவான குணம்: பலவகையான திறன்களை கொண்ட நீங்கள் எல்லவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதில் சிறந்தவர்கள். மனதாலும் செயலாலும் யாரையும் காயப்படுத்த மாட்டீர்கள். புத்திகூர்மையுடையவர்கள். அனைவரிடமிருந்தும் அன்பும் ஆதரவும் பெறுவீர்கள். சிறந்த தெய்வ பக்தி கொண்டவர்கள். ஆன்மிக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிறருக்கு உதவும் தாராள மனம் படைத்தவர்கள். மற்றவர்களிடம் பணிபுரிவதைவிட சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். எந்த சோதனை வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறமாட்டார்கள்.
அவிட்ட நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள், எந்த காரியத்தையும், உடனடியாக செய்து முடிக்கவேண்டும் என எண்ணுவார்கள். கலைத்துறைகளில் மிகுந்த ஆர்வமிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் முதன்மையானவர்.
ப் குடும்பம்: மனைவியின்மீது பாசமும், மனைவியின் பேச்சுக்கு மரியாதை அளிப்பவராகவும் இருப்பார்கள். குடும்ப கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ப் கல்வி: சிறந்த கல்வியறிவைப் பெற்றிருப்பார்கள். ஆனால், படிப்புக்கும் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/07/star-2026-03-07-12-00-26.jpg)
ப் தொழில்: எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் சாதிக்கும் வல்லமை படைத்தவர். நிர்வாகத்திறன் உடையவர்.
ப் திருமணப் பொருத்தம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், புரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால் சனி தசையில், சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம்.
அவிட்ட நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: அவிட்ட நட்சத் திரத்தில் பிறந்த பெண் தைரியம் மிக்கவர்.
ப் குடும்பம்: குடும்ப உறவுகளில் சவால்கள் ஏற்படலாம்.
ப் திருமணப் பொருத்தம்: அவிட்ட நட்சத்திரம் (மகர ராசி)- மிருகசிரீடம், சித்திரை, அஸ்வினி, பரணி, கார்த்திகை, பூரம், உத்திரம், கேட்டை, உத்திராடம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
ப் அவிட்ட நட்சத்திரம் (கும்ப ராசி): மிருகசிரீடம், சித்திரை, அஸ்வினி, பரணி, உத்திரம், உத்திராடம், பூரட் டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து, மற்ற நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும், சனி தசையில், மாதவிடாய் தொல்லைகள் இருக்கும்
நட்சத்திரப் பலன்கள்
அவிட்ட நட்சத்திரக்காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு தனியாகக் கொடுக் கப்பட்டிருக்கிறது..
(அவிட்ட நட்சத்திரப் பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/07/star1-2026-03-07-11-58-17.jpg)