Advertisment

நலம் தரும் நட்சத்திரம் 23

star
"கையாக உரையான் முன் கை வலியன் வித்தை உள அழகரங்கன் வாயுமுள்ளான் 
மையார் கண்ணார் நேயன் முன் கோபி மறு முக மார்பு அதனில் உள்ளான் 
பொய்ய்யாத ஆரன் நீர் ஆடுவான் சிறு பசியன் பொறுத்தும் பத்தி 
ஒய்யார நடை தருமன்  ஞானவான் ஆகும் உத்திரத்தினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர், இதமாக பேசுவார். முன்கோபி. உண்மையான வீரன்.
Advertisment
குயவன், சக்கரத்தில் வைக்கப்பட்ட மண்ணை, தான் விரும்பிய பாண்டமாய் வளைப்பதைப்போல், கால சக்கரத்தின் துணைகொண்டு, கடவுள் மனிதனைப் படைக்கிறார். வெவ்வேறு மண் பாண்டங்கள் வெவ்வேறு பயன்பாட்டைத் தருவதுபோல், ஜனன காலத்து நட்சத்
"கையாக உரையான் முன் கை வலியன் வித்தை உள அழகரங்கன் வாயுமுள்ளான் 
மையார் கண்ணார் நேயன் முன் கோபி மறு முக மார்பு அதனில் உள்ளான் 
பொய்ய்யாத ஆரன் நீர் ஆடுவான் சிறு பசியன் பொறுத்தும் பத்தி 
ஒய்யார நடை தருமன்  ஞானவான் ஆகும் உத்திரத்தினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர், இதமாக பேசுவார். முன்கோபி. உண்மையான வீரன்.
Advertisment
குயவன், சக்கரத்தில் வைக்கப்பட்ட மண்ணை, தான் விரும்பிய பாண்டமாய் வளைப்பதைப்போல், கால சக்கரத்தின் துணைகொண்டு, கடவுள் மனிதனைப் படைக்கிறார். வெவ்வேறு மண் பாண்டங்கள் வெவ்வேறு பயன்பாட்டைத் தருவதுபோல், ஜனன காலத்து நட்சத்திரத்திற்கு ஏற்ப, மனிதர்கள் வேறுபட்ட குணாதிசயங்களைப் பெறுகிறார்கள். எல்லா நட்சத்திரங்களும், சில நேர்மறை குணங்களையும், சில எதிர்மறை குணங்களையும் கொண்டவையே.
Advertisment
12- உத்திரம்
பொதுவான குணம்: மனவலிமை, உண்மை பேசுதல், அறிவுக்கூர்மை, கம்பீரமான நடத்தை, எதிர்கால திட்டமிடல், சுறுசுறுப்பு, சமயோசித புத்தி ஆகியவை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது வான குணங்களாகும். 
அனுபவ அறிவு அதிகம் இருக்கும். இவர்களின் சொந்த காரியத்தில் அதிக ஈடுபாடும், பிறர் நலத்தை பேணி காப்பவர்களாக இருப் பார்கள். சிக்கனத்தை கையாளக் கூடியவர்களாக, கண்ணியமும், சுய மரியாதையும் அதிகம் உடையவர் களாக இருப்பார்கள்.
உத்திர நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: உத்திர நட்சத்திரத்தில் பிறந்த வர்களின் பேச்சு, குணம், மனவலிமை, கல்வியில் சிறந்து விளங்குதல் என தனித்தன்மையுடன் இருப்பார்கள். இவர் களுடைய கம்பீரமும், உடலமைப்பும், மற்றவர்களை கவரும்வகையில் இருக்கும். பேச்சும், பழக்கமும் மற்றவர்கள் பழக ஆசைப்படும் வகையில் இருக்கும். 
ப் கல்வி: கல்வி அறிவும், அனுபவ அறிவும் அதிகமிருக்கும்.
ப் தொழில்: புத்திசாலித்தனம் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்வர் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்கவேண்டிய நிலைமையிருந் தா லும், முப்பது வயதிலிருந்து செல்வாக்கு பெருகும்.
ப் திருமணப் பொருத்தம்: பரணி, பூரம், பூராடம், ரோகினி, அஸ்தம், திருவோணம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். 
ப் திருமண வாழ்க்கை: தன் குடும்பத்தின்மீது அதீத அக்கறையும், பாசமும் கொண்டிருப்பார்கள்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக் கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனாலும், தைராய்டு குறைபாடு, மூல நோய்கள், தசைப் பிடிப்புகள் போன்றவை தொல்லைத் தரும். 

star1

பூர நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவராக இருப்பார். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவார். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் காரியத்தில் கண்ணாக இருப்பார். பூர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பலருக்கு அன்பான கணவன் கிடைப்பார்கள். 

star2

ப் திருமணப் பொருத்தம்: கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி, சித்திரை, அவிட்டம், நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் செவ்வாய் தசையில், ஒவ்வாமை தொடர்பான நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
(உத்திர நட்சத்திர பலன்கள் தொடரும்) 
செல்: 63819 58636
bala270925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe