"தானங்கள் விரும்பி செய்யுந் தந்தை தாய் மிகவும் பேணும்
மானமது ஞானமும் விரும்பி கற்கு நற்றமிழ் விரும்பிக் கேட்கு
மானமதுடையோனாகும் வருனிதி பொருந்தி வாழும்
போசனச் செல்வமுண்டாம் புகழ் பெரு அஸ்தம்யானே.''
-விரும கண்டிகை
பொருள்: அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர், செல்வ செழிப்புடன் வித்தையில் சிறந்து விளங்குவார். பெற்றோரை பேணி பாதுகாப்பார்.
வாழ்க்கை பயணத்தில் விதியே வீதியாகிறது. உயிருடன் சேர்ந்த உடலே, வாகனம். மனமே, வாகன ஓட்டி. பாதை உள்ளவரை பயணம் தொடரும். விதியையும் சுயமுயற்சியையும் இணைத்துப் பார்க்கும் அந்த வழிகாட்டியே ஜோதிடம். ஆசையெனும் இச்சா சக்தியும் (சந்திரன்) அறிவொளியாகிய ஞானசக்தியும் (சூரியன்), ஆற்றலெனும் கிரியா சக்தியும் (லக்னம்) இணைந்ததே, திரிபுரமாகிய வாழ்க்கை. இதுவே, திரி சூலத்தின் தத்துவமென்பது.
அஸ்தம்
பொதுவான குணம்
அஸ்தம் என்றால் "தாங்கிப் பிடிப்பது' என்று பொருள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசியாதிபதி செவ்வாய். இது உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை "ஆள்வார்கள்' என்ற பழமொழிக்கு ஏற்ப, நல்ல வசதியான சுகமான வாழ்க்கை அமையும். பிறரை கவர்ந்திழுக்கும் அழகும், வீரமும் உடையவர்கள். தொழிலில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர் களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்.
அஸ்த நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர், அனைவரின் நலனிலும் அக்கறை கொள்பவராக இருப் பார்.
ப் குடும்பம்: குடும்பத்தை மிகவும் நேசிப்பவராக இருப்பார். பிடிவாதக் காரராக இருப்பதால், குடும்பத்தில் அமைதி குறையும்.
ப் கல்வி: அழகிற்கு முக்கியத்துவம் தருவார். கல்வியில் ஆர்வம் குறையும்.
ப் தொழில்: நன்மையும்- தீமையும் மாறி மாறி வரும். 33 வயதிற்கு பிறகுதான், வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை அடைவார். வியாபாரம், விளையாட்டு, இசை, கலை, விளம்பரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்கள் வெற்றி தரும்..
ப் திருமணப் பொருத்தம்:
அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்தி ராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், சுவாதி, பூசம், அனுஷம், உத்திரட் டாதி நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ப் திருமண வாழ்க்கை: சுக்கிரன் சாதகமாக இருந்தால், 26 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வார்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலை யிலிருக்கும். ஆனால் குரு தசை நடக்கும் காலத்தில், நீரிழிவு நோய், மலேரியா போன்ற நோய்களை எதிர்கொள்வார்கள்.
அஸ்த நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், யாராவது தவறு செய்து விட்டு, மன்னிப்பு கேட்டால் உடனே அவர்களை மன்னித்துவிடும் இரக்க குணமுடையவர்.
ப் குடும்பம்: செவ்வாய் சாதகமாக இருந்தால் , 23 வயதிற்குபிறகு திருமணம் செய்துகொள்வார். சுக்கிரன், செவ்வாய் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். தன் கணவரின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக இருப்பார்.
ப் திருமணப் பொருத்தம்: பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, திருவாதிரை, நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் குரு தசையில், மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.
செல்: 63819 58636