"செஞ்சொற் சாதுரியன் சத்துரு நேயன் மனதுக்கண் திரிவான் காட்டில் 
மஞ்சைப்போல் சிறு திண்டி தின்பன் அன்னை பிதாக்கினியன் பக்தி உள்ளான் 
வஞ்சமில்லாதெவர்க்கும்  எளிதாஞ் சொல்வான் சுகவான் வலிமையோருக்கு 
அஞ்சிடான் விழிபுருவம் உயர்ந்து ஒதுங்கி இருக்கும் ஆயில்யத்தானே.''
-சாதகாலங்காரம் 
 பொருள்: ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவன், பேசும் சாமர்த்தியம் உடையவன். எதிரிகளையும், தன் வயப்படுத்துவான். பெற்றோரைப் பேணுவான். நகைச்சுவையாக பேசி, பிறரை ஏளனம் செய்வான்.
Advertisment
தேவர்கள், பாற்கடலைக் கடைந்தபோது, விஷம் எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்தே உயிர்காக்கும் அமிர்தமும் வந்தது. எது  நோயை தந்ததோ, அதிலிருந்தே நோய்  தீர்க்கும் மருந்து உருவாகிறது.    எந்த கிரகத்தினால், சோதனை உண்டாகி றதோ, அந்த கிரகத்தின் வலிமையை  நமக்கு சாதகமாக்கிக் கொண்டால், பயன்பெறலாம். ஜனன காலத்து நட்சத்திரத்தின் குணம்  அறிந்து செயலாற்றினால்,  தோல்வியைத் தவிர்த்து வெற்றியடையலாம்.
ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பு
வியாழக்கிழமையும், ஆயில்ய நட்சத்திரமும், மீன லக்னமும் கூடும் நேரத்தில் பிறந்தவர்கள், கல்வித்துறையில் சாதனை படைப்பார்கள். 
ஆயில்ய நட்சத்திரத்தின் வலிமை
ப் இனிமையாகப் பேசி, மற்றவர் களுடைய மனதைக் கவர்ந்துவிடுவதே சிறப்பாகும்.
ப் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதால், எப்போதும் நட்பு வட்டம் சூழ்ந்திருக்கும். 
Advertisment
ப் உடல் வலிமையும் மனோதிடமும் கொண்டிருப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும்.
ப் சுய சிந்தையை மட்டுமே நம்புவதால், மன குழப்பமிருக்காது.
கூட்டு கிரக பலன்
(ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
ப் ஆயில்ய நட்சத்திரத்தில், சூரியனிருக்க, பிரயாணத்தில் அதிக  விருப்பமுள்ளவர். குடும்பத்தின்மீது பற்று குறைவு.
Advertisment
ப் செவ்வாய் அமர்ந்திருக்க, ஆயுதத்தால் ஆபத்து உண்டாகும். கண் நோயால் தொல்லை வரும்.
ப் புதன் அமர்ந்திருக்க, திட்டமிட்டு செயலாற்றுவார். நுரையீரல் தொடர்பான  பிரச்சினைகள் ஏற்படும்.
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, திருமண வாழ்க்கை  இனிக்காது. மன குழப்பம்  உண்டாகும்.
ப் சனி அமர்ந்திருக்க, தாயின் அன்பு கிடைக்காது.
ப் குரு அமர்ந்திருக்க, வாழ்க்கையில் அளவுக்குமேல் செல்வம், செல்வாக்கு பெறுவார். ஆனால், முதல் திருமணம் தோல்வியில் முடியும்.
ப் ராகு அமர்ந்திருக்க, ஆயுள் அதிகம். எந்த பிரச்சினையும்  சமாளிப்பார்.
ப் கேது அமர்ந்திருக்க, ஆணாக  இருந்தால், பாதுகாப்புத் துறையிலும், பெண்ணாக இருந்தால், மருத்துவ துறையிலும் பணியாற்றுவார்.
ஆயில்ய நட்சத்திர பாத பலன்
ப் ஆயில்ய நட்சத்திரத் தின் முதல்பாதம், தனுசு நவாம்சம் குருவால் ஆளப்படுகிறது. நல்ல தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். ஞானம் படைத்தவர்களாகவும், தன்னுடைய முன்னேற்றத்திற்காக யாரையும் எதிர்பார்க்கா மல் செயல்படுவார்கள்.
ப் ஆயில்ய நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், மகர நவாம்சம் சனிபகவானால் ஆளப்படுகிறது. சுயநலத்தின் உச்சமாக இருப்பார்கள். தங்கள் தேவைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். 
ப் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் கும்ப நவாம்சம். சனிபகவானால் ஆளப்படுகிறது. கௌரவம், மரியாதையுடன் இருப்பார்கள். உழைப்பால், தான் நினைத்த உச்சத்தை அடைவார்கள்.
ப் ஆயில்ய நட்சத்திரத்தின் நான்காவது பாதம் மீன நவாம்சம்  குருபகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், எப்போதும் சுத்தம் சுகாதாரத்தை எதிர் பார்ப்பார்கள். ஆடம்பரச் செலவு செய்யக் கூடியவர்கள். 
 ஆயில்ய நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
புதிய முதலீடு, புது வியாபாரம் போன்றவை செய்யலாம்.
ஆயில்ய நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை
செவ்வாய்க்கிழமையும், சப்தமி திதியும், ஆயில்ய நட்சத்திரமும் கூடும்நாளில் சுபகாரியங்களைத் தவிர்க்கவேண்டும்.
ஆயில்யம் பரிகாரம்
ப் புதன்கிழமையில், ஸ்ரீரங்கத் தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருடாழ்வாரையும் அரங்கநாதரையும் வழிபட்டால்,  வாழ்க்கையில்   நலம்  பெறலாம்.
(ஆயில்ய நட்சத்திரத்தின் பலன் நிறைவு பெற்றது).
செல்: 63819 58636