"ஓதிய பொருளும் வல்லான் உயர்ந்திடும் புகழும் பூண்பான்
தாதவிழ் குழலினார்க்கு த் தனத்தோடு முயல வல்லான்
நீதியும் உடையனாகும் நினைத்தது முடிக்க வல்லான்
தீதொரு நாளும் செய்யான் திருவோண நாளினானே.''
-மரண கண்டிகை
பொருள்: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவன், புகழ் பெறுவான். தர்மசாத்திரம் அறிந்தவன். யாருக்கும் தீங்கிழைக்க மாட்டான்.
தீயை கடையும்போது, அக்னி குஞ்சு பிறக்கிறது. அது தீக்கடை கோலிலோ, கற்குழிக்குள்ளோ மறைந்திருப்பதில்லை. (நெருப்பு தீ குச்சியிலும் இல்லை, தீ பெட்டியிலும் இல்லை) கடைதல் (உரசுதல்) எனும் செயலால், உருவாகிறது. தன்னிலிருந்தே, தன்னை தோற்றுவித்துக்கொள்ளும் நெருப்பு, பொருட்களால் உருவாகாது. இயக்கத்தால் மட்டுமே உருவாகும். ஆண்- பெண் சேர்வதே, படைப்பு தொழிலுக்குக் காரணமாகிறது. காலபுருஷன், தன்னை ஆண்- பெண் என இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறான். இரண்டு பகுதிகளும் ஒன்றிணைந்து, எல்லா உயிர்களை யும் உருவாக்குகின்றன. சந்திரன், தசாபுக்தியில் வெவ்வேறு நட்சத்திரங்களைத் தொடர்பு கொள்ளும் போது நிகழ்வுகள் உருவாகின்றன.
திருவோணம்
பொதுவான குணம்: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் எத்தனை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் கூட எளிமையாக வாழ்பவர்கள்.
திருவோண நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: அடுத்தவர் பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். நடத்தையில் அடக்கமும், நேர்மையும் நிறைந்திருக்கும்.
அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு புறம்பாக நடந்து கொள்ளமாட்டார்கள். தவறு என்று தெரிந்தால் அதை உடனே சுட்டிக்காட்டத் தயங்க மாட்டார்கள். நல்ல நீதிமான்களாகத் திகழ்வார்கள்
ப் குடும்பம்: திருவோண நட்சத் திரத்தை சேர்ந்தவர்கள், மனைவிமீதும், தாயின்மீதும் அதிக பாசம் வைத்தி ருப்பார் கள்.
சில நேரம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதால் சின்னச்சின்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும்
ப் கல்வி: கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலர் அதிக கல்வி கற்காவிட்டா லும், அதிக அனுபவம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/20/star1-2026-02-20-16-47-23.jpg)
ப் தொழில்: வேலை மற்றும் தொழில் இரண்டுமே வெற்றிகரமாக அமையப் பெற்றவர்கள். இரண்டிலுமே வெற்றி காண்பார்கள். 24 வயதிலிருந்தே நல்ல மாற்றங்களும், வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.
ப் திருமணப் பொருத்தம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம், அஸ்தம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை நன்றாக பொருந்தும்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலை யிலிருக்கும். ஆனால், ராகு தசை நடக்கும் காலத்தில், மனக் குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும்
திருவோண நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தூய்மைக்கு முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கொள்கைகளுடன் வாழ்வார்கள்.
ப் குடும்பம்: இந்த நட்சத்திரப் பெண்கள், திருமண வாழ்க்கை சுகமாக இருக்கும். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.
ப் திருமணப் பொருத்தம்: ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம், பூசம், நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் ராகு தசை- சந்திர புக்தியில் மறதி நோயால் பாதிக்கப்படுவார்.
நட்சத்திர பலன்கள்
திருவோண நட்சத்திரக்காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத் தைக்கொண்டு தின பலனறியும்
குறிப்பு. (திருவோண நட்சத்திரப் பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/star-2026-02-20-16-47-12.jpg)