"அழகிய நடையனாகும் அரிவையவர் தனையர் பேணும்
பழியது பார்த்து வாழும் பாவங்கள் செய்ய மாட்டான்
உழவரை சேர்த்து வாழும் உத்தமர் தம்மை காக்கும்
மொழி பெறு மேனியாகும் உத்தர நாளினானே.''
-மரண கண்டிகை
பொருள்: உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர், விவசாயத்தில் ஆர்வமுடையவர். எல்லோரையும் பாதுகாக்கும் குணம் உடையவன்.
Advertisment
அட்சய பாத்திரம்: அள்ள அள்ள குறையாமல் அமுதத்தைக் கொடுக்கும் தன்மையுடையது. கற
"அழகிய நடையனாகும் அரிவையவர் தனையர் பேணும்
பழியது பார்த்து வாழும் பாவங்கள் செய்ய மாட்டான்
உழவரை சேர்த்து வாழும் உத்தமர் தம்மை காக்கும்
மொழி பெறு மேனியாகும் உத்தர நாளினானே.''
-மரண கண்டிகை
பொருள்: உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர், விவசாயத்தில் ஆர்வமுடையவர். எல்லோரையும் பாதுகாக்கும் குணம் உடையவன்.
Advertisment
அட்சய பாத்திரம்: அள்ள அள்ள குறையாமல் அமுதத்தைக் கொடுக்கும் தன்மையுடையது. கற்பக விருட்சம்: இந்த மரத்தடியில் நின்றுகொண்டு எதை நினைத்தாலும் அது உடனே கிடைக்கும். காமதேனு: இந்த தெய்வீக பசு, நாம் விரும்பி கேட்கின்ற பொருட்களை தருகின்ற சக்தி படைத்தது. இந்த மூன்றும், நம் மனதைக் குறிக்கும் அடையாள சின்னங்கள். நம் மனம், நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும் சக்தி படைத்தது. அவரவர் ஜனன ஜாதகத்தில், சந்திரன் அமையும் நட்சத்திரமே, அவரின் ஆசையை நிறைவேற்றும் சக்தி கொண்டது.
Advertisment
ஜென்ம நட்சத்திரத்தின் தன்மையறிந்து செயலாற்றினால், வெற்றியே வாழ்க்கையின் தாரக மந்திரமாக அமையும்.
உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு
உத்திர நட்சத்திரநாளில், சூரியனைச் சுற்றி வட்டம் தோன்றினால் நல்ல மழை பொழியும்.
உத்திர நட்சத்திரத்தின் வலிமை
ப் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கம்பீரமான நடையும், சிறந்த அறிவாற்றலையும் கொண்டிருப்பார்.
ப் நல்ல மனவலிமையும் ஆன்ம பலமும் கொண்டவர்களாக இருப்பார்.
ப் எளிதில் எவரையும், கவரும் கம்பீரமான நடையும் உடலமைப்பும் உண்டு.
ப் எப்போதும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பார். இந்த குணத்தால் எப்போதும் எதிலும் வெற்றி காண்பார்.
உத்திர நட்சத்திரத்தின் பலவீனம்
ப் முன்கோபத்தால், நல்ல நண்பர் களை இழக்கக்கூடும்.
கூட்டு கிரக பலன்
(உத்திர நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
ப் உத்திர நட்சத்திரத்தில், சூரியனிருக்க, பூரட்டாதி லக்னமாக அமைந்தால், சகோதர தோஷம் உண்டாகும்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, நாடோடியாக வாழ்வார்.
ப் புதன் அமர்ந்திருக்க, கணிதத்தில் ஆர்வம் அதிகமுடையவர்.
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, பிறருக்கு உதவும் குணம் உண்டு.
ப் சனி அமர்ந்திருக்க, சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
ப் குரு அமர்ந்திருக்க, சூதில் வெற்றி பெறுவார்.
ப் ராகு அமர்ந்தி ருக்க, விபத்தினால், பாதிக்கப்படுவார்.
ப் கேது அமர்ந்திருக்க, ஆண் வாரிசு இல்லாமல் போகும்.
உத்திர நட்சத்திர பாத பலன்
ப் உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதம், தனுசு நவாம்சம் குருவால் ஆளப்படுகிறது. கல்வியில் சிறந்தவர்.
ப் உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதம் மகர நவாம்சம் சனி பகவானால் ஆளப்படுகிறது. அரசராகும் தகுதி யுடையவர்.
ப் உத்திர நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் கும்ப நவாம்சம் சனி பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவார்.
ப் உத்திர நட்சத்திரத்தின் நான்காவது பாதம் மீன நவாம்சம். குருவால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், சுயநலம் மிக்கவர்.
உத்திர நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
திருமணம், புதிய ஆபரணம் அணிதல் போன்றவை செய்யலாம்.
உத்திர- நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை
ப் புரட்டாசி மாதமும், உத்திர நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்கள் செய்யக்கூடாது.
பரிகாரம்
ப்ஆடுதுறையில் அருள்புரியும் ஸ்ரீ ஆபத்சகாயரை வழிபட்டால், வாழ்க்கை வளமாகும்.
செல்: 63819 58636