"தந்தை தாய் மிகவும் பேணும் சார்பொடும் புவியும் சேரும்
சிந்தைதான் மிகவும் கற்கும் தேசம் போய் திரிய வல்லான்
வந்தனை உகத்து வாழும் மணமது முடிக்க வல்லான்
மந்திரம் பொய்கள் சொல்வான் மகத்திதான் தோன்றினனே''
-மரண கண்டிகை
பொருள்: பெற்றோரைப் பேணுவான். உயர் கல்வி உண்டு. வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புண்டு. உண்மையை மறைப்பான்.
சூரியனும், சந்திரனும் நமக்கு ஒளியை வாரி வழங்குவதில் ஒற்றுமையாக இருந்தாலும், உயிர்களிடையே, வேற்றுமையை உண்டாக்குகின்றன. அல்- மற்றும் தாமரை இரண்டுமே நீரில் வளரும் தாவரங்கள் என்றாலும், தாமரையின் இதழ்கள் மலர்வது சூரியனின் ஒளியைக் காணும் பொழுதினிலே. அல்- மலர்வது அமுதோனாகிய சந்திரனின் ஒள
"தந்தை தாய் மிகவும் பேணும் சார்பொடும் புவியும் சேரும்
சிந்தைதான் மிகவும் கற்கும் தேசம் போய் திரிய வல்லான்
வந்தனை உகத்து வாழும் மணமது முடிக்க வல்லான்
மந்திரம் பொய்கள் சொல்வான் மகத்திதான் தோன்றினனே''
-மரண கண்டிகை
பொருள்: பெற்றோரைப் பேணுவான். உயர் கல்வி உண்டு. வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புண்டு. உண்மையை மறைப்பான்.
சூரியனும், சந்திரனும் நமக்கு ஒளியை வாரி வழங்குவதில் ஒற்றுமையாக இருந்தாலும், உயிர்களிடையே, வேற்றுமையை உண்டாக்குகின்றன. அல்- மற்றும் தாமரை இரண்டுமே நீரில் வளரும் தாவரங்கள் என்றாலும், தாமரையின் இதழ்கள் மலர்வது சூரியனின் ஒளியைக் காணும் பொழுதினிலே. அல்- மலர்வது அமுதோனாகிய சந்திரனின் ஒளியில். அறிவையும், ஆற்றலையும் வழங்கும் ஆண் நட்சத்திரங்கள், சூரியனை சார்ந்தும், அன்பையும், அமைதியையும் தரும் பெண் நட்சத்திரங்கள், சந்திரனை பிரத-ப்பதாகவே அமைகின்றன.
10. மகம்
குறிப்பு: திங்கட்கிழமையும், மக நட்சத்திரமும் கூடியநாளில் பிறந்தவர், அரசரால் கொண்டாடப் படுவார். மாசி மாதத்தில், மகமும், பௌர்ணமியும், சேரும் நாள் புனிதமானது.
பொதுவான குணம்: தன்மானமும், பெருந் தன்மையும் கொண்டவர். அடிமைத் தொழில் செய்ய விரும்பாதவர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வமுடையவர். சமூக நோக்கத்துடன் செயல்படும் குணத்தைக் கொண்டிருப்பார். 26 வயதி-ருந்து 33 வயதுக்குள் வீடு, மனை, வாகனம், வாங்கக்கூடிய யோகமுண்டு. 46 வயதி-ருந்து 52 வயதுக்குள் புகழ்பெறுவார்.
மக நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: மக நட்சத்திரத்தில் பிறந்தவர், பெருந்தன்மை கொண்டவர். சமுதாய நோக்குடன் செயல்படுபவர். தோல்விகள் காரண மாகச் சோர்வுற்றாலும், தங்கள் சொந்த முயற்சியிலேயே முன்னேறுவார்.
கல்வி: மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சமூக சேவை சார்ந்த கல்வி மற்றும் இசையில் சிறந்து விளங்கலாம்.
தொழில்: எவ்வளவு கடினமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை செய்துமுடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப் படுவார்கள். கலை, கல்வி, அராய்ச்சி துறைகளிலும் ஈடுபடுவார்கள்.
திருமணப் பொருத்தம்: புனர்பூசம் (4-ஆம் பாதம்), பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி (4-ஆம் பாதம்), நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
திருமண வாழ்க்கை: திருமண வாழ்க்கையில் அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மனைவிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையி -ருக்கும். ஆனால் சூரிய தசை நடக்கும் காலத்தில், சிறுநீரக பிரச்சினையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சினை போன்றவற்றை எதிர்கொள்வார்கள்.
மக நட்சத்திரம் (பெண்)
குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பொன்னும், பொருளும் நிறைந்த வசதிகளை விரும்புவாள். ஆனாலும், தன் சுய முயற்சியால் பொருளீட்டுவாள். மக நட்சத்திரத்தில் பிறந்த பெண், தன் வீட்டு மற்றும் தொழில் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் உடையவள். மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், இருபத்தி ஐந்து வயதுவரை கல்விமீது கவனம் கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை வளமாக அமையும்.
குடும்பம்: மக நட்சத்திரத்தில் பிறந்த பெண், தன் வீட்டு பொறுப்புகளை திட்ட மிட்டு நிறைவேற்றும் திறனுடையவள்.
திருமணப் பொருத்தம்: மக நட்சத் திரத்து பெண்கள், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், பூராடம், அஸ்தம், அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட் டாதி நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சூரிய தசையில், உஷ்ண கோளாறுகளால் பாதிக்கப் படுவார்.
(மக நட்சத்திர பலன் தொடரும்)
செல்: 63819 58636