"பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான்
குலவிய நற்குணன் நடை நற்பிரியன் தாமத புத்திக்குரிசில் நண்பன்
நிலைமை பெறும் திட வசனன் முகத்துறு நன் மறு உளன் நித்திரையும்
அற்பன் செலவு செய்யான் சவுரியவான் தூக்கம் உன்னான் கோபி சித்திரையினானே.''
-சாதக அலங்காரம்
பொருள்: சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர், உடல் வலிமை உடையவன். திடமான வாக்குடையவன். பகலில் அதிக தூக்கமுடையவன்.
உலகம் ஒரு நாடக மேடை, மக்கள், அந்த நாடக மேடையில் தோன்ற
"பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான்
குலவிய நற்குணன் நடை நற்பிரியன் தாமத புத்திக்குரிசில் நண்பன்
நிலைமை பெறும் திட வசனன் முகத்துறு நன் மறு உளன் நித்திரையும்
அற்பன் செலவு செய்யான் சவுரியவான் தூக்கம் உன்னான் கோபி சித்திரையினானே.''
-சாதக அலங்காரம்
பொருள்: சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர், உடல் வலிமை உடையவன். திடமான வாக்குடையவன். பகலில் அதிக தூக்கமுடையவன்.
உலகம் ஒரு நாடக மேடை, மக்கள், அந்த நாடக மேடையில் தோன்றி மறைபவர்கள். கண்வழி மனமும் செல்ல, மனம் வழி செயலும், செயலின் வழியில் நவரசமும் சேரும் நாட்டியமே வாழ்க்கை. நவரச நாயகனாகிய சந்திரனே, மகிழ்ச்சியில் கூத்தாடும் மனதிற்கும், பொங்கி வரும் அழுகைக்கும் காரணமாகிறான். சந்திரன் அமரும் நட்சத்திரமே, வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
சித்திரை நட்சத்திரத்தின் சிறப்பு!
பூர்வ பட்சத்தில், சித்திரை நட்சத்திர நாளில், இந்திர தனுசு (வானவில்) தெரிந்தால், நல்ல மழை உண்டு.
சித்திரை நட்சத்திரத்தின் வலிமை!
ப் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிரிகளை விரட்டியடிக்கும் திறனும், செயல்முறையில் வலிமையும் கொண்டவர் களாக இருப்பார்கள்.
ப் கலைத்துறையில் புகழ் பெறுபவர்களாக வும், நுட்பமான அழகியல் உணர்வுடனும் இருப்பர்.
சித்திரை நட்சத்திரத்தின் பலவீனம்
ப் முன்கோபம் அதிகமிருக்கும்.
ப் தீய நண்பர்களால், பொருள் இழப்பு ஏற்படும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/star1-2025-11-07-17-15-11.jpg)
கூட்டு கிரக பலன்
(சித்திரை நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது)
ப் சித்திரை நட்சத்திரத்தில், சூரியனிருக்க, மூதாதையர் சொத்து நஷ்டமாகும்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, ஐந்து வயது வரை பாலாரிஷ்டம்..
ப் புதன் அமர்ந்திருக்க, பூர்வ ஜென்ம புண்ணியத்தால் காப்பாற்றப் படுவான்.
ப் சுக்ரன் அமர்ந்திருக்க, கற்ற கல்வி பயன் தராது.
ப் சனி அமர்ந்திருக்க, வாக்கு பலிதம் உண்டாகும்.
ப் குரு அமர்ந்திருக்க, செல்வம், செல்வாக்கு உடையவன்.
ப் ராகு அமர்ந்திருக்க, அறுவை சிகிச்சை யால் ஆபத்து.
ப் கேது அமர்ந்திருக்க, தீராத நோயால் அவதிப்படுவார்.
சித்திரை நட்சத்திர பாத பலன்
ப் சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. தீய செயல்களில் ஈடுபடுவான். கண் நோயால் பாதிக்கப்படுவான்.
ப் சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், கன்னி நவாம்சம். புதன் பகவானால் ஆளப்படுகிறது. வாக்கு வல்லமை உடையவன். துறவியாவான்.
ப் சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம்.சுக்ர பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர்கள், அளவில்லாத செல்வம், செல்வாக்கு உடையவர்.
ப் சித்திரை நட்சத் திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், பகைவர்களுக்கு எமனாக மாறுவான். சுய சிந்தனை அதிகம் உடையவன்.
சித்திரை நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
புதிய ஆபரணம் அணிதல், வித்தை ஆரம்பிக்க நல்லது.
சித்திரை நட்சத்திரநாளில் செய்யக்கூடாதவை
ப் சனிக்கிழமை, திரயோதசி திதியும், சித்திரை நட்சத்திர நாளில் கூடினால், சுப காரியங்கள் செய்யக்கூடாது.
சித்திரை நட்சத்திரத்தின் பரிகாரம்
ப் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், வாழ்க்கை வளமாகும்.
ப் திருவைகாவூர் வில்வவனநாதர் கோவிலில், அன்னதானம் செய்தால், தோஷம் விலகும்.
(சித்திரை நட்சத்திரத்தின் பலன் நிறைவு பெற்றது)
செல்: 63819 58636
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us