"சொல்லவும் வல்லானாகும் சோதி சேர் கண்ணனாகும் 
இல்லையென்றுரைக்கமாட்டான் இரப்பவர் தமக்கு நல்கும் 
அல்லவே பலவும் பேசான் ஆயுதம் பிடிக்க வல்லான்  
தொல்லை நூல் பலவும் கற்றும் ஸ்வாதி நாள் தோன்றினானே.''
-விரும கண்டிகை 
பொருள்: சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர், சொல்லின் செல்வன், தானம் தருவதில் வள்ளல், பழமையான நூல்களில் ஆர்வம் அதிகமுண்டு. 
Advertisment
மண் குதிரை ஓடாது, மன குதிரை நிற்காது. மனமெனும் குதிரையை  கட்டுப்படுத்துவதே, அமைதியான வாழ்க்கைக்கு வழியாகும். மனோகாரகனாகிய சந்திரன் அமரும் நட்சத்திரம் சரியாக அமையாமல் போனால், வாழ்க்கைப் பயணம், குதிரை கீழேயும் தள்ளி, குழியையும் பறித்த கதையாக மாறும்.
Advertisment

star

15. சுவாதி  

பொதுவான குணம்:  சுவாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுதந்திர மனப்பான்மையும், முன்கோபமும் கொண்டவர் களாக இருப்பார்கள். கடின உழைப்பால் வெற்றி பெறுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டுவார்கள்.                                                                                              

சுவாதி நட்சத்திரம் (ஆண்)                                                  

ப் குணம்: சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண், அதிகாரம் மற்றும் தலைமைத்துவ திறன் மிகுந்தவர். வலுவான பொறுப்பு ணர்வு கொண்டவர். புத்திசாலிகள் மற்றும் பிறரைக் கவர்ந்திழுக்கும் திறமையுடையவர். தங்கள் கருத்துக்களை தெளிவாக வும் சுருக்க மாகவும் வெளிப் படுத்துவார்.
Advertisment
குடும் பம்: சுவாதி நட்சத்தி ரத்தை சேர்ந் தவர்களுக்கு, குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், மனைவியால், சமூகத்தில் பெயர், புகழ் உயர வாய்ப்புள்ளது.
கல்வி: சுவாதி நட்சத்திரம் புத்திசாலித் தனம், அறிவு மற்றும் தகவல் தொடர்புடன் தொடர்புடையது. கற்பித்தல் உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் வல்லவர்கள்.
தொழில்: நீதித்துறை, பேராசிரியர், மருத்துவம் சார்ந்த துறைகளில், சிறப்பாக செயல்படுவார்கள். 34 வயதிற்குபிறகு, செல்வம், செல்வாக்கு பெற்று வாழும் யோகம் உண்டு.
ப் திருமணப் பொருத்தம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்துக் கொள்ளலாம். 
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால், சனி தசை நடக்கும், காலத்தில் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். 

star1

சுவாதி நட்சத்திரம் (பெண்)

குணம்: சுவாதி நட்சத் திரத்தில் பிறந்த பெண்கள், லட்சியம் மற்றும் அதிக முயற்சி கொண்டவர்கள். அவர்கள் எதைச் செய்தாலும் மிகவும் எளிதாக வெற்றிபெற முடியும்.  
குடும்பம்: இந்த நட்சத்திரப் பெண்கள் தன், கணவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். கணவரின் வெற்றிக்கு இவர்கள்தான் காரணமாக அமைவார்கள்.
திருமணப் பொருத்தம்: ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், திருவோணம், சதயம், விசாகம், அனுஷம். நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சனி தசையில், உடல் வலி, சோர்வு போன்ற கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.
(சுவாதி நட்சத்திர பலன் தொடரும்)
செல்: 63819 58636