"வாசியுடையவன் வழக்கை உரைதிடுவன் வங்குத்ர வசனமுள்ளன்
நேசமுடம் மாதாவை தந்தையை ரட்சித்திடுவன் நெடிய ரூபன்
தேக ஒழுக்கம் தனவான் கண்மூக்கழகன் பசி பொறான் திகழும் சாந்தம்
பூசி முடிக்க பிரியன் குணவான் பாக்கியமுளன் பூசத்தினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் வாகன சுகமுடையவன், வழக்காட வல்லான், தாய்- தந்தையரை அன்பாய்க் காப்பாற்றுவான்.
பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூலமாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கடலில் கரிப்பு சுவையுள்ள நீர் பொங்கி வழிந்தாலும், அதை உண்ணும் நீராக மாற்ற மேகங்கள் தேவைப்படுகின்றன.
அதுபோல், ஒரு ஜாதகத்தில் பல ராஜ யோக அமைப்புகளிருந்தாலும், அந்த யோகங்களை ஜாதகர் அனுபவிக்க, சரியான தசாபுக்தி அவசியம். அவரவரின் நட்சத்திரமே, தசா புக்திகளை அமைத்து
"வாசியுடையவன் வழக்கை உரைதிடுவன் வங்குத்ர வசனமுள்ளன்
நேசமுடம் மாதாவை தந்தையை ரட்சித்திடுவன் நெடிய ரூபன்
தேக ஒழுக்கம் தனவான் கண்மூக்கழகன் பசி பொறான் திகழும் சாந்தம்
பூசி முடிக்க பிரியன் குணவான் பாக்கியமுளன் பூசத்தினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் வாகன சுகமுடையவன், வழக்காட வல்லான், தாய்- தந்தையரை அன்பாய்க் காப்பாற்றுவான்.
பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூலமாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கடலில் கரிப்பு சுவையுள்ள நீர் பொங்கி வழிந்தாலும், அதை உண்ணும் நீராக மாற்ற மேகங்கள் தேவைப்படுகின்றன.
அதுபோல், ஒரு ஜாதகத்தில் பல ராஜ யோக அமைப்புகளிருந்தாலும், அந்த யோகங்களை ஜாதகர் அனுபவிக்க, சரியான தசாபுக்தி அவசியம். அவரவரின் நட்சத்திரமே, தசா புக்திகளை அமைத்துக்கொடுத்து யோகங்களை வாரி வழங்கும். கல்வி கற்கும் காலத்தில் வரும் சுக்கிர தசை, கல்வியை கெடுக்கும்.
ஆனால், இளம்வயதில் வரும் புதன் தசை கல்வியில் ஆர்வத்தை அதிகரிக்கும்.
பூசம்
பூச நட்சத்திரத்தின் சிறப்பு
சனி ஹோரையும், பூச நட்சத்திரமும், மகர லக்னமும், கூடும் நேரத்தில் பிறந்தவர்கள், நீதித் துறையில் சாதனை படைப்பார்கள்.
பூச நட்சத்திரத்தின் வலிமை
* ஆழ்ந்த அறிவு, இனிய பேச்சு, ஆன்மிக நாட்டம், நேர்மை, இரக்கம், கருணை ஆகியவையே பூச நட்சத்திரத்தின் குணாதிசயங்கள்.
* பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகக் கடுமையான பிரச்சினைகளைக்கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்து விடுவார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட உயர்ந்த நிலையை அடைந்துவிடுவார்கள் கூட்டு கிரக பலன்(பூச நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது).
* பூச நட்சத்திரத்தில், சூரியனிருக்க, எல்லாரும் விரும்பத்தக்க குணங்களை கொண்டிருப்பார்.
* செவ்வாய் அமர்ந்திருக்க, வாகனம், பயணம் தொடர்பான தொழிலில் வெற்றிபெறுவார்.
* புதன் அமர்ந்திருக்க, பெண்ணாக இருந்தால், கருப்பை தொடர்பான நோய்கள் அதிக தொல்லை தரும். ஆணாக இருந்தால், அளவில்லாத செல்வத்துடன் வாழ்வார்.
* சுக்கிரன் அமர்ந்திருக்க, பெண்ணாக இருந்தால், மருத்துவ பணிப் பெண்ணாகவோ, ஓவியராகவோ, புகழ்பெறுவார். ஆணாக இருந்தால், வெளிநாட்டு தொடர்பால் செல்வாக்குடன் வாழ்வார்.
* சனி அமர்ந்திருக்க, உறவில் பகை உண்டாகும். பார்வையில் தடுமாற்றம் வரும்.
* குரு அமர்ந்திருக்க, வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெறுவார். ஆனால், தீய பழக்கங்களுக்கு அடிமையாவார்.
* ராகு அமர்ந்திருக்க, கற்பனைத் திறன் அதிகம். காதல் தோல்வியால் பாதிக்கப்படுவார்.
* கேது அமர்ந்திருக்க, இளம்வயதில் குடும்பத்தை பிரியும் நிலை உண்டாகும்.
பூச நட்சத்திர பாத பலன்
* பூச நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. இளம் வயதிலேயே தலைமைப் பண்பைப் பெற்றிருப்பார்கள்.
* பூச நட்சத் திரத்தின் இரண்டாவது பாதம் துலா நவாம்சம். புதன் பகவானால் ஆளப்படுகிறது. நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஆடம்பரமாக வாழ விரும்புவார்கள்
* பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம், துலா நவாம்சம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், இளமையான தோற்றத்துடனும் இருப்பார்கள்.
* பூச நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம் செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர், சொல்லின் செல்வர். பேச்சாலேயே காரியங்களைச் சாதித்துக்கொள்வார்கள்.
பூச நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
நாம கரணம், சீமந்தம், உப நயனம், புதுமனை புகு விழா போன்றவை செய்யலாம்.
பூச நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை
* ஆடி மாதமும், பூச நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்கள் செய்யக் கூடாது.
* சனி (அல்லது) வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடினால், சுப காரியங்களை விலக்கவேண்டும்.
* இந்த நட்சத்திரநாளில், திருமணம் செய்யக்கூடாது.
பூச பரிகாரம்
* சனிக்கிழமை, தகழி (ஆலப்புழா- கேரளா) தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலுக்கு சென்று வழிபடுவது பூச நட்சத்திரக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
(பூச நட்சத்திரத்தின் பலன் நிறைவு பெற்றது.)