"வன்புறுதா மதன் கல்விமான் அர்ப பசியன் மனு வணங்க வாழ்வான் 
இன்பமுறும் குறிப்புடையன் சூரன் அழகியன் கடினன் இனிய புத்திர 
பின் வயதில் தனமுடையான் சிலுகன்மார் பகலன் பின் புறங்கால் நல்லோன் 
அன்புடன் நீர் ஆடல் குரு பக்தியுளன் தருமன் ஹஸ்தத்தினானே.''

Advertisment

-ஜாதக அலங்காரம்                                               

பொருள்: கடின மனமுடையவன், மக்கள் வணங்கும் தலைவனாக வாழ்வான்.

பெரும் படையும், வெண் கொற்றக் குடையும், புலவருக்கு புரவலனாக, அரசன் தரும் கொடையுமே, ஒரு மன்னரின் லட்சணங்களாகக் கருதப்படும். ஒவ்வொறு ஜாதகத்திலும் ஷத்ர பாவம் (குடை) எனும் பாதுகாப்பைத் தரும் பாவங்கள் உள்ளன. பிறக்கும் போதே, நமக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ள குடை ஸ்தானங்களே 3, 7, 11-ஆம் பாவங்கள். மூன்றாம் பாவம் வெற்றியையும், ஏழாம் பாவம் கூட்டாளியையும், பதினோராம் பாவம் சமுதாயத்தையும் குறிக்கும். இந்த பாவங்கள் அமையும் நட்சத்திரங்களில் குறை ஏற்படும்போது, கோட்டையையும், கவசத்தையும் இழந்து, சிறைப்படும் மன்னர்போல், ஜாதகர், துன்பத்தால் சூழப்படுகிறார்.

Advertisment

 அஸ்தம்  


அஸ்த நட்சத்திரத்தின் சிறப்பு: வீரம், அறிவு, அழகு, கடினமான சுபாவம் கொண்டவர்கள்.

அஸ்த நட்சத்திரத்தின் வலிமை

ப் அஸ்த   நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வீக குணங்களையும் நல்லொழுக்கத் தையும் கொண்டவராக இருப்பார்கள். 

Advertisment

ப் சிறந்த புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும், பேச்சாற்றலை யும் வெளிபடுத்துவார்கள். 

ப் மன உறுதி  கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமானவர்களாகவும் இருப்பார்கள்.

அஸ்த நட்சத்திரத்தின் பலவீனம்

ப் தீயவர் நட்பால் தொல்லை உண்டாகும்.

கூட்டு கிரகப் பலன்
(அஸ்த நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது).

ப் அஸ்த நட்சத்திரத்தில் சூரியனிருக்க, பெண்ணாக இருந்தால், திருமணம் தாமதமாகும்.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க, அரசு ஆதரவு அதிகமுடையவர்.

ப் புதன் அமர்ந்திருக்க, ஊர் தலைவனாக இருப்பார்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, இரசாயன தொழிலில் வெற்றியுண்டு.

ப் சனி அமர்ந்திருக்க, அடிக்கடி செரிமான பாதிப்பு உண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, கணவனை கடவுள்போல் வணங்குவார்.

ப் ராகு அமர்ந்திருக்க, 55-ஆவது வயதில் பண தட்டுப்பாடு வரும்.

ப் கேது அமர்ந்திருக்க, தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்.

அஸ்த நட்சத்திர பாதப் பலன்

ப் அஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எந்தச் செயலையும் செய்துமுடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். 

ப் அஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், ரிஷப நவாம்சம்.  சுக்கிரனால் ஆளப்படுகிறது. மற்றவர்களை கவரும் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இரக்க சுபாவம் மிக்கவர்கள். அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள்.

ப் அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம். புதன் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனையும் செயலும் மற்றவர் களை வியப்புறச் செய்யும்படி இருக்க வேண்டுமென விரும்புவார்கள்.

ப் அஸ்த நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக நவாம்சம். சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், 

தாய்  சொல்லை தட்டாதவர். இரக்க சுபாவம் மிக்கவர்களாகக் காணப்படுவீர்கள்.

அஸ்த நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

ப் மாடு- வாங்க, கோவில் கட்ட ஏற்ற நாள்.

அஸ்த நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை

ப் சப்தமியும், அஸ்த நட்சத்திரமும் கூடும் நாளில் சுப காரியங்களை செய்யக் கூடாது.

அஸ்த நட்சத்திர பரிகாரம்

ப் அஸ்த நட்சத்திரத்தின் அதிபதி விநாயகப் பெருமான் ஆவார். எனவே, விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

ப் நாகப்பட்டினம் அருகேயுள்ள கோமல் திருபாகூடலேஸ்வரர் ஆலயத்தில் பரிகார பூஜை செய்தால், அஸ்த நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

(அஸ்த நட்சத்திர பலன் நிறைவுற்றது)

செல்: 63819 58636