Advertisment

நலம் தரும் நட்சத்திரம் 43

star

"நித்தம் நீர் ஆடவல்லான் நிந்தனைத் துதிக்க வல்லான்  
கொந்தலர் குழலினாள் தன் குவிமுலை வசந்தனாகும் 
சித்தமதுடையனாகும் செகந்தனிற் கலித்தோர் கீவான்  
உத்தம குணத்தனாகும் உத்திராட நாளினானே.''
-மரண கண்டி
 
பொருள்: உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன்- மனைவி சொல்படி நடப்பான். 

Advertisment

தருமம் செய்வதில் விருப்பமுடையவன்.    

பழுத்த பழங்கள்  மட்டுமல்லாது, சிலசமயம் பழுக்காத காய்களும் வெம்பி விழும். பலமான காற்றாலும், பறவைகள் அமர்வதாலும் காய்கள்  உதிர்ந்துவிடும்.  அதுபோல் விதியின் வினை பயனால், நோயாலும், விபத்தாலும் அற்ப ஆயுளில் மானுடர் மாண்டு போவதை உணர்ந்தால் மட்டுமே விதியின் தொடர்பையும், வலிமையையும் அறியமுடியும

"நித்தம் நீர் ஆடவல்லான் நிந்தனைத் துதிக்க வல்லான்  
கொந்தலர் குழலினாள் தன் குவிமுலை வசந்தனாகும் 
சித்தமதுடையனாகும் செகந்தனிற் கலித்தோர் கீவான்  
உத்தம குணத்தனாகும் உத்திராட நாளினானே.''
-மரண கண்டி
 
பொருள்: உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன்- மனைவி சொல்படி நடப்பான். 

Advertisment

தருமம் செய்வதில் விருப்பமுடையவன்.    

பழுத்த பழங்கள்  மட்டுமல்லாது, சிலசமயம் பழுக்காத காய்களும் வெம்பி விழும். பலமான காற்றாலும், பறவைகள் அமர்வதாலும் காய்கள்  உதிர்ந்துவிடும்.  அதுபோல் விதியின் வினை பயனால், நோயாலும், விபத்தாலும் அற்ப ஆயுளில் மானுடர் மாண்டு போவதை உணர்ந்தால் மட்டுமே விதியின் தொடர்பையும், வலிமையையும் அறியமுடியும். யோகாதிபதியும், மாரகாதிபதியும் அமரும் நட்சத்திரங்களைக் கொண்டு, ஒரு ஜாதகரின் கர்ம வினையை அறியலாம்.

Advertisment

உத்திராடம்   

உத்திராட நட்சத்திரத்தின் வலிமை

ப் இயற்கையிலேயே தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறன் கொண்டவர். நேர்மையான சிந்தனை மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் குணம் இவர்களின் மிகப்பெரிய வலிமை.

ப் எடுத்த காரியத்தை எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் முடித்து காட்டும் குணம் உடையவர்.

ப் குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்.

ப் தெளிவாக சிந்தித்து, நிதானமாக செயல்படுவார். 

ப் மற்றவர்களை கவரும் ஆளுமை உடையவர்.

ப் பல கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பார்.  

உத்திராட நட்சத்திரத்தின் பலவீனம்  ஓய்வில்லாமல் உழைப்பதால், உடல் நலனை கவனிக்கத் தவறிவிடுவார்.

கூட்டு கிரகப் பலன்
(உத்திராட நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)

ப் உத்திராட நட்சத்திரத்தில், சூரியனி ருக்க, செல்வமும், செல்வாக்கும் அடிபணியும்.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க, கல்வியில் தடை வரும். 

ப் புதன் அமர்ந்திருக்க, 25 வயதிற்குபிறகு வெற்றியுடையவர்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, இளம்வயதில் பார்வைக் கோளாறு உண்டாகும்.

ப் சனி அமர்ந்திருக்க, மத  நம்பிக்கையும், இரக்க குணமும் அதிகம்  உண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, ஜாதகன் உயர் கல்வியில் பட்டம் பெறுவான்.

ப் ராகு அமர்ந்திருக்க, சுய விளம்பர பிரியன்.

ப் கேது அமர்ந்திருக்க, தொழிலில் அதிக ஏற்ற- இறக்கம் உண்டாகும்.

star1

உத்திராட நட்சத்திரப் பாதப் பலன்

ப் உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதம், தனுசு நவாம்சம். குருவால் ஆளப்படு கிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் அரசனுக்கு சமமான பதவி யிலிருப்பார்.

ப் உத்திராட நட்சத்திரத் தின் இரண்டாவது பாதம், மகர நவாம்சம் சனியால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் தரும நெறி  தவறாதவர்.

ப் உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் கும்ப நவாம்சம். சனியால் ஆளப்படு கிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், எல்லோ ரையும் சமமாகக் கருதுவான். 

ப் உத்திராட நட்சத்திரத்தின் நான்கா வது பாதம் மீன நவாம்சம். குருவால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், நீதி சொல்லும் இடத்திலிருப்பார்.

உத்திராட நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

ப் விதை விதைக்க, வீடு கட்ட, வாழை வைக்க, ஏற்ற நாள்.

உத்திராட நட்சத்திர பரிகாரம்

ப் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடவேண்டும்.

ப் அச்சிறுப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும், விநாயகரை வழிபட்டால் வெற்றியடையலாம்.                                                 

(உத்திராட நட்சத்திரப் பலன் நிறைவு பெற்றது)

செல்: 63819 58636

bala140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe