Advertisment

நலம் தரும் நட்சத்திரம் 25

star
"மெத்த நல் நடையனாகும் வெகுனிய துடையனாகும்                                                   
சித்த மதுடையனாகும் சிறு குடியனாகும் உத்தம                                                            
குணத்தானாகும் உறுதியை இனிதாய் உன்னும் அத்தன் நல்                                              
அறமே செய்யும் ஹஸ்த நாள் தோன்றினானே.''
-மரண கண்டிகை                                              
பொருள்: அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் நடை அழகர். மனதில் உறுதி யானவர். ஒரு கூட்டத்திற்கு தலைவனாக விளங்குவார்.
Advertisment
வாடை, கொண்டல், கோடை, தென்றல் காற்றுகள் வெவ்வேறு திசைகளி-ருந்து வீசினாலும், கடலோடிகள் கலங்குவதில்லை. காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற
"மெத்த நல் நடையனாகும் வெகுனிய துடையனாகும்                                                   
சித்த மதுடையனாகும் சிறு குடியனாகும் உத்தம                                                            
குணத்தானாகும் உறுதியை இனிதாய் உன்னும் அத்தன் நல்                                              
அறமே செய்யும் ஹஸ்த நாள் தோன்றினானே.''
-மரண கண்டிகை                                              
பொருள்: அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் நடை அழகர். மனதில் உறுதி யானவர். ஒரு கூட்டத்திற்கு தலைவனாக விளங்குவார்.
Advertisment
வாடை, கொண்டல், கோடை, தென்றல் காற்றுகள் வெவ்வேறு திசைகளி-ருந்து வீசினாலும், கடலோடிகள் கலங்குவதில்லை. காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது காற்றடிக்கும் திசையறிந்து கப்ப-ல் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வதுபோல, தசாபுக்தி, கோட்சார அனுகூலங்களைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையில் வெற்றிபெறலாம். விதியில் (லக்னம்) சரியாக அமையாமல் போனால், மதியை (சந்திரன்) கொண்டு வெற்றி பெறலாம்.
Advertisment
அஸ்தம் ராசி வடிவம்  
பொதுவான குணம்  அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர், அறிவாளி, கண்ணிய மான நடத்தை கொண்ட வர், கடின உழைப் பாளி மற்றும் தன்னடக்கமுடையவர்கள்.                                                                    

star1

அஸ்த- நட்சத்திரம் (ஆண்)  
அஸ்தம் அதிர்ஷ்ட நிறம்                                              
குணம்:  மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் காணப்படுவார்கள். அமைதியான மற்றும் அடக்கமான இயல்புடையவர்களாக இருப்பார்கள். இயற்கையான சூழல்களை ரசிப்பதில் ஆர்வம் காட்டு வார்.
குடும்பம்: அஸ்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள், மனைவி சொல்லே மந்திரம் என்ற விதிப்படி வாழ்வார்கள். எந்த முடிவை எடுக்கவேண்டுமானாலும் துணையிடம் கலந்தாலோசித்த பின்னர் தான் செய்வார்கள்.
கல்வி: ராகு தசை காலங்களில் குடும்பத்தில் பிரச்சினையால், கல்வியை தொடர முடியாத நிலை வருவதால், எதிர்நீச்சல் போடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சினைகள் உண்டாகும். 
தொழில்: சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதி-ருந்து வசதி வாய்ப்புகள் பெருகும். இவர்கள் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர், எழுத்துத்துறையில் சிறந்து விலங்குவார். 27 முதல் 33 வயதிற்குள் நல்ல வளர்ச்சியும் செல்வாக்கும் பெறுவார்.
திருமணப் பொருத்தம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூராடம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை நன்றாக பொருந்தும். 
ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையி-ருக்கும். ஆனால், ராகு தசை நடக்கும் காலத்தில், நீர் சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சினைகள், உட-ல் கெட்ட நீர் சேரக்கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
அஸ்த நட்சத்திரம் (பெண்)
குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், சுறுசுறுப்பும், பிறரை மகிழ்விக்கும் வகையிலும், நகைச்சுவையாகவும் பேசக் கூடியவர்கள். 
குடும்பம்: இந்த நட்சத்திரப் பெண்கள், தங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக இருக்கும், புரிந்துகொள்ளும் கணவரையே பெறுவார்கள். பொதுவாக, இவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
திருமணப் பொருத்தம்: ரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோனம், சதயம், அவிட்டம்- 3, 4 பாதம், சித்திரை, நீங்கலாக மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் ராகு தசை- சந்திர புக்தியில் மாதவிடாய் தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப் படுவார்.

star2

நட்சத்திரப் பலன்கள்
அஸ்த நட்சத்திரக் காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.
(அஸ்த நட்சத்திர பலன்கள் வரும் இதழிலும் தொடரும்)
செல்: 63819 58636

bala111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe