"முகமது கமலம் போலும் மூக்கு நீண்டுயர்ந்த கண்ணாள்
மிக வளர்ந்திருக்கும் கொங்கை விளம்புற்ற கோங்கு போலும்
சுக மணம் பகர வேண்டும் சுந்தரம் உடையனாகும்
சுகமதிழ்ந்த திருக்கும் அன்பாய் அனுஷ நாள் பிறந்தனளே.''
-மதன நூல்
சக்கரம் மேலும், கீழும் சுழல்வதால் மட்டுமே இயக்கம் உண்டாகிறது. அது போலவே, கால சக்கரமும் சுழல்கிறது. மேடு, பள்ளம் இருப்பதால்தான் மலைகளில் தன் பயணத்தைத் துவக்கும் நீர், நதியாக ஓடுகிறது. கீழ்நிலையில் உள்ளோர் முயற்சியால் மேலான நிலைக்கு செல்லுவதாலும். மேல் நிலையிலுள்ளோர் ஆணவத்தால் கீழான நிலையை அடை வதாலுமே, தர்மசக்கரம் சுழலுவதை, உணரமுடிகிறது. ஏற்ற தாழ்வால் வருவதே வாழ்க்கை.
ஜனன காலத்து நட்சத்திர அடிப்படையில் அமையும் தசாபுக்திகளே, வாழ்க்கை சக்கரத்தை இயக்குகிறது.
அனுஷம்
அனுஷ நட்சத்திரத்தின் சிறப்பு நேர்மை, நல்ல பேச்சுத் திறன், கடவுள் பக்தி உடையவர்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
அனுஷ நட்சத்திரத்தின் வலிமை
ப் அமைதியானவர், சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்.
ப் ஆளுமைத் தன்மை, நிர்வா கத்திறன் உடையவர்கள்.
ப் கம்பீரத் தோற்றம் இவர்களுடைய வலிமை.
அனுஷ நட்சத்திரத்தின் பலவீனம்
ப் சில நேரங்களில் மனதில் சோகமும் வெறுமையும் உண்டாகும்.
ப் கால தாமதமாக வரும் வெற்றியால், மகிழ்ச்சியை அனுபவிப்பதில் தாமதம் ஏற்படும்.
கூட்டு கிரக பலன்
(அனுஷ நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
ப் அனுஷ நட்சத்திரத்தில், சூரியனிருக்க, வீரம் மிகுந்தவன்.எதிரிகளை வெல்லுவான்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, அரசு விரோதம் அதிகமுடையவர்.
ப் புதன் அமர்ந்திருக்க, நகைச்சுவை பேச்சில் நிபுனராக இருப்பார்.
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, காம சாத்திரம் கற்று அறிந்தவர்.
ப் சனி அமர்ந்திருக்க, அரசு விரோத செயல்களில் ஈடுபடுவார்.
ப் குரு அமர்ந்திருக்க, அடிக்கடி ஆபத்து களில் சிக்குவார்.
ப் ராகு அமர்ந்திருக்க, பலவீனமான ஆரோக்கியம் உடையவர்.
ப் கேது அமர்ந்திருக்க, சனியும், புதனும் சேர்ந்தால் அறிஞன்.
அனுஷ நட்சத்திரப் பாத பலன்
ப் அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் வருமுன் உரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.
ப் அனுஷ நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், கன்னி நவாம்சம் புதனால் ஆளப்படுகிறது. கலை ஆற்றலுடன் காணப்படுவார்கள். சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு உடையவர்.
ப் அனுஷ நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம். சுக்கிர பகவா னால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனையும் செயலும் மற்றவர்களை வியப்புறச் செய்யும்படி இருக்கும்.
ப் அனுஷ நட்சத்திரத்தின் நான்கா வது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், சூழ்ச்சி குணம் மிக்கவர்களாகக் காணப் படுவார்கள்.
அனுஷ நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
ப் வீர விளையாட்டுகளை துவங்க ஏற்ற நாள்.
அனுஷ நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை
ப் ஞாயிறு, திங்கட்கிழமைகளும்,
அனுஷ நட்சத்திரமும் கூடும் நாட்களில் சுப காரியங்களை செய்யக்கூடாது.
அனுஷ நட்சத்திர பரிகாரம்
ப் நாமக்கல் ஸ்ரீஅனுமனை வழிபாடு செய்வது, அனுஷ நட்சத்திரத்திற்கு மிகவும் உகந்தது.
ப் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
(அனுஷ நட்சத்திர பலன் நிறைவுற்றது)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/anusham-2025-12-18-13-45-46.jpg)