"கார்பரிக்கமுத வண்ணன் கடுஞ்சொற்கள் பேச வல்லான் 
சீர்பெற செய்ய வல்லான் சோர்ந்தவர்க்கொன்றுமியான் 
தாரமாய் இருக்கும் சால துக்கமே பேச வல்லான் 
ஆர்வமே தேகமெங்கும் அனுஷதான் தோன்றினானே.''

Advertisment

-மரண கண்டிகை 

பொருள்: அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர், மனதில் உறுதியானவர். ஆர்வம் மிகுந்து விளங்குவார். பிறருக்கு உதவி செய்யமாட்டார்.    

Advertisment

முளைக் கொம்பில், பிணைத்த கயிரில் கட்டுண்ட பசுவாய் உடல் இயங்குகிறது. மனம் எனும் பாசக்கயிரே, உயிரையும், உடலையும், இணைக்கிறது. அவரவர், பிறந்த நட்சத்திரமே, மனதையும், அதன் குணத்தையும் தீர்மாணிக்கிறது. 


அனுஷம்  ராசி வடிவம்  

ப் பொதுவான குணம்:  வித்தியாசமான சிந்தனை, பெற்றோரிடம் பாசம், தெய்வீக பக்தி மற்றும் சாஸ்திரங்களைக் கடைப்பிடிக்கும் உறுதி கொண்டிருப்பார். வாழ்வில் பொறுமை, கடமை உணர்வு, மற்றும் ஆன்மிக நாட்டம் கொண்டிருப்பார்.                

Advertisment

stara

                                                                              
அனுஷ நட்சத்திரம் (ஆண்)

ப் குணம்: தனித்துவமான சிந்தனை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர். தெய்வபக்தி மிக்கவர். தன் கொள்கையில் உறுதியாக இருப்பார்.

ப் குடும்பம்: அனுஷ நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள், பெற்றோரை, கடைசிவரைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டிருப் பார்கள் 

ப் கல்வி: கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார், பல துறைகளில் சிறந்து விளங்குவார். இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார். வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் யோகமும் இவர்களுக்கு உண்டு. சனி தசையில் பிறப்பதால் ஆரம்பக்கல்வி சற்று மெதுவாக இருந்தாலும்,  புதன் தசை வரும்போது கல்லூரி வாழ்க்கையில் சாதனை படைப்பார்.

ப் திருமணப் பொருத்தம்: ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், மூலம் ஆகியவை நன்றாக பொருந்தும். 

ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால், புதன் தசை நடக்கும் காலத்தில், நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், உடலில் கெட்ட நீர் சேரக்கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.

starb

 அனுஷ நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பொறுமைக்கு ஏற்ற பெருமையைப் பெறுவார்கள்

ப் குடும்பம்: இந்த நட்சத்திர பெண்கள், வீட்டிலும் சுமுகமான சூழல் நிலவும்; உறவினர்களால் நன்மைகள் சேரும் மற்றும் விலகி இருந்த உறவுகள் மீண்டும் சேரும். குழந்தைகளின் வாழ்க்கையில் சுபகாரியங்கள் நடக்கும்.  

ப் திருமணப் பொருத்தம்: மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, பூராடம், புனர்பூசம், பூசம், நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.

ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட வராக இருப்பார். ஆனாலும் புதன் தசை- சந்திர புக்தியில், சுவாச  கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.

(அனுஷ நட்சத்திரப் பலன்கள் தொடரும்)

செல்: 63819 58636