"நெடியன் ரசியும் ன் நீள் கரம் கொங்கை கால்                           
தடியனவாகி தனகவிலனியாவர்க்கும்                                                          
மீடியன் மன மின் புற்றிருந்திடாள்                                                              
மடிகன் செய்யும் விசாக நாள் மங்கையே.''
-மதன நூல்  

Advertisment

பொருள்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவள், உயர்ந்த உருவம் கொண்டவள். அரசிபோல் வாழ்வாள். பலவித சாமர்த்தியம் உடையவள்.

Advertisment

விதைகள் உறையை கிழித்துக்கொண்டு வளர்கின்றன. பறவைக் குஞ்சுகள் முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும். பாதுகாப்பான கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் அரசனால், சாம்ராஜ்ஜியங் களை விரிவு படுத்தமுடியாது. அதிக பாதுகாப்பே, முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடும். காட்டுக்கு ஏது வேலி? சோதனைகள் வராதவரை சாதனை படைக்க முடியாது. திரிகோண ஸ்தானங்கள் அமைந்த நட்சத்திரங்கள், பாதுகாப்பையும், கேந்திரங்கள் அமைந்த நட்சத்திரங்கள் செயலாற்றலையும் தெரிவிப்பதாக அமைகின்றன.                                                     

விசாகம்

விசாக நட்சத்திரத்தின் சிறப்பு

அழகான தோற்றம், அறிவுக்கூர்மை, நியாய உணர்வு, தான தர்மங்களில் ஆர்வம் கொண்டவர்.

Advertisment

விசாக நட்சத்திரத்தின் வலிமை

ப் நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இரக்க குணம், மன அடக்கம் மற்றும் புலனடக்கம் ஆகியவை முக்கிய வலிமைகள்.

ப் அதிக ஆர்வம், கவனம் மற்றும் மனதின் சக்தியை ஒன்று திரட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ப் இந்த நட்சத்திரத்தின் அதிபதி குருவின் நல்லருளால், வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டமும் வெற்றியும் கிட்டும்.விசாக நட்சத்திரத்தின் பலவீனம்

ப் அதிகமாக பேசக்கூடியவர்- வீண் சண்டைகள் உருவாகும். அமைதி குறையும்.

கூட்டு கிரக பலன்
(விசாக நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனு டன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)

ப் விசாக நட்சத்திரத்தில், சூரியனிருக்க, சுக்கிரன் அஸ்த  நட்சத்திரத்தில் இருந்தால், பெண்ணாக இருந்தால், திருமணம்  நடைபெறுவது சந்தேகமே.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க, வரவைவிட செலவு அதிகம் உடையவர்.

ப் புதன் அமர்ந்திருக்க, அமைதியும், நிதானமும் உடையவர்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, 24 வயதுமுதல் வாழ்க்கை யில்  வெற்றியுண்டு.

ப் சனி அமர்ந்தி ருக்க, சூரியனும், புதனும் கேட்டையிலிருக்க அரசு ஆதரவு உண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, மூதாதையர் சொத்தால் பயனடைவான்.

ப் ராகு அமர்ந்திருக்க, தீய தொழிலால், பணம் வரும்.

ப் கேது அமர்ந்திருக்க, 35 வயது முதல் 40 வயதுவரை வாழ்க்கையில்  வெற்றியுண்டு.

விசாக நட்சத்திரப் பாத பலன்

ப் விசாக நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம் செவ்வாயால் ஆளப் படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் உடையவன். கவி பாடுவான்.  வியாபாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பார். 

ப் விசாக   நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் ரிஷப நவாம்சம்  சுக்கிரனால் ஆளப்படுகிறது. மற்றவர்களை கவரும் தோற்றத்துடன் காமத்தில் அதிக ஆர்வமுடையவர். வாக்கு வல்லமை பெற்றிருப்பார்.

ப் விசாக நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம் புதன் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தந்திர குணமுடையவர். மற்றவர்களை வியப்புறச் செய்யும்படி அறிவுடையவர்.

ப் விசாக நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக நவாம்சம் சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், இரக்க சுபாவம் மிக்கவர்களாகக் காணப்படுவார்.

விசாக நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

ப் திங்கட்கிழமையும், விசாக நட்சத்திரமும் கூடும்நாளில் சுப காரியங்களை செய்யலாம்.

ப் வெள்ளிக்கிழமையும், விசாக நட்சத்திரமும் கூடும்நாளில் சுப காரியங் களை செய்யக்கூடாது.

விசாக நட்சத்திர பரிகாரம்

ப் ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். 

ப் செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சஷ்டி தினங்களில் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்றுவழிபட வேண்டும்

(விசாக நட்சத்திரப் பலன் நிறைவுற்றது)

செல்: 63819 58636