"கடுகவே நடக்கவல்லான் கன்னியர் மனத்தனாகும் 
திடமுடன் பேச வல்லான் தந்தை தாய் தம்மைப் பேணும் 
வடுகரைப் பேச வல்லான் வருந்தியே இருந்து வாழும் 
அடுத்தவர்க் கன் பனாகும் ஆயில்ய நாளினானே.''
-விரும கண்டிகை 
பொருள்: விரைந்து நடக்கக்கூடியவன். உறுதியாய் பேசுவான். துன்பங்களை பொருத்துக்கொள்ளும் குணமுண்டு.
Advertisment
நெல்லுக்கும் உமி உண்டு, நீருக்கும் நுரையுண்டு, வெண் நிலவுக்கும் கறையுண்டு. 
எதிலும் குறையென்றால் குணம் காணமுடியாது. பஞ்சபூதங்களின் அடிப்படையில் இயங்கும், நவகிரகங்களின் குண வேறுபாடுகளைக் குறையென்று கூறமுடியாது. 
ஒவ்வொருவர் வாழ்க்கையையும், ஒரு குறிப்பிட்ட கிரகமே தலைமையேற்று நடத்துகிறது. அந்த கிரகமே, அவரவர் நட்சத்திர அதிபதியாக அமையும்.
Advertisment

star1

ஆயில்யம்  
குறிப்பு: இந்த நட்சத்திரத்தில் வியாழக்கிழமை சேர்ந்தால், எடுத்த காரியம் வெற்றி.
பொதுவான குணம் 
புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமானதால், இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அறிவாற்றலும், புத்திசா-த்தனமும் அதிகம். இவர்கள் எதையும் கூர்ந்து கவனித்து கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் (ஆண்)
Advertisment
ப் குணம்:  புதன் பகவானின் ஆதிக்கத்தில்  இருப்பதால், இவர்கள் நல்ல பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் பேச்சால் மற்றவர் களைக் கவரும் திறமை இவர்களுக்கு உண்டு.
ப் குடும்பம்: பெற்றவர்கள்மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி, வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள்.
ப் கல்வி: ஜாதகத்தில் புதன் வலிமையுடன் இருந்தால், ஆரம்ப கல்வி சிறப்பாக அமையும்.
ப் தொழில்: பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். இளமையில் வறுமை வயப் பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துகளை வாங்கி குவிப்பார்கள். பெயர், புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். 
ப் திருமணப் பொருத்தம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங் களில் மணப்பெண் அமைந்தால் சிறப்பு.

star2

ப் திருமண வாழ்க்கை: மனைவி, பிள்ளைகள்மீது அதிக பாசம் கொண்டவர் கள். ஆகையால், அவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்ய, பல வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள் 
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால் கேது தசை, ராகு புக்தி நடக்கும் காலத் தில், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளும், மறதியால், கல்வியில் மந்த நிலையும் உண்டாகும்..
ஆயில்யம் நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தந்திரமாக செயல்பட்டு, எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள்.
ப் குடும்பம்: ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர தசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்துவிடும். சுக்கிரன் வலுவிழந்தால், திருமண வாழ்க்கை சரியாக அமையாது.
ப் திருமணப் பொருத்தம்: அஸ்வினி, மகம், மூலம், கேட்டை, ரேவதி, பூரம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும் உண்டாகும்.