"மறு தொடையில் பல்லவர்க்கும் வசியன் போசனப் பிரியன் பற்ற வாழ்வான்
நல்லியல் சேர் தேவதா பக்தியுந்தான் இச்சியுளன் ராச சேவைக்
கயல் விழுனானன் தாய் தந்தைக் கினியவன் விசுவாசமுளன் கடின தேகன்
சொல்லு நெறி உளன் கரத்தாயுதம் பிடிப்பான் தியாகவான் ஸ்வாதியானே.''
-சாதக அலங்காரம்
பொருள்: சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர், உணவு பிரியர், நீதி தவறாதவர், ஆயுத பிரயோகத்தில் ஆர்வம் அதிக முண்டு.
Advertisment
பழங்காலத்தில் கடலோடிகள், வடக்கு நட்சத்திரத்தைப் பயன்படுத்தி கடலில் தங்கள் வழியைக் கண்டறிந்தனர். இது ஒரு இயற்கையான திசைகாட்டியாக செயல்பட்டது. கடலில், திசையும், திக்கும் தெரியாமல் தவிப்பவர்களுக்கு, நட்சத்திரங்களே, வீடு திரும்புவதற்கான வழியைக் கண்டறிய உதவியது.
Advertisment
அதேபோல், வாழ்க்கைக் கடலில் சிக்கி தவிப்பவர்களுக்கு, அவரவர் ஜென்ம நட்சத்திரமே வழி காட்டியாகிறது.
சுவாதி
சுவாதி நட்சத்திரத்தின் சிறப்பு
ப் வெள்ளிக்கிழமையும், சுவாதி நட்சத்திரமும், துலா லக்னமும் கூடும் நேரத்தில் பிறந்தவர்கள். சாதனை படைப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தின் வலிமை
Advertisment
ப் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த அறிவுத்திறன் மற்றும் தெளிவான சிந்தனை உடையவர்கள்.
ப் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள்.
ப் தன்னம்பிக்கை மிக்கவர்கள். மன உறுதியால், தங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பார்கள்.
ப் நண்பர்கள் மற்றும் குடும்பத்தின ரிடம் மிகவும் நன்றியுடன் இருப்பார்கள்.
ப் மனவலிமையையும், புத்திசாலித்தனத் தையும் பெற்றவர்கள்.
சுவாதி நட்சத்திரத்தின் பலவீனம்
ப் கட்டுப்படில்லாத சுதந்திரத்தால், தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு உண்டு.
ப் பிடிவாத குணத்தால், நல்ல வாய்ப்புகளை நழுவவிடும் நிலை உண்டாகும்.
கூட்டு கிரகப் பலன்கள்
(சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.)
ப் சுவாதி நட்சத்திரத்தில், சூரியனிருக்க, தீய நட்பு உடையவன் நிலை அடைவான். குருவுடன் சேர்ந்து நின்றால், கல்வியில் சாதனை படைப்பான்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, மன உறுதி அதிகம். வியாபாரத்தில் வெற்றி.
ப் புதன் அமர்ந்திருக்க, கல்வி அறிவு அதிகமுடையவர்.
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, தைரியசாலி, சுய முயற்சியால் வெற்றி உடையவர்.
ப் சனி அமர்ந்திருக்க, ஊர் தலைவனாகும் யோகமுண்டு.
ப் குரு அமர்ந்திருக்க, செல்வமும், செல்வாக்கும் உடையவன்.
ப் ராகு அமர்ந்திருக்க, நீதி, நேர்மைக்கு தலை வணங்காதவன்.
ப் கேது அமர்ந்திருக்க, நீண்ட ஆயுள் உடையவன்.
சுவாதி நட்சத்திரப் பாத பலன்கள்
ப் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதம், தனுசு நவாம்சம். குருவால் ஆளப்படுகிறது. ஆன்மிக நாட்டம் அதிகமிருக்கும்.
ப் சுவாதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் மகர நவாம்சம். சனிபகவானால் ஆளப்படுகிறது. நன்றியுள்ளவன். குடும்பத்தில் மரியாதை மிகுந்தவராக இருப்பார்.
ப் சுவாதி நட்சத்திரத்தின் மூன்றா வது பாதம் கும்ப நவாம்சம். சனியால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த வியாபாரி. ஆனாலும் குடும்பத்தைப் பிரிந்து வாழ்வார்.
ப் சுவாதி நட்சத்திரத்தின் நான்காவது பாதம் மீன நவாம்சம். குருவால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், ஆரோக்கியம் குறைவு. அந்திம காலத்தில் அவஸ்தை அதிகம்.
சுவாதி நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
புதிய ஆடை வாங்குதல், பயிர் தொழிலைத் தொடங்குதல் போன்றவை செய்யலாம்.
சுவாதி நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை
ப் சித்திரை மாதமும், சுவாதி நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்கள் செய்யக்கூடாது.
சுவாதி நட்சத்திரப் பரிகாரம்
ப் வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியில் அல்லது பிரதி மாதம், சுவாதி நட்சத்திரநாளில், ஸ்ரீ நரசிம்மருக்கு, சிவப்பு அரளி மற்றும் செம்பருத்தி போன்ற சிவப்பு நிறப் பூக்களால் பூஜை செய்வது நன்மை பயக்கும்.
(ஸ்வாதி நட்சத்திரத்தின் விளக்கம் நிறைவு பெற்றது)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/lalgudi-2025-11-21-13-15-02.jpg)