"வருந்திய கருமம் செய்யும் வாணிபம் பலவும் செய்யும் 
விரும்பிய கல்வி கற்றும் வெட்டெனப் பேச வல்லான் 
கரும்பிசைக் குழலினாரின் சூழ்ச்சியை வெல்ல வல்லான் 
பொருந்தியே உரைக்க வல்லான் பூர நாள் தோன்றினானே.''
-மரண கண்டிகை 
பொருள்: பூர நட்சத்திரத்தில் பிறந்தவர். எந்த கடினமான வேலையையும் செய்யக்கூடியவர். கல்வியை விரும்புவார். சூழ்ச்சியை வெல்லுவார்.
Advertisment
காட்டுத்தீயில் ஒரு மரத்தின் கிளைகளும், இலையும் கருகினாலும், ஒரு மழை பெய்தால், அந்த மரத்தின் அழியாத வேரினால், மரம் மறுபடி துளிர்க்கும். முன்ஜென்ம கர்மவினையை பரிகாரங்களால் வேரறுத்தால் தான் வெற்றி கிட்டும். அவித்த நெல் முளைப்பதில்லை. ஒரு ஜாதகரின் கர்ம நட்சத்திரத்தை ஆராய்ந்து செய்யும் பரிகாரம் மட்டுமே பலனளிக்கும்.

11- பூரம் பொதுவான குணம்

 பூர  நட்சத்திரம் இனப்பெருக்க உறுப்புகளைக் குறிக்கும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசியாதிபதி சூரியன். பூர  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,  கவர்ச்சியான தோற்றத்தையும், கலை நயத்தையும் கொண்டிருப்பார்கள். நல்ல ஆடைகள், அணிகலன்கள் அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள். கலை மற்றும் கலை சார்ந்த செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். 22, 27, 30, 32, 37, மற்றும் 44 வயதுகள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களாகும். 

star1

 பூர நட்சத்திரம் (ஆண்)   

Advertisment
ப் குணம்: பூர நட்சத்திரத்தில் பிறந்தவர், பிறர், மனம் புண்படாதபடி நடந்துகொள்வார்கள் என்றாலும் கோபம் வந்துவிட்டால் கட்டுப்படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும் 
ப் குடும்பம்: குடும்பத்தை மிகவும் நேசிப்பவராக இருப்பார். ஆனாலும் மன குழப்பத்தால், குடும்பத்தில் அமைதி குறையும். 
ப் கல்வி: கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்.
ப் தொழில்: சுற்றுலா துறை, பொதுமக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணிபுரியும் ஆற்றலுடையவர். 
Advertisment
ப் திருமணப் பொருத்தம்: அஸ்வினி, மகம், மூலம், கார்த் திகை, உத்திரம், உத்திராடம், ரோகினி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை,  சதயம், ஸ்வாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம். 
ப் திருமண வாழ்க்கை: சுக்கிரன் சாதகமாக இருந்தால், 26 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வார்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட நோய் களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள். 

star2

பூர நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத் தில் பிறந்த பெண்கள், மனம் அலை பாய்ந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவுக்கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். 
ப் குடும்பம்: அன்பினால் வெற்றிபெறக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பேச்சாற்றலால் உற்றார்- உறவினர் களையும் வசப்படுத்தி வைத்திருப்பார்.
ப் திருமணப் பொருத்தம்: பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, ரோகிணி, நீங்கலாக மற்ற நட்சத்திரக்காரர்களை, திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சந்திர தசையில், ஹார்மோன் தொடர்பான நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
(பூர  நட்சத்திர பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636