Advertisment

நலம் தரும் நட்சத்திரம் 27

star
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும்                                 
மிடுக்கமாம் காலந்தன்னில் ஈன்ற தாய் தந்தை பேணும்                                   
துடியிடை மாதரோடு சுகங்களும் சுகிக்க வல்லான்                                                          
திடமதாய் பேச வல்லான் சித்திரை நாளினானே.''
-சுவடி 1500 
பொருள்: சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர், வேகமாக நடக்கக்  கூடியவர். கஷ்ட காலத்திலும், தாய்- தந்தையை காப்பாற்றுவான்.
Advertisment
நிலை கண்ணாடியில் பிரதிப-க்கும் காட்சிபோல், நாம் காணும் உலக நிகழ்வுகள் எல்லாம், நம் மனதின் பிரதிப-ப்பாகவே அமைகின்றன. எண்ணங்களே வாழ்க்கையை தீர்மாணிக்கின்றன. மனோகாரகனாகிய ச
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும்                                 
மிடுக்கமாம் காலந்தன்னில் ஈன்ற தாய் தந்தை பேணும்                                   
துடியிடை மாதரோடு சுகங்களும் சுகிக்க வல்லான்                                                          
திடமதாய் பேச வல்லான் சித்திரை நாளினானே.''
-சுவடி 1500 
பொருள்: சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர், வேகமாக நடக்கக்  கூடியவர். கஷ்ட காலத்திலும், தாய்- தந்தையை காப்பாற்றுவான்.
Advertisment
நிலை கண்ணாடியில் பிரதிப-க்கும் காட்சிபோல், நாம் காணும் உலக நிகழ்வுகள் எல்லாம், நம் மனதின் பிரதிப-ப்பாகவே அமைகின்றன. எண்ணங்களே வாழ்க்கையை தீர்மாணிக்கின்றன. மனோகாரகனாகிய சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களே, எண்ணங்களாக உருவெடுக்கின்றன. நட்சத்திரங்களின் தன்மை அறிந்தால், நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்ளலாம்.
Advertisment
14. சித்திரை நட்சத்திர வடிவம்

star1

பொதுவான குணம்: சிறந்த தெய்வ பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மிக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முன்கோபம் கொண்டவர்களாக இருப்பர்கள். பிறருக்கு உதவும் தாராள மனம் படைத்தவர்கள். மற்றவர்களிடம் பணிபுரிவதைவிட சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். எந்த சோதனை வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறமாட்டார்கள். 
சித்திரை நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: சித்திரை நட்சத்திரத் தில் பிறந்த ஆண்கள், எந்த காரியத்தையும் காலம் தாமதிக்காமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். கலைத் துறைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் முதன்மையானவர்.                                                                                                     
ப் குடும்பம்: மனைவியின்மீது பாசமும், மனைவியின் பேச்சுக்கு மரியாதை அளிப்பவராகவும் இருப்பார்கள். குடும்ப கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்                                                      
ப் கல்வி: சிறந்த கல்வியறி வைப் பெற்றிருப்பார்கள். படித்த படிப்புக்கும் செய்கின்ற வேலைக் கும் சம்பந்தம் இருக்காது. 
ப் தொழில்: எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள். பலரை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகத்திறன் உடையவர்களாக இருப்பார்கள்.
ப் திருமணப் பொருத்தம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், புரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம். 
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையி-ருக்கும். ஆனால்  சனி தசையில், தோல் வியாதியும், சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம்.
சித்திரை நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: சித்திரை நட்சத் திரத்தில் பிறந்த பெண் தைரியம் மற்றும் ஆற்றல்மிக்கவர்.
ப் குடும்பம்: குடும்ப உறவு களில் சவால்கள் ஏற்படலாம்.
ப் திருமணப் பொருத்தம்: 
சித்திரை நட்சத்திரம் (கன்னி ராசி): மிருகசிரீடம், அவிட்டம், பரணி, உத்திரம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
சித்திரை நட்சத்திரம் (துலா ராசி): மிருகசிரீடம், அவிட்டம், பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும், சனி தசையில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். 
(சித்திரை நட்சத்திர பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636

bala011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe