"மைக் கண்ணார்க்கினியன் பரிமளப்பிரியன்   
மயிர்முடி அழகன் உற்சாகன்   
சிக்கனவானும் ஏற்பவர்க்கீவான்  
திகழ்ந்திடு வோண நாளினானே.''
-ஜாதக அலங்காரம் 

Advertisment

பொருள்: பெண்களால் விரும்பப் படுபவன். சிகை அலங்காரத்தில் சிறந்தவன். சிக்கனமானவன். ஆனாலும் தருமம் செய்வான்.     

Advertisment

மரங்களில் பழுத்த இலைகள் உதிர்த்து, புதிய இலைகள் துளிர்கின்றன. பறவைகள் பழைய இறகுகளை புதுப்பித்துக் கொள்கின்றன. காலம், ஆண்டுகளை மனித்துளிகளாகக் கரைத்துவிட்டு காலாவதியாகிறது. புதுயுகம் பிறக்கிறது. உலகம், தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்கிறது. இதையே மனிதர்கள், ஜனனம், மரணம் எனும், இன்ப- துன்பங்களாகக் காண்கிறார்கள்.

இது வெறும் காட்சி மாற்றம்தான். தசாபுக்தி களின் மாற்றங்களை நிகழ்வுகளை பிறப் பிக்கின்றன.      

Advertisment

  திருவோண நட்சத்திரத்தின் வலிமை 

ப் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஞானம், அறிவு, தெய்வீக சக்தி அதிகம் பெற்றிருப்பார்கள்.

ப் வாழ்க்கையில் தனிப்பட்ட கொள்கைகளை கடைபிடிப்பார்கள். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க விரும்புவார்கள்.

ப் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். சகல விதத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

ப் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்து முடிப்பார்கள்.

ப் சொந்த முயற்சியால் தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.

திருவோண நட்சத்திரத்தின் பலவீனம்

ப் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன சஞ்சலம், எண்ணங்களின் ஓட்டம் மிகைப்படுத்துவதால் குழப்பம் அடைவார். 

கூட்டு கிரக பலன்
(திருவோண நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.)

ப் திருவோண நட்சத்திரத்தில் சூரியனிருக்க மரியாதைக்குரியவர். 

ப் செவ்வாய் அமர்ந்திருக்க அதிக காம எண்ணமுடையவர்.

ப் புதன் அமர்ந்திருக்க குடும்ப பாசம் அதிகமுடையவர். 

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க அனைவரிடமும், 

நட்பாக பழகக் கூடியவர்கள்.

ப் சனி அமர்ந்திருக்க கடுமையான சொல்லுடையவர். வட்டி தொழிலில் லாபம் உண்டு.

ப் குரு அமர்ந்திருக்க நினைத்த காரியத்தை முடிக்கக் கூடியவர்கள்.
ப் ராகு அமர்ந்திருக்க குடும்பத்தில் ஆதரவு இருக்காது.

ப் கேது அமர்ந்திருக்க கேளிக்கையையும் பொழுதுபோக்கையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள்.

திருவோண நட்சத்திரப் பாத பலன்

ப் திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம் செவ்வாய் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் மன உறுதியில்லாதவர். 

ப் திருவோண நட்சத்திரத்தின் இரண் டாவது பாதம், ரிஷப நவாம்சம் சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. நோயின் தாக்கத்தால் நிம்மதி குறையும்.

ப் திருவோண நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம், மிதுன நவாம்சம் புதன் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆணவத்தால் பகை வளர்ப்பார். 

ப் திருவோண நட்சத்திரத்தின் நான்காவது பாதம், கடக நவாம்சம் சந்திரனால் ஆளப் படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் தெளிந்த சிந்தனையுடையவர் 

திருவோண நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

ப் சந்திரன் இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால், இந்த நட்சத்திர நாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம்.

ப் சந்திரன் கலை, இசை போன்றவற்றுக்கு அதிபதி என்பதால், திருவோண நட்சத்திரம் கலை, இசை பயிற்சி போன்றவற்றைக் தொடங்கலாம்.

ப் திருவோண நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்கள் பெருகும்.

திருவோண நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை

ப் புதிய தொழில் முயற்சி செய்யக்கூடாது.

பரிகாரம்

ப் திருவோண நட்சத்திர தினத்தன்று காஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

     (திருவோணம் நட்சத்திரப் பலன் நிறைவுற்றது)

செல்: 63819 58636