"துஞ்சிய வதனத் துய்யாள் சுகத்துடன் உண்ணல் வேண்டாள்                                           
வஞ்சகம் செய்யாள் ஆசை மனத்தினில் பயமதில்லாள்                                       
தஞ்சமுண்டாக்கி 
நன்றாய்த் தலைவனைத் தலைமையாக்கும்                                                
புஞ்சொல்லாள் ஒன்றும் சொல்லாள் இவள் புனர் பூசத்தாளே.''
-மதன நூல்                                          

பொருள்: புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த பெண், உணவின்மீது விருப்பம் இல்லாதவள். வஞ்சகமில்லாதவள். தன் தலைவனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்ப வள்.

ஒரு மரத்தை தச்சர், சிற்பி, விறகு வெட்டி ஆகிய மூவரும், பார்ப்பது ஒன்றாக இருந்தாலும் நோக்கம் வேறுபடும். தச்சர் அந்த மரத்தை மேசை, நாற்கா-யாகவே நோக்குவார். சிற்பியோ அந்த மரத்தில் எந்த சிலை வடிக்க முடியும் என்று சிந்திப்பார். விறகு வெட்டியோ, பார்வையால் மரத்தை எடை போடுவார். நவ கிரகங்களில் ஒவ்வொறு கிரகத்திற்கும், மூன்று நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. ஒரே கிரகத்தின் மூன்று நட்சத்திரங்களும் மூன்று வெவ்வேறு  சிறப்பு இயல்புகளைக் கொண்டவை. நட்சத்திரங்கள், அந்த நட்சத்திர அதிபதியின் குணத்தையும் அவை அமையும் ராசியின் தன்மையையும் பிரதிப-க்கும்.

Advertisment

புனர்பூசம்  

புனர்பூச நட்சத்திரத்தின் சிறப்பு


செவ்வாய்  ஹோரையும், புனர்பூச நட்சத்திரமும், ரிஷப லக்னமும், கூடும் நேரத்தில் பிறந்தவர்கள் சாதனை படைப்பார்கள். 

Advertisment

புனர்பூச நட்சத்திரத்தின் வலிமை

* புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொறுமையாகவும், தியாக மனப்பான்மையுடனும் இருப்பார்கள்.

* ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உண்டு.

* அறிவாளிகளாக இருப்பார்கள். 

* நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள்.

புனர்பூச நட்சத்திரத்தின் பலவீனம்

* சுறுசுறுப்பு குறைவு. மந்தமான மன நிலையி-ருப்பார்கள்.

* முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்க தயங்குவார்.

கூட்டு கிரக பலன்
(புனர்பூச நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டி யது முதன்மையானது.)

* புனர்பூச நட்சத்திரத்தில் சூரியனிருக்க கல்வியில் உயர்நிலை அடைவான். புதனுடன் சேர்ந்து நின்றால், 28 வயதிற்குபிறகு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

* செவ்வாய் அமர்ந்திருக்க பெண்ணாக இருந்தால், கோபம் அதிகம். ஆணாக இருந்தால், வியாபாரத்தில் வெற்றி.

* புதன் அமர்ந்திருக்க நகைச்சுவை உணர்வு அதிகமுடையவர். 

* சுக்கிரன் அமர்ந்திருக்க தோட்டக் கலையில் ஆர்வம் அதிகமுடையவர்

* சனி அமர்ந்திருக்க, அரசு தண்டனைக்கு ஆளாவார். பங்கு சந்தையில் நஷ்டம் உண்டாகும்.

* குரு அமர்ந்திருக்க வாழும் ஊரில் புகழ்பெறுவார். ஆனால், குடும்பத்தில்  நல்ல பெயர் கிடைக்காது. ஊருக்கு உபகாரி, வீட்டுக்கு விரோதி.

* ராகு அமர்ந்திருக்க உள்ளூணர்வு அதிகம். எழுத்தாற்றல் உண்டு. புதனுடன் சேர்ந்தால் கணிதத்தில் நிபுனர்.

* கேது அமர்ந்திருக்க தொழில் செய்யுமிடத்தில் மதிப்பு குறையும்.

புனர்பூச நட்சத்திர பாத பலன்

* புனர்பூச நட்சத்திரத்தின் முதல் பாதம், மேஷ நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. அற்ப குணம் அதிகமிருக்கும். 

* புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், ரிஷப நவாம்சம் சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. சோம்பல் மிகுந்தவராக இருப்பார். தொழி-ல் ஆர்வம் குறைவு.

* புனர்பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம். புதனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் பண்டிதர் புகழ்பெற்றவர். ஆனாலும் உடல் ஆரோக்கியம் குறைவு.

* புனர்பூச நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக  நவாம்சம். சந்திரனால் ஆளப் படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், ஆராய்ச்சியில் வல்லவர். புதிய முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்.

புனர்பூச நட்சத்திரநாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

நாம கரணம், சீமந்தம், உப நயனம், புதிய ஆடை வாங்குதல், ஆரம்ப கல்வியை தொடங்குதல் போன்றவை செய்யலாம்.

புனர்பூச நட்சத்திரநாளில் செய்யக் கூடாதவை

* ஆனி மாதமும், புனர்பூச நட்சத்திரமும் கூடினால் சுப காரியங்கள் செய்யக்கூடாது.

புனர்பூச பரிகாரம்

* வியாழக்கிழமை, குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது புனர்பூச நட்சத் திரக்காரர்களுக்கு நன்மை பயக்கும்..

(புனர் பூச நட்சத்திரத்தின் விளக்கம் நிறைவு பெற்றது.)

செல்: 63819 58636