நலம் தரும் நட்சத்திரம் 15

star

 


"வாசிய துடையனாகும் வழகற்ந்துரைக்க வல்லான். 
மாசிலா மணியும் பொன்னும் மகிழ்ச்சியை அணிய வல்லான்
கூசரு கோபமுண்டாம் குலப்புகழ் தன்னைப் பேணும் 
பூசையும் உடையனாகும் பூச நாள் தோன்றினானே.''
-விரும கண்டிகை 

பொருள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர், நல்ல மதிப்புடையவர். வழக்கறிந்து வழக்காடுவார். முன்கோபம் அதிகம். குழலோசையும், யாழோசையும் தரும் இனிமையைக் காட்டிலும், மகிழ்ச்சி தரக்கூடியது மழலையின் சொல். காய்க்காத மரம்போல், மழலை செல்வமில்லாத வாழ்க்கை பாழாகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே, மணமகன் மற்றும் மணமகள் நட்சத்திரத்திற்கும்' "மகேந்திரப் பொருத்தம்' உ

 


"வாசிய துடையனாகும் வழகற்ந்துரைக்க வல்லான். 
மாசிலா மணியும் பொன்னும் மகிழ்ச்சியை அணிய வல்லான்
கூசரு கோபமுண்டாம் குலப்புகழ் தன்னைப் பேணும் 
பூசையும் உடையனாகும் பூச நாள் தோன்றினானே.''
-விரும கண்டிகை 

பொருள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர், நல்ல மதிப்புடையவர். வழக்கறிந்து வழக்காடுவார். முன்கோபம் அதிகம். குழலோசையும், யாழோசையும் தரும் இனிமையைக் காட்டிலும், மகிழ்ச்சி தரக்கூடியது மழலையின் சொல். காய்க்காத மரம்போல், மழலை செல்வமில்லாத வாழ்க்கை பாழாகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே, மணமகன் மற்றும் மணமகள் நட்சத்திரத்திற்கும்' "மகேந்திரப் பொருத்தம்' உள்ளதா என்பது பார்க்கப்படும். இந்த பொருத்தமே, புத்திர பாக்கியம் பெறுவதற்கு மிக முக்கியம். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்ற எண்கள் வந்தால், மகேந்திரப் பொருத்தம் உண்டு.

8- பூசம்

star1

பொதுவான குணம்

பிறரை மதித்து நடக்கக்கூடியவர்கள் குலதெய்வ பக்தியில் நாட்டம் கொண்டவர்கள். வைராக்கியம் மிக்கவர்கள். நண்பர்களை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள். புகழ்மிக்கவர்கள். மென்மையான மனம் படைத்தவர்கள். 

பூச நட்சத்திரம் (ஆண்)                                                 

ப் குணம்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். சிறந்த அறிஞராகவும், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார். கடுமையான பிரச்சினைகளுக்குக் கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்துவிடுவார். 

ப் குடும்பம்: பெற்றோரிட மும், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருப்பார். 

ப் கல்வி: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வமிருக்கும். இவர்கள் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அறிவை தேடும் தாகமும் கொண்டவர்கள்.

ப் தொழில்: புகழுடன் இருப்பதால், பிரபலங்களுடன் நட்பாக வும் இருப்பார். இயக்குனர், கதாநாயகன், கதாசிரியர், வழக்கறிஞர் போன்ற தொழிலில் வெற்றிபெறுவார். 

ப் திருமணப் பொருத்தம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம். 

ப் திருமண வாழ்க்கை: மிகவும் கூச்ச சுபாபம் உள்ளவர்களாக இருப்பார்கள். தங்கள் விருப்பத்தை சொல்லவும் தயங்குவார்கள். 

ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்லநிலை யிலிருக்கும். ஆனால் கேது தசை நடக்கும் காலத்தில், காச நோய், மஞ்சள் காமாலை, ஒவ்வாமை போன்ற நோய்களை எதிர்கொள்வார்கள். 

பூச நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், உணர்ச்சிகரமானவர்களாகவும், கருணையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.   குடும்பத்தின்மீது மிகுந்த பற்றிருக்கும். கடின உழைப்பாளியாக இருப்பார்கள். 

ப் குடும்பம்: குடும்பத்தை மிகவும் நேசிப் பார்கள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்கள்.

ப் திருமணப் பொருத்தம்: பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, சித்திரை. நீங்கலாக மற்ற நட்சத் திரக்காரர்களை திருமணம் செய்துகொள்ளலாம்.

ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் கேது தசையில், சுவாச பிரச்சினைகள் மற்றும் தோல் நோய் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.

star2

bala020825
இதையும் படியுங்கள்
Subscribe