"இதமான வதனம் உள்ளான் கல்விமான் சிவந்திருக்கும் இருகண்ணானன்
நிதியதனை வருத்தமதாய்த் தேடுவான் வரும் கருமம் நினைவில் காண்பான்
விதமான வியாபாரி கடின மொழி பல நினைவை விரும்பும் நெஞ்சன்
பொது மாதர் தமை வெல்வான் நகை தந்தாழகன் பூரத்தினானே.''
-சாதக அலங்காரம்
பொருள்: பூர நட்சத்திரத்தில் பிறந்தவர், அன்புடன் பேசுவார்.கல்வியில் பிரியமுடையவர். எதிர்காலம் அறிந்தவ
"இதமான வதனம் உள்ளான் கல்விமான் சிவந்திருக்கும் இருகண்ணானன்
நிதியதனை வருத்தமதாய்த் தேடுவான் வரும் கருமம் நினைவில் காண்பான்
விதமான வியாபாரி கடின மொழி பல நினைவை விரும்பும் நெஞ்சன்
பொது மாதர் தமை வெல்வான் நகை தந்தாழகன் பூரத்தினானே.''
-சாதக அலங்காரம்
பொருள்: பூர நட்சத்திரத்தில் பிறந்தவர், அன்புடன் பேசுவார்.கல்வியில் பிரியமுடையவர். எதிர்காலம் அறிந்தவர். மன்மதக் கலையில் வெற்றியுடையவன். தேக்கு மரம் வீழ்ந்த பின்னும் வாழ்கிறது பல நூறு ஆண்டுகள். வீட்டின் உத்திரமாகவும், கதவாகவும், தூண்களாகவும், பயன் பாட்டிலிருக்கிறது. விறகுக்கும் உதவாத ஒதிய மரமும், இந்த மண்ணில்தான் உதிக்கிறது. சிலர் பூத உடல் மறைந்தாலும், புகழுடலுடன் வாழ்கிறார்கள். பலரும், வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் பயனற்று போகிறார்கள். ஜனன காலத்து நட்சத்திர அதிபதி, லக்னம் அல்லது ராசிக்கு பகை, நீசம், அஸ்தங்கதம் பெற்றால், வாழ்க்கை வீணாகிறது. நட்சத்திரம் அமையும் ராசிக்கும், நட்சத்திர அதிபதி அமர்ந்த ராசிக்குமுள்ள தொடர்பே வாழ்க்கைப் பாதையைக் காட்டும்.
பூர நட்சத்திரத்தின் சிறப்பு
- வெள்ளிக்கிழமையும், பூர நட்சத்திரமும், கூடும் நேரத்தில் பிறந்தவர்கள் புகழ் பெறுவார்.
பூர நட்சத்திரத்தின் வலிமை
- பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கலை மற்றும் ஆபரணங்கள் மீது பிரியமுடையவர்.
- மற்றவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு உதவிசெய்யும் குணமுண்டு.
- கம்பீரமாகவும், சுகபோகத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்.
- ஏதாவது ஒரு துறையில் நிபுணராக விளங்குவார்.
- உற்றார்- உறவினர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பார்கள்.
பூர நட்சத்திரத்தின் பலவீனம்
- தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற கற்பனையாலும், கர்வத்தாலும் பகை வளர்ப்பார்.
- கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்கூட்டு கிரக பலன்(பூர நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.)
- பூர நட்சத்திரத்தில், சூரியனிருக்க, விவசாயத்தில் ஆர்வம் உண்டாகும்..
- செவ்வாய் அமர்ந்திருக்க, குறைந்த வருமானமே கிடைக்கும்.
- புதன் அமர்ந்திருக்க, அறிவாற்றல் அதிகமுடையவர்.
- சுக்கிரன் அமர்ந்திருக்க, வெகு ஜன ஆதரவு கிடைக்கும். தலைவனாகும் தகுதியுண்டு.
- சனி அமர்ந்திருக்க, பிடிவாத குணத் தால் தொல்லை உண்டாகும்.
- குரு அமர்ந்திருக்க, வியாபாரத்தில் வெற்றிபெறுவார்.
- ராகு அமர்ந்திருக்க, கலகம் செய்பவர்.
- கேது அமர்ந்திருக்க, சட்ட விரோத செயலில் ஈடுபடுவார்.
பூர நட்சத்திர பாத பலன்
- பூர நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. பகை வெல்லுவான்.
- பூர நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், கன்னி நவாம்சம். புதன் பகவானால் ஆளப்படுகிறது. மன சந்தோஷமுடையவன். பிறருக்கு உதவி செய்பவன்.
- பூர நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம். சுக்கிரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் அதிக செல்வம், செல்வாக்கு உடையவர்.
- பூர நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், எல்லோரையும் பகைப்பவன்.
பூர நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
- ஆரம்ப கல்வி, ஆபரணம் வாங்குதல், புதிய நண்பர்களை சந்திப்பது போன்றவை செய்யலாம்.
பூர நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை
- பங்குனி மாதமும், பூர நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்கள் செய்யக்கூடாது.
பரிகாரம்
- வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை, திருவரங்குளம், ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் உடனுறை பெரியநாயகியை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.
(பூர நட்சத்திரத்தின் பலன்நிறைவு பெற்றது)
செல்: 63819 58636